உங்கள் முகத்தில் முகப்பரு வந்து விட்டதா? இந்த தவறை மட்டும் மறந்தும் செய்யாதீங்க. அப்புறம் முகப்பரு உங்க முகத்தை விட்டு மறையவே மறையாது.

- Advertisement -

அந்த காலத்திலிருந்து அழகு சம்பந்தப்பட்ட ஒரு பெரிய பிரச்சனை என்றால் அது முகத்தில் தோன்றும் முகப்பரு தான். அதை சரி செய்ய நிறைய வழிமுறைகள் இருந்தாலும் அவ்வளவு எளிதில் அது சரியாகி விடாது. இத்துடன் நாம் செய்யும் ஒரு சில விஷயங்களால் முகப்பருவை நீக்க, நாம் கையாளும் எந்த குறிப்பும் பலனளிக்காமல் போகக்கூடிய வாய்ப்பு அதிகம். அது என்னென்ன என்பதை பற்றி இப்போது இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

முகப்பரு தோன்றுவதற்கு முக்கியமான இரண்டு காரணங்கள் என்று சொன்னால் ஒன்று பெண்களுக்கு மாதவிடாய் சமயங்களில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் தோன்றுவது. இது அந்த நாட்களுக்கு முன் தோன்றி தானாகவே மறைந்து விடும் இது பெண்கள் அனைவருக்கும் வரக்கூடியது தான். இந்த முகப்பருவை நினைத்து பெரிதளவில் நாம் கவலைப்பட தேவையில்லை ஏனென்றால் மாத விலக்கு நின்றவுடன் இந்த முகப்பருவும் மறைந்து விடும்.

- Advertisement -

இரண்டாவது  நம் முகத்தில் எண்ணெய் பசை அதிகமாக சேருவதால் வரும் முகப்பரு. இந்த முகப்பருக்கள் தான் கொஞ்சம் சரி செய்ய கடினமானவை. ஏனென்றால் இவை நாம் எடுத்துக் கொள்ளும் உணவின் மூலம் தான் சரி செய்ய வேண்டும். அதற்கு அதிக அளவில் ஆயில் சேர்த்த உணவுகளை தவிர்க்க வேண்டும். பெரும்பாலும் நாம் ஆயில் சேர்த்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்ற உடன், எண்ணெய் பொருட்கள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும் என்று நினைத்துக் கொள்கிறோம் அதுவும் முற்றிலும் தவறு. ஆயில் தவிர்க்க வேண்டும் என்றால் அனைத்து ஆயிலும் தவிர்க்க வேண்டும் என்பது இல்லை. செக்கில் ஆட்டிய சுத்தமான எண்ணெய் நீங்கள் எந்த அளவிற்கு உணவில் சேர்த்துக் கொண்டாலும் அதனால் உங்களுக்கு எந்த கெடுதலும் வராது குறிப்பாக இந்த முகப்பருகள் வராது. இப்போதெல்லாம் அதிக அளவில் விற்பனையாகிக் கொண்டிருக்கும் இந்த ரீபைன்ட் ஆயில்களின் மூலமாக மட்டுமே இந்த ஆயில் ஸ்கின் பிரச்சனைகள் வருகிறது. இந்த ரீபைன்ட் ஆயில்களை குறைத்துக் கொண்டு உங்கள் உணவு பழக்க வழக்கங்களை சரி செய்து கொண்டாலே இந்த முகப்பரு பிரச்சனைகளில் இருந்து ஓரளவிற்கு தீர்வு கண்டுவிடலாம்.

அடுத்து இரண்டாவது இப்படி வந்த முகப்பருக்கள் நாளடைவில் சரியாகி விடுவதும் உண்டு. ஒரு சிலருக்கு அது அப்படியே குழி போல தங்கி விடுவதும் உண்டு. ஒரு சிலருக்கு பார்த்தோம் என்றால் முகப்பரு வந்த இடத்தில் கருப்பாக ஒரு அடையாளமாகவே மாறி விடும் இதுவும் நாம் செய்யும் தவறு தான். முகப்பரு வந்தவுடன் எந்த காரணத்தை கொண்டும் அதை நாம் கிள்ளி விடவே கூடாது. அதை கிள்ளி விடும் போது முகப்பரு அந்த இடத்தில் நிரந்தரமாக கறுத்த அடையாளமாக தங்கி விடும். இதை சரி செய்ய அதிக நாட்கள் எடுக்கும்.

- Advertisement -

இந்த முகப்பரு பிரச்சனையை சரி செய்ய நாம் கடைப்பிடிக்க வேண்டிய இரண்டே விஷயங்கள் தான். ஒன்று நாம் எப்போதும் முகத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அடுத்தது அடிக்கடி முகத்தை கழுவ வேண்டும். அதற்காக அத்தனை முறையும் நாம் ஃபேஸ் வாஷ், சோப்பு போன்றவை போட வேண்டிய அவசியம் இல்லை ஒரு முறை போட்டால் போதும், அதிகமாக மேக்கப் போடுபவர்கள் இரவில் அந்த மேக்கப் ரிமூவருக்கு எந்த ஒரு கெமிக்கல் கலந்த கிரீம்களையும் முகத்தில் தேய்க்காமல் தேங்காய் எண்ணெய் தேய்த்தால் போதும். இடையில் இரண்டு, மூன்று முறையாவது நல்ல குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி வந்தாலே போதும் முகத்தில் தூசு அழுக்கு இவை எல்லாம் சேர்ந்து அதனால் வரும் முகப்பருக்கள் வராது.

அடுத்தது தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும் நம் உடம்பில் தண்ணீர் சத்து குறைவாகும் போதும் இந்த முகப்பருக்கள் தோன்றும். ஆகையால் குறைந்தது ஒரு மனிதன் எந்த அளவிற்கு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது அது ஒவ்வொருவரும் உடல் நிலைக்கு ஏற்றவாறு மாறும். உங்களின் உடல் நிலைக்கு ஏற்றவாறு தண்ணீரை தாராளமாக அருந்த வேண்டும். இவை அனைத்தையும் செய்த பிறகு முகப்பரு ஒன்று, இரண்டு என்று உங்களுடைய ஹார்மோன் பிரச்சனைகளால் வந்தால் கண்டிப்பாக அதை கிள்ளி விடவே கூடாது. அதுவாகவே சரியாகி விடும்.

இதில் கூறப்பட்டிருக்கும் ஹார்மோன் பிரச்சனைகளை தவிர மற்ற காரணங்கள் ஆண்கள் பெண்கள் இருவருக்குமே சமமானவை தான் தீர்வும் சமமானவை தான். எனவே முக அழகு கெடாமல் இருக்க நாம் செய்ய வேண்டியவை எது என்பதை இந்த பதிவில் நீங்கள் தெரிந்து இருப்பீர்கள். இதை பின்பற்றி உங்கள் முகத்தில் முகப்பரு இல்ல மாசற்ற முகமாக மாற்றி முக அழகை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -