ஜப்பானிய பெண்களின் நீண்ட வழுவழுப்பான பட்டு போன்ற கூந்தலை நீங்களும் பெற வேண்டும்மா? அப்படியாக ரொம்ப ரிஸ்க்கெல்லாம் எடுக்க வேண்டாங்க இந்த சீக்ரெட் மட்டும் தெரிந்தால் போதும்.

- Advertisement -

ஜப்பானிய பெண்களின் தலைமுடியை போல நல்ல வழுவழுப்பாக பள பளப்பாக நீளமாக இருக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கலாம். அதை போல முடியை இயற்கையாக பெறுவது எல்லாம் ஒரு சிலருக்கு மட்டுமே சாத்தியம்.  ஜப்பானிய பெண்களுக்கு இயற்கையாகவே முடி பட்டு நூலை போலவே பளபளவென்று சைனாக முடி பார்ப்பதற்கே அவ்வளவு அழாகாக இருக்கும். இதற்கு அங்குள்ள அந்த சீதோசன நிலையும், இதோடு அவர்கள் பயன்படுத்தும் சில எண்ணெய் முறைகளும் தான் காரணம். அது என்ன வென்று இந்த அழகு குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

நீண்ட பட்டு போன்ற கூந்தலை பெற எண்ணெய் தயாரிக்கும் முறை:
இந்த எண்ணெய் தயாரிக்க முதலில் நான்கு தோலுரித்த பூண்டு பல், ஒரு சின்ன துண்டு இஞ்சி தோல் நீக்கி கழுவி வைத்துக் இரண்டையும் காய் சீவும் சீவலில் நன்றாக சீவி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்தாக அடுப்பை பற்ற வைத்து அதில் பேன் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய், ஒரு டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெயும் சேர்த்து அத்துடன் இந்த துருவிய பூண்டு, இஞ்சி விழுதையும் சேர்த்து லேசாக சூடு படுத்திக் அடுப்பை அணைத்து விடுங்கள். அதன் பிறகு இந்த எண்ணெய் சூடு ஆறியவுடன் ஒரு பவுலில் வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்போது இதில் இரண்டு ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்க்க வேண்டும். மேலும் இதில் சேர்க்கும் இந்த ஒரு எண்ணெய் தான் மிகவும் முக்கியமானது. அது அவகோடா ஆயில் தான். இது அனைத்து சூப்பர் மார்க்கெட்டிலும் கிடைக்கும். இந்த எண்ணையை இரண்டு ஸ்பூன் சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் ஒரு ஐந்து கிராம்புகளையும் போட்டு அந்த எண்ணெய் ஒரு 12 மணி நேரம் அப்படியே ஊற வைத்து விடுங்கள். இந்த எண்ணெய் பன்னிரண்டு மணி நேரம் வரை கட்டாயமாக ஊற வேண்டும் இது மிகவும் முக்கியம்.

- Advertisement -

தலைக்கு குளிக்கும் முன் இந்த எண்ணையை முடியின் வேர்க்கால்களில் படும்படி நன்றாக தடவி பத்து நிமிடம் அப்படியே மசாஜ் செய்து விட்டு விடுங்கள். அதன் பிறகு ஒரு காட்டன் துணி வைத்து உங்கள் தலைமுடியை சுற்றி கட்டி வைத்து விடுங்கள். இந்த எண்ணெய் இரண்டு மணி நேரம் வரை உங்கள் முடியின் வேர்க்கால்களில் நன்றாக ஊற வேண்டும். அதன் பிறகு சீயக்காய் அல்லது மையில்டானா ஷாம்பு போட்டு தலைக்கு குளித்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: செம்பருத்தி பூவுடன் இந்த ஒரு பொருளை மட்டும் சேர்த்து தேய்த்தால் போதும் ஒரு முடி கூட உதிரவே உதிராது. முடி உதிர்வுக்கு செலவே இல்லாத சுலபமான தீர்வு.

இந்த எண்ணெய்யை வாரம் ஒரு முறை தேய்த்து வந்தால் போதும். ஜப்பானிய பெண்களை போல நீண்ட பட்டு போன்ற கூந்தலை நீங்களும் நிச்சயமாக பெறலாம். இந்த குறிப்பு உங்களுக்கு பிடித்து இருந்தால் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -