முகத்திற்கு நல்ல நிறமூட்டி பொலிவை கொடுக்க இயற்கையான வழிமுறைகள் பல இருந்தாலும், இன்றைய அவசர காலகட்டத்தில் நாம் இதற்கெல்லாம் அழகு நிலையத்தை தான் நாடிக் கொண்டிருக்கிறோம். இப்படி சென்ற செய்து கொள்வதால் நம் நிறம் ஆனது தற்காலிகமாக அதிகரித்து இருக்கும் தவிர நிரந்தரமாக இருக்காது.
முகம் சம்பந்தமாக நாம் எதை பயன்படுத்துவதாக இருந்தாலும், நல்ல தரமானதாக இருக்க வேண்டும. அப்படி தரமானதை பயன்படுத்துவது என்றால் அது அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியதாக இருக்கும் இது எல்லோராலும் முடியாது. இந்த அழகு குறிப்பில் எல்லோரும் எளிமையாக முறையில் வீட்டிலே தயாரித்துக் கொள்ளக் கூடிய அருமையான இரவில் பயன்படுத்தக் கூடிய ஜெல்லை எப்படி தயாரிப்பது என்பதை தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.
முக அழகிற்காக பயன்படுத்தும் ஜெல் தயாரிக்கும் முறை:
இந்த ஜெல்லை தயாரிக்க நமக்கு தேவையான பொருட்கள் கற்றாழை, ரோஸ் வாட்டர், கொஞ்சம் குங்குமப்பூ. இதை செய்வதற்கு வீட்டில் இருக்கும் கற்றாழை எடுத்து பயன்படுத்துவது மிகவும் நல்லது. ஏனென்றால் இரவு முழுவதும் இது நம் முகத்தில் இருப்பதால், கெமிக்கல் கலந்த பொருட்களை பயன்படுத்தும் போது அதனால் பக்க விளைவுகள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு.
முதலில் இரண்டு கற்றாழை மடலை எடுத்து ஓரங்களில் இருக்கும் முள் போன்ற பகுதியை நீக்கி விட்டு உள்ளே இருக்கும் ஜெல்லை எடுத்து ஒரு தட்டில் வைத்து கரண்டி வைத்து மசித்து கொள்ளுங்கள். மிக்ஸியில் போட்டு அடித்தால் தண்ணீர் போல ஆகி விடும். இதை கையில் கரண்டி வைத்து குத்தி விட்டால் ஜெல் போல கிடைத்து விடும்.
இதை அப்படியே ஒரு பவுலில் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். இத்துடன் ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்துக் கொள்ளுங்கள். அத்துடன் கொஞ்சம் குங்குமப்பூவை தண்ணீரில் ஊற வைத்து அதில் ஒரு ஸ்பூனை மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள். குங்குமப்பூ இல்லாதவர்கள் பாதி கேரட்டை மிக்ஸியில் அடித்து அதன் சாறை எடுத்து அதிலிருந்து ஒரு ஸ்பூன் மட்டும் இதில் சேர்த்துக் கொள்ளலாம்.
இது மூன்றையும் நன்றாக கலந்து விட்டால் ஜெல் பதத்திற்கு கிடைத்து விடும். இதை ஒரு பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி பாட்டில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். இது முழுக்க முழுக்க இயற்கையான பொருட்களைக் கொண்டு செய்வதால் இதை ஃப்ரிட்ஜில் வைத்து தான் ஸ்டோர் செய்ய வேண்டும்.
இந்த ஜெல்லை தினமும் இரவில் படுக்கச் செல்லும் முன்பு முகத்தை சுத்தமாக அலம்பி விட்டு துணி வைத்து துடைத்த பிறகு, இதை உங்கள் முகத்தில் தேய்த்து அப்படியே விட்டு விடுங்கள். மறுநாள் காலையில் எழுந்தவுடன் நல்ல சுத்தமான தண்ணீர் கொண்டு முகத்தை கிளம்பி விடுங்கள். உங்கள் முகம் அத்தனை பிரகாசமாக பளிச்சென்று இருக்கும் அதிசயத்தை நீங்களே உணர்வீர்கள்.
இதையும் படிக்கலாமே: வெறும் கைப்பிடி ரோஜா இதழ் இருந்தா போதும் முகத்தை பளிச்சென்று பள பளப்பாக மாற்ற இப்படி ட்ரை பண்ணி பாருங்க. நல்ல பட்டு போல பிரகாசமான அழகை பெற செலவே இல்லாத ரொம்ப சுலபமான வழி.
இந்த ஜெல்லை தொடர்ந்து பயன்படுத்தி வரும் போது முக சுருக்கங்கள் நீங்குவதுடன், கருத்திட்டுகள், கண்களை சுற்றி உள்ள கருவளையம் போன்றவை எல்லாம் கூட நீங்கி விடும். அது மட்டுமின்றி இயற்கையிலே கருமையாக உள்ளவர்கள் கூட இந்த ஜெல்லை தொடர்ந்து பயன்படுத்தி வரும் போது நல்ல நிறம் கிடைக்கும். இந்த அழகு குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் இதை ட்ரை பண்ணி பாருங்க.