முகத்தில் எண்ணெய் வழியாமல் இருக்க, சருமம் பளபளப்பாக இருக்க இந்த புதினா ஃபேஸ் பேக் ஒன்று மட்டும் போதும்

face2
- Advertisement -

ஒரு சிலரின் முகத்தை எவ்வளவு கவனமாக பராமரித்தாலும் அவர்களின் முகம் பளிச்சென்று இருக்காது. அவர்கள் முகத்தில் போடப்படும் மேக்கப்பும் வெகு நேரத்திற்கு இருக்காமல், சில மணி நேரத்திலேயே கலைந்து விடும். இதற்கு முக்கிய காரணம் முகத்தில் எண்ணெய் வழி வதாகும். சிலருக்கு இயல்பாகவே அவர்கள் முகம் எண்ணெய் பிசுப்பு உடையதாக இருக்கும். இதனால் என்னதான் அடிக்கடி முகத்தை கழுவினாலும் அவர்கள் முகம் பொலிவுடன் இருக்காது. ஆகவே அவர்களால் வெளியில் எங்கு சென்றாலும் பிரஷ்ஷாக இருப்பது போல் உணர முடியாது. இவ்வாறு எண்ணெய் வழியும் பிரச்சனைக்கு, மட்டுமல்லாமல் முகத்தில் இருக்கும் கருமை, கருவளையம், முக சுருக்கம், முகப்பரு மற்றும் கருப்பு திட்டுகள் இவை அனைத்தும் குணமாகும் இந்த புதினா ஃபேஸ் ஒன்று மட்டும் போதும். இதனை ஒருமுறை பயன்படுத்திப்பாருங்கள், இதன் அசத்தலான ரிசல்டை நீங்களே கண்கூடாக தெரிந்து கொள்வீர்கள். வாருங்கள் இதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

முகம் பளபளப்பாக தேவையான பொருட்கள்:
வெள்ளரிக்காய் – 1/2, தேன் – ஒரு ஸ்பூன், புதினா இலைகள் – ஒரு கைப்பிடி.

- Advertisement -

செய்முறை – 1:
முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் பாதி அளவு வெள்ளரிக்காயை பொடியாக நறுக்கி சேர்க்க வேண்டும். பின்னர் ஒரு கைப்பிடி புதினா தழைகளை தண்ணீரில் சுத்தமாக அலசி, அதனையும் மிக்ஸி ஜாரில் சேர்க்க வேண்டும். பின்னர் இறுதியாக ஒரு ஸ்பூன் தேனையும் சேர்த்து இவை மூன்றையும் பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் இந்த விழுதை ஒரு கிண்ணத்தில் மாற்றி, அதனை ஃப்ரிட்ஜில் வைத்து பத்து நிமிடத்திற்கு அப்படியே விட்டு விட வேண்டும். பத்து நிமிடம் கழித்து ஃபேஸ் பேக்கை எடுத்து முகம் மற்றும் கழுத்து பகுதி நன்றாக அப்ளை செய்து, 20 நிமிடத்திற்கு உலர விட வேண்டும். அதன் பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு இரண்டு முறை தொடர்ந்து செய்து வர முகத்தில் வழியும் எண்ணெய் பிசுபிசுப்பு மறைந்து முகம் பளிச்சென்று இருக்கும்.

- Advertisement -

செய்முறை – 2:
ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு கைப்பிடி புதினா இலைகளை சுத்தமாக அலசி சேர்க்க வேண்டும். பிறகு இதனுடன் ஒரு வாழைப்பழத்தை பொடியாக நறுக்கி சேர்க்க வேண்டும். அதன் பின்னர் இவற்றுடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை பழச் சாறையும் சேர்த்து அனைத்தையும் பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இந்த விழுதை ஒரு கிண்ணத்தில் மாற்றி கொண்டு அதனை முகம் மற்றும் கழுத்துப் பகுதி முழுவதும் அப்ளை செய்ய வேண்டும். இவ்வாறு அப்ளை செய்த பின்னர் ஒரு மணி நேரத்திற்கு அப்படியே விட்டு விட வேண்டும். அதன் பிறகு முகத்தை குளிர்ந்த நீரினால் சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு புதினா இலைகள் பயன்படுத்தி செய்யப்படும் இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு இரண்டு, மூன்று முறை பயன்படுத்தி வர நீங்கள் எதிர்பாராத அளவிற்கு அற்புதமான ரிசல்ட் கிடைக்கும்.

- Advertisement -