முகப்பரு வந்த தழும்பு கூட கண்ணுக்கு தெரியாமல் மறைந்து போக இதை விட பெஸ்ட் ரெமிடி இந்த உலகத்திலேயே இருக்காது.

veppilai-pimple
- Advertisement -

எல்லோருக்கும் தங்களுடைய முகம் அழகாக இருக்க வேண்டும் என்றுதான் ஆசை இருக்கும். ஆனால் சில பேருக்கு டீனேஜ் பருவத்தில் முகப்பரு வருவது தவிர்க்க முடியாத ஒரு விஷயம். இந்த முகப்பருவிலிருந்து தப்பிப்பதற்கு நாம் என்ன செய்வது. உணவு பழக்க வழக்கங்களில் கட்டுப்பாடு இருக்க வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். அதே சமயம் நாம் படுத்து உறங்கும் தலையணை பெட்ஷீட் இவைகளும் சுத்தமாக இருக்க வேண்டும். வெறும் கிரீம் மட்டும் பயன்படுத்துவதன் மூலமாக முகப்பரு போய்விடாது.

மேல் சொன்ன இந்த விஷயங்களிலும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். இது தவிர முகப்பருவை வரவிடாமல் தடுக்கவும், இருந்த முகப்பருக்கள் எல்லாம் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து போகவும், ஒரு இயற்கையான ரெமிடி இருக்கிறது அது என்ன என்பதை பற்றிய அழகு குறிப்பு இதோ உங்களுக்காக.

- Advertisement -

முகப்பரு நீங்க பாட்டி வைத்தியம்:
முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு கைப்பிடி அளவு வேப்பிலையை போட்டு, அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க வையுங்கள். தண்ணீர் சூடாகிய பின்பு இந்த சுடுதண்ணீரில் முகத்தை ஸ்ட்ரீம் செய்ய வேண்டும். அதாவது ஆவி பிடிக்க வேண்டும். சுடுதண்ணீர் முகத்தில் படும்போது நம் முகத்தில் இருக்கும் சின்ன சின்ன போர்ஸ் ஓபன் ஆகிவிடும். அதன் பிறகு பின் சொல்லப்படும் இந்த பேக்கை போடுங்க.

2 கொத்து வேப்பிலைகளை உருவி சுத்தமாக கழுவிக் கொள்ளுங்கள். 5 துளசி இலைகளை எடுத்து கழுவிக் கொள்ளுங்கள். இந்த இரண்டு இலைகளையும் மிக்ஸி ஜாரில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். கொஞ்சம் ரோஸ் வாட்டர் இருந்தால் இதில் ஊற்றி அறைக்கலாம். அரைத்த விழுதை தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 1/4 ஸ்பூன் மஞ்சள் பொடியை போட்டு நன்றாக கலந்து உங்களுடைய முகத்தில் ஃபேஸ் பேக்காக அப்ளை செய்து 10 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி விட வேண்டும்.

- Advertisement -

வாரம் ஒரு முறை இந்த பேக்கை போட்டு வந்தாலே முகத்தில் இருக்கும் முகப்பரு, முகப்பரு வந்த தழும்பு கரும்புள்ளிகள் எல்லாம் படிப்படியாக மறைய தொடங்கி விடும். எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாத இயற்கையான வைத்தியம் இது‌ தேவைப்படுபவர்கள் முயற்சி செய்து பாருங்கள். ஆண்கள் பெண்கள் இரண்டு பேருமே இந்த குறிப்பை பின்பற்றலாம். ஆண்கள் மஞ்சள் பொடி தேவை இல்லை என்றால் அதை மட்டும் தவிர்த்து விட்டு மத்த பொருட்களை சேர்த்து ஃபேஸ் பேக் போட்டுக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: ஒரு முறை உங்க முகத்தில் இதை தடவின உங்க முகம் ஆயிரம் வாட்ஸ் பல்பு மாதிரி பளிச்சென்று பிரகாசமா மாறிடும். இது தெரியாம பியூட்டி பார்லர்ல கொண்டு போய் இவ்வளவு செலவு பண்ணிட்டோம்ன்னு வருத்தபடூவீங்க.

முகப்பருவை அடிக்கடி தொட்டு பார்ப்பது கிள்ளுவது போன்ற தவறுகளை எப்போதும் செய்யவே கூடாது. இப்படி எல்லாம் செய்தால் முகப்பரு அதிகமாக பரவுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. முகத்தை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். கடையிலிருந்து செயற்கையாக வாங்கிய கிரீம், பவுடர் இவைகளை எல்லாம் அதிகமாக பயன்படுத்த வேண்டாம். இரவு தூங்க செல்வதற்கு முன்பு முகத்தை வெந்நீரில் கழுவி விட்டு தூங்குவது நல்லது. மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றி வந்தாலே முகத்தில் இருக்கும் பரு பிரச்சனையிலிருந்து நிரந்தரமாக வெளிவரலாம்.

- Advertisement -