10 நிமிடத்தில் கருத்த முகம் சிவக்க உங்கள் வீட்டில் இந்த 2 பொருள் இருந்தால் போதுமே!

madhulai-peel-face
- Advertisement -

எல்லோருக்குமே தான் சிவப்பாக, அழகாக இருக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். சிவத்த தோல் உடையவர்கள் அதிகம் தன்னம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள் என்பது நம்பிக்கை. ஒரு விஷயத்தை தைரியமாக முன் வைக்க நம் மனம் மட்டும் அல்ல, நம்முடைய தோற்றம் கூட நமக்கு தன்னம்பிக்கையை கொடுக்க வேண்டும். எத்தகைய சருமமாக இருந்தாலும் உங்களுடைய கருத்துப் போன சருமம் மீண்டும் பழைய நிலையை அடைய என்ன செய்ய வேண்டும்? என்கிற ரகசியத்தை தெரிந்துக் கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

black-face

கருத்த சருமம் உடையவர்களாக இருந்தாலும் சிலருக்கு அவர்களுடைய முகம் கலையாகவும், மிகவும் மென்மையானதாக இருக்கும். ஒரு சிலருடைய உண்மை நிறம் மிகவும் கருத்து இருக்கும் ஆனால் பெரும்பாலானோருக்கு தங்களுடைய உண்மையான நிறத்தை இழந்து சுற்றுப்புற சூழல் காரணமாக கருத்துப் போய் இருக்கும். இது போன்றவர்களுக்கு எளிமையாக கிடைக்கக் கூடிய இந்த இரண்டு பொருட்களை வைத்து மீண்டும் தங்களுடைய பழைய நிறத்தை சுலபமாக அடைய செய்து விடலாம்.

- Advertisement -

நம்மை சுற்றி இருக்கும் காற்று மண்டலத்தில் கலந்திருக்கும் நச்சுப் புகைகளும், அசுத்தங்களும் நம் முகத்தில் படர்ந்து நம் சரும துளைகளுக்குள் சென்று சரும செல்களை பாதிக்க செய்கிறது. இதனால் முகம் பொலிவிழந்து இயற்கையான நிறத்தை இழந்து நிற்கும். இது தொடர்ந்து ஏற்படவே காலப்போக்கில் நம்முடைய உண்மையான நிறம் மாறி மேல் தோல் கறுத்துப் போய்விடும். இந்த சரும செல்களை தூண்டிவிட்டு மெலனின் அதிகரிக்க செய்ய நமக்கு எளிமையாக கிடைக்கக்கூடிய இந்த இரண்டு பொருட்களை இப்படி செய்ய வேண்டும்.

madhulai

முதலாவதாக மாதுளை பழம் எடுத்துக் கொள்ளுங்கள். மாதுளை பழம் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு ரத்த விருத்தி உண்டாகும். இதனால் உடலில் ஹீமோகுளோபின் அதிகரித்து நம்முடைய முகம் இயல்பாகவே மிகவும் பொலிவான தோற்றத்தை கொடுக்கும். இதனால் கருவுற்ற பெண்களுக்கு மாதுளைப்பழம் மிகுந்த நன்மைகளை செய்யக் கூடியதாக இருந்து வருகிறது. மேலும் ரத்த சோகை உள்ளவர்களும் மாதுளை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.

- Advertisement -

இந்த மாதுளை பழத்தின் தோலை நன்கு வெயிலில் காய வைத்துக் கொள்ளுங்கள். மொறுமொறு என்று ஆகும் அளவிற்கு காய வைத்து பின்னர் அதனை பொடியாக தூள் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த தூளுடன் சுத்தமான தேன் கலந்து முகத்தில் மசாஜ் செய்தால் போதும். நம்முடைய இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி சருமத்தில் புதிய செல்கள் உருவாகி நம் முகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.

face-mugam1

ஒரு டீஸ்பூன் மாதுளம் தோல் பொடியுடன், ஒரு டீஸ்பூன் சுத்தமான தேன் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். முதலில் உங்கள் முகத்தை சாதாரண தண்ணீரால் கழுவிவிட்டு பின்னர் இந்த கலவையை கைகளில் எடுத்து முகம், கழுத்து போன்ற கறுத்த பகுதிகளில் தடவி முன்னும் பின்னுமாக, மேலும் கீழுமாகப் மசாஜ் செய்ய வேண்டும். குறைந்தது 10 நிமிடம் நீங்கள் இப்படி தொடர்ந்து செய்து கொண்டே இருந்தால் போதும். உங்கள் தோலுக்கு அடியில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கி விடும். அதன் பிறகு குளிர்ந்த நீரினால் உங்கள் முகத்தை கழுவி மென்மையான காட்டன் துணியால் ஒற்றி எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு இது நீங்களா? என்று உங்களுக்கு சந்தேகம் வந்துவிடும். அந்த அளவிற்கு நல்லதொரு பொழிவை உண்டாக்கக் கூடிய அற்புத ஆற்றல் இதற்கு உண்டு, நீங்களும் வீட்டில் முயற்சி செய்து பயனடையுங்கள்.

- Advertisement -