ஏழு நாட்கள் மட்டும் உங்கள் முகத்தில் இதைத் தடவிப் பாருங்கள். நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு உங்கள் முகத்தில் இருக்கும் பள்ளங்கள் மறைந்து முகம் மிருதுவாக மாறி விடும்

face
- Advertisement -

முகம் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது. குழந்தைப் பருவத்தில் அனைவரின் சருமமும் மிகவும் அழகாகவும், மிருதுவாகவும் இருக்கும். பின்னர் குழந்தைகள் வளர ஆரம்பிக்கும் பொழுது சருமத்தின் நிறமும் அதன் மிருதுவான தன்மையும் சற்று மாற ஆரம்பிக்கும். டீன்ஏஜ் பருவம் வரும் பொழுது முகத்தில் பருக்கள் வர ஆரம்பிக்கும். இந்தப் பருக்களின் மூலம் முகத்தில் பள்ளங்களும், கருமை நிறத் திட்டுகளும் உண்டாகும். இதனால் முகத்தின் அழகு குறைய ஆரம்பிக்கும். இவ்வாறு முகத்தில் உள்ள பருக்களின் தழும்புகள் சிலருக்கு மிகவும் வருத்தத்தை கொடுக்கும். இவ்வாறு முக அழகை கெடுக்கும் பள்ளங்கள் மற்றும் கருமை திட்டுக்கள் மறைந்து முகம் மிருதுவாக மாற என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

face0

தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு – 1, எலுமிச்சைப்பழம் – 1, அரிசி மாவு – 2 ஸ்பூன், தக்காளி – 1.

- Advertisement -

செய்முறை:
முதலில் உருளைக்கிழங்கை நன்றாக கழுவி, அதன் மேல் உள்ள தோலை நீக்கி விட்டு, தேங்காய் சீவல் பயன்படுத்தி உருளைக்கிழங்கை நன்றாக துருவிக் கொள்ள வேண்டும். பின்னர் துருவிய உருளைக்கிழங்கை வடிகட்டியின் மீது வைத்து நன்றாக அழுத்தி விட்டு உருளைக்கிழங்கின் சாறை பிழிந்து எடுக்க வேண்டும்.

potato

இவ்வாறு பிழிந்து எடுத்த உருளைக்கிழங்கு சாறுடன் ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து நன்றாகக் கலந்து கொள்ள வேண்டும். பிறகு இதனுடன் இரண்டு ஸ்பூன் அரிசி மாவை சேர்த்து பேஸ்ட் பதம் வருமாறு கலந்து கொள்ள வேண்டும். அவ்வளவு தான் நமக்கு தேவையான ஃபேஸ் கிரீம் தயாராகிவிட்டது.

- Advertisement -

பயன்படுத்தும் முறை:
முதலில் ஒரு தக்காளியை இரண்டாக அறிந்து 5 நிமிடங்கள் முகத்தில் நன்றாக தேய்த்து விட்டு முகத்தை கழுவி வேண்டும். பின்னர் செய்து வைத்துள்ள கிரீமிலிருந்து சிறிதளவு கிரீமை எடுத்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் நன்றாக தேய்த்து விட்டு, பத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் அப்படியே ஊறவிட்டு பிறகு நன்றாக மசாஜ் செய்து குளிர்ந்த நீரினை கொண்டு முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஏழு நாட்கள் காலை மற்றும் மாலை இரண்டு வேளைகளும் செய்து வந்தால் முகத்தில் இருக்கும் தழும்புகள் அனைத்தும் மறைந்து முகம் மிருதுவாகவும் நல்ல பொலிவுடனும் இருக்கும்.

face-pack0

நாம் தயாரித்து வைத்துள்ள இந்த உருளைக்கிழங்கு பேஸ்டை பிரிட்ஜில் இருக்கும் ஐஸ் ட்ரேவில் ஊற்றி ஃப்ரீஸரில் வைத்து விட வேண்டும். பின்னர் மறுநாள் பிரிட்ஜில் வைத்த ட்ரேவை வெளியே எடுத்து அதிலிருந்து ஒரு துண்டு ஐஸ் கட்டியை எடுத்து முகத்தில் நன்றாகத் தேய்த்து விட்டால் ஐஸ் கட்டி கரைந்து ஃபேஸ் க்ரீம் முழுவதும் முகத்தின் அனைத்து பகுதிகளிலும் ஒட்டிக்கொள்ளும். பின்னர் 15 நிமிடம் அப்படியே ஊற வைத்து விட்டு மசாஜ் செய்து குளிர்ந்த நீரில் கழுவி விடலாம். இவ்வாறு இந்த பேஸ்டை 10 நாட்கள் வரை ஃப்ரிஜ்ஜில் வைத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -