முகத்தின் பொலிவை கெடுக்கக்கூடிய முகப்பருக்கள் நீங்க எளிமையான வீட்டு வைத்தியம்.

pimple
- Advertisement -

பொதுவாக இளம் வயது ஆண்களுக்கும், பெண்களுக்கும் முகப்பரு என்பது மிகவும் சர்வ சாதாரணமாக ஏற்படக்கூடிய ஒன்றாக இருக்கும். 13 வயதில் இருந்து இந்த முகப்பரு பிரச்சினை என்பது ஆரம்பித்து விடும். முகப்பரு பிரச்சினை ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் முகப்பருக்களை வேரோடு அழிப்பதற்கு செய்ய வேண்டிய வழிமுறைகளை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

பொதுவாக முகப்பருக்கள் உருவாவதற்கு காரணமாக ஹார்மோன் மாற்றங்களை கூறுகிறோம். அதே போல் முகத்தை சுத்தமாக பராமரிக்காத தன்மையும் இதற்கு ஒரு காரணமாகவே விளங்குகிறது. பிறகு முகத்தில் இருக்கக்கூடிய இறந்த செல்களாலும் முகப்பரு பிரச்சனைகள் ஏற்படும். அடுத்ததாக எண்ணெய் அதிகமாக சுரக்கும் முகத்திலும் முகப்பருக்கள் அதிகமாக ஏற்படும். இப்படி வரக்கூடிய முகப்பருக்களை நாம் எவ்வாறு தடுக்கலாம் என்று பார்ப்போம்.

- Advertisement -

முதலில் முகத்தில் முகப்பருக்கள் ஏற்பட்டு இருக்கும் நபர்கள் அடிக்கடி முகத்தை சுத்தமான தண்ணீரால் கழுவும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அவ்வாறு கழுவிய பிறகு துண்டை வைத்து அழுத்தி துடைப்பதற்கு பதிலாக ஒத்தி எடுக்க வேண்டும். அழுத்தி துடைத்தால் முகப்பருக்கள் மேலும் அதிகமாகவே பரவ ஆரம்பிக்கும். அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

கொழுப்பு சம்பந்தப்பட்ட பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். துரித உணவுகள் என்று சொல்லக்கூடிய உணவுகளையும் தவிர்க்க வேண்டும். இதோடு சேர்த்து சில வழிமுறைகளையும் நாம் பின்பற்ற வேண்டும்.

- Advertisement -

பொதுவாக பருக்கள் உருவாகிவிட்டால் அதை நம்முடைய விரல்களால் தொடக்கூடாது என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அதிலும் குறிப்பாக நம் நகம் அந்த பருக்களின் மீது படவே கூடாது. அவ்வாறு பட்டு விட்டால் பருக்கள் அதிகமாக வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் பருக்களை கிள்ளுவதன் மூலமாக அந்த பருக்கள் இருந்த இடத்தில் பள்ளங்கள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது.

தலையில் பொடுகு பிரச்சனை இருந்தாலும் முகத்தில் பருக்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது என்பதால் தலையை சுத்தமாக பராமரித்துக்கொள்ள வேண்டும். அது மட்டும் அல்லாமல் ஒருவர் உபயோகப்படுத்திய சீப்பு, தலையணை, துண்டு போன்றவற்றை மற்றொருவர் உபயோகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமாக பருக்களை பருக்கள் வராமல் தடுக்க முயற்சிக்க முடியும்.

- Advertisement -

அதையும் மீறி பருக்கள் வந்து விட்டால் எளிமையாக கிடைக்கக்கூடிய திருநீற்றுப்பச்சிலை என்னும் இலையை நன்றாக அரைத்து பருக்களின் மீது போடுவதன் மூலம் பருக்கள் வேறோடு நீங்கிவிடும். அதுமட்டுமல்லாமல் ஆவி பிடிப்பது மூலமாகவும் இறந்த செல்கள் அனைத்தும் நீக்கப்பட்டு பருக்கள் வராமல் தடுக்கப்படுகிறது.

இவ்வாறு ஆவி பிடிக்கும் பொழுது அதில் நாம் சிறிது வேப்பிலைகளை சேர்த்து போட்டு ஆவி பிடித்தோம் என்றால் வேப்பிலையில் இருக்கக்கூடிய அந்த கிருமி நாசினி ஆனது முகத்தில் இருக்கக்கூடிய பருக்களை வேரோடு அழித்துவிடும்.

இதையும் படிக்கலாமே: முகம் வெள்ளையாக இந்த சூப்பரான சீக்ரெட் தெரிஞ்சா இனி நீங்க பார்லர் பக்கம் போகவே மாட்டீங்க.

பருக்களால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை நீக்குவதற்கு பருக்களை வராமல் தடுத்தாலே போதும் என்ற எண்ணத்தில் முறையாக நம்முடைய முகத்தை பராமரித்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -