முள்ளங்கியில் இப்படி ஒரு சட்னியா? சத்தியமா நம்ப மாட்டீங்க. நீங்க ஒரு முறை சமைத்து ருசித்து பாருங்க. சான்சே இல்ல, செம டேஸ்ல இருக்கும்.

chutney
- Advertisement -

இந்த ரெசிபியை முள்ளங்கி சட்னி அல்லது முள்ளங்கி பச்சடி எப்படி வேண்டும் என்றாலும் சொல்லலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் இந்த சட்னியை வெள்ளை சுடு சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடலாம். இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிடலாம். தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொள்ளலாம். முற்றிலும் வித்தியாசமாக முள்ளங்கியை வைத்து ஒரு ரெசிபி செய்ய வேண்டுமென்றால் இப்படி செஞ்சு பாருங்க. நேரத்தைக் கடத்தாமல் இன்ட்ரஸ்டிங்கான இந்த ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோமா.

முதலில் 2 மீடியம் சைஸ் அளவு முள்ளங்கியை தோல் சீவி சிறிய துண்டுகளாக வெட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அதன் பின்பு அடுப்பில் ஒரு கடாயை வைத்து நல்லெண்ணெய் 1 ஸ்பூன் ஊற்றி, வரமிளகாய் – 10, வரமல்லி – 1 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், போட்டு வாசம் வரும் வரை வறுத்து இதை நன்றாக ஆற வைத்து, மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். மிக்சி ஜாரிலேயே இந்த பொடி இருக்கட்டும்.

அடுத்தபடியாக அதே கடாயில் 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, நறுக்கி வைத்திருக்கும் முள்ளங்கிகளைப் போட்டு 3 நிமிடம் வதக்க வேண்டும். முள்ளங்கியின் நிறம் லைட் பிரவுன் கலர் வந்த பிறகு, சின்ன வெங்காயம் தோலுரித்து – 15 பல், பூண்டு தோல் உரித்தது – 8 பல், இஞ்சி தோல் சீவியது – 1 இன்ச், கருவேப்பிலை – 2 கொத்து, கொத்தமல்லித்தழை – 1 கைப்பிடி அளவு, இந்த பொருட்களை எல்லாம் போட்டு 2 நிமிடம் போல வதக்கி, சிறிய நெல்லிக்காய் அளவு – புளி போட்டு, தேவையான அளவு உப்பு போட்டு, 2 நிமிடம் போல மீண்டும் வதக்கி அடுப்பை அணைத்து விட்டு, இதை நன்றாக ஆற வைத்து விடவேண்டும்.

- Advertisement -

முள்ளங்கியோடு சேர்த்து வதக்கிய இந்த பொருட்களை எல்லாம் நன்றாக ஆறிய பின்பு, ஏற்கனவே மிக்ஸியில் மிளகாய் மசாலா அரைத்து வைத்திருக்கின்றோம் அல்லவா, அதோடு சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் துவையல் போல அரைத்து இதை தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.

ஒரு தாளிப்பு கரண்டியில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய், கடுகு, கருவேப்பிலை, பெருங்காயம், வர மிளகாய் தாளித்து இதை அப்படியே துவையலில் ஊற்றி கலந்து பரிமாறுங்கள். காரசாரமான சூப்பரான முள்ளங்கி துவையல் தயார். இந்தத் துவையலை முள்ளங்கியில் தான் செய்தீர்கள் என்று சொன்னால் கூட யாரும் நிச்சயம் நம்ப மாட்டாங்க. மிஸ் பண்ணாதீங்க ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -