முகப்பரு இருந்த இடத்தை தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது. இந்த கிரீம் போட்டா 7 நாட்களில் முகப்பரு வந்த இடத்தில் தழும்பு கூட தெரியாதுன்னா பாத்துக்கோங்க.

face16
- Advertisement -

இன்று எங்ஸ்டருக்கு பெரிய பிரச்சினையாக இருப்பது இந்த முகப்பரு. டீன் ஏஜில் முகப்பரு தொல்லையால் கட்டாயமாக ஆண்கள் பெண்கள் இரு பாலரும் கஷ்டப்பட்டு வருகிறார்கள். இந்த முகப்பருவை தடுப்பதற்கு கடைகளில் நிறைய க்ரீம், ஜெல் எல்லாம் கிடைக்கின்றது. ஆனால் செயற்கையான பொருட்களை அதிகமாக சேர்த்து செய்யக்கூடிய கிரீம் எல்லோருடைய சருமத்திற்கும் ஒத்து வருவது கிடையாது. சில பேருக்கு சரும அலர்ஜி அரிப்பு தோல் பிரச்சினைகள் வருவதற்கு கூட வாய்ப்பு உள்ளது. எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாமல் முகப்பருவில் இருக்கும் வலியையும் வீக்கத்தையும் தழும்பையும் குறைப்பதற்கு மிக சுலபமான ஒரு குறிப்பு தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இந்து குறிப்புக்கு நாம் பயன்படுத்த போகும் பொருட்கள் 3. வேப்ப எண்ணெய், tea tree essential oil, அலோ வேரா ஜெல், அவ்வளவுதான். tea tree essential oil நிறைய டிபார்ட்மென்டல் ஸ்டோரில் கிடைக்கிறது. அப்படி இல்லை என்றால் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அலோ வேரா ஜெல் வாங்கும்போது அதில் எந்த விதமான கலரும் வாசனைத் திரவியமும் இல்லாமல் பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். வேப்ப எண்ணெயையும் சுத்தமானதாக பார்த்து வாங்கிக்கொள்ளுங்கள். கடைகளில் மலிவான வேப்பெண்ணை கூட கிடைக்கின்றது. கலப்படமில்லாத சுத்தமான வேப்பெண்ணெயை பயன்படுத்தும் போது அதனுடைய முழு சத்தும் நமக்கு கிடைக்கும்.

ஒரு சிறிய கிண்ணத்தில் அலோ வேரா ஜெல் – 1 ஸ்பூன்,  tea tree essential oil – 3 சொட்டு, வேப்பெண்ணெய் – 1 ஸ்பூன், இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக போட்டு ஒரு ஸ்பூனை வைத்து நன்றாக அடித்து கலக்கினால் ஒரு ஜெல் நமக்கு கிடைத்திருக்கும். இந்த ஜெல்லை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஸ்டோர் செய்து பிரிட்ஜில் வைத்தால் இரண்டு வாரங்கள் கெட்டுப் போகாது.

- Advertisement -

இந்த ஜல்லை லேசாக உங்களுடைய விரல்களால் தொட்டு முகப்பரு இருக்கும் இடத்தில் முகப்பருக்கு மேலே வைக்க வேண்டும். 30 நிமிடங்கள் கழித்து அதன் பின்பு வெறும் தண்ணீரில் கழுவி விடலாம். நீங்கள் வீட்டிலேயே இருப்பதாக இருந்தால் இந்த க்ரீமை அப்படியே விட்டுவிடலாம். ஒன்றும் பிரச்சனை கிடையாது. தினமும் இந்த க்ரீமை முகப்பருவின் மேலே போட்டு வர உங்களுடைய முகப்பருவில் ஏற்படும் வித்தியாசத்தை நீங்களே உணர முடியும்.

இந்த பேக்கை முகப்பருக்கு மேலே போடும்போது அழுத்தி எக்காரணத்தைக் கொண்டும் மசாஜ் செய்துவிட கூடாது. அது முகப்பருவில் வலியை உண்டாக்கும். அதோடு மட்டுமல்லாமல் முகப்பருவை மற்ற இடங்களுக்கு பரவ செய்வதற்கும் வாய்ப்புகள் உள்ளது. இந்த க்ரீமை போடும் போது கட்டாயமாக வேப்பெண்ணெய் வாசம் வீச தான் செய்யும். அதற்கு எதுவுமே செய்ய முடியாது. கொஞ்சம் கஷ்டப்பட்டுதான் முகப்பரு தொல்லையில் இருந்து வெளிவர முடியும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க. நீண்டநாள் முகப்பரு தொல்லைக்கு ஒரு விடிவு காலம் பிறக்கும்.

- Advertisement -