பத்து நாட்களில் சினிமா ஸ்டார் போல மாற வேண்டுமா? ஊரே உங்கள் அழகை திரும்பி பார்க்க முல்தானி மெட்டியை முகத்தில் இப்படி போட்டுக்கோங்க.

face5
- Advertisement -

இன்றைக்கான அழகு குறிப்பு முல்தானி மெட்டியை வைத்து தான். உங்களுடைய சருமத்திற்கு ஏற்ப முல்தானி மெட்டியை எப்படி எல்லாம் பயன்படுத்தினால் அழகை மேம்படுத்திக் கொள்ளலாம் என்பதை பற்றிய சில அழகு குறிப்புகளை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்தக் குறிப்பில் மூன்று விதமான அழகு குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு இதில் எது தேவையோ அதை பயன்படுத்தி பாருங்கள். ரிசல்ட்டை ஒரே மாதத்தில் கண்கூடாக கண்ணாடி முன்பு பார்க்கலாம். அழகுக்கு மேலும் அழகு சேர்க்கும் முல்தானி மெட்டி அழகு குறிப்புகள் இதோ உங்களுக்காக இந்த பதிவில்.

ஆயில் ஸ்கின் உள்ளவர்கள்:
ஒரு சிறிய கிண்ணத்தில் முல்தானி மெட்டி 1 ஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு 1 ஸ்பூன், ரோஸ் வாட்டர் தேவையான அளவு ஊற்றி நன்றாக இதை கலந்து கொள்ளவும். ஒரு ஃபேஸ் பேக் நமக்கு கிடைக்கும். இதை முகத்தில் அப்ளை செய்து கொள்ளவும். 20 நிமிடங்கள் கழித்து ஜென்டலாக மசாஜ் செய்து, முகத்தை கழுவினால், உங்கள் முகத்தில் இருக்கும் எண்ணெய் வடியக்கூடிய பிரச்சனை படிப்படியாக குறைந்து விடும். வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த அழகு குறிப்பு பயன்படுத்துங்கள்.

- Advertisement -

ரொம்பவும் டிரை ஸ்கின் உள்ளவர்கள்:
ஒரு சிறிய கிண்ணத்தில் முல்தானி மெட்டி 1 ஸ்பூன், பாதாம் பவுடர் 1 ஸ்பூன், போட்டு இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். இதில் காய்ச்சிய பாலை ஊற்றி ஃபேஸ் பேக்காக தயார் செய்து கொள்ளவும். முகத்தை சுத்தமாக கழுவி விட்டு, இந்த பேக்கை போட்டு 20 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடுங்கள். பிறகு உங்கள் முகத்தில் இருக்கும் பேக் டிரையாகிவிடும் அல்லவா.

கொஞ்சமாக பாலை தொட்டு உங்களுடைய முகத்தில் இருக்கும் பேக்கை ஈரம் செய்து விட்டு, வட்ட வடிவில் மசாஜ் செய்து கழுவினால் உங்கள் டிரை ஸ்கின் ஈரத்தன்மையோடு இருக்கும். வாரத்தில் மூன்று நாட்கள் தாராளமாக நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம்.

- Advertisement -

முகப்பரு உள்ள சருமத்தை கொண்டவர்கள்:
ஒரு சிறிய கிண்ணத்தில் முல்தானி மெட்டி 1 ஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் 1/4 ஸ்பூன், தேன், இந்த மூன்று பொருட்களையும் போட்டு கலக்க வேண்டும். இதை ஃபேஸ் பேக்காக தயார் செய்த பின்பு முகத்தை நன்றாக கழுவி விட்டு, முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். ஆனால் நீங்கள் எக்காரணத்தை கொண்டும் மசாஜ் செய்யக்கூடாது. முகப்பரு உள்ளவர்கள் அந்த இடத்தில் ஜென்டில் ஆக இந்த பேக்கை போட்டுவிட்டு, 20 நிமிடம் கழித்து முகத்தை ஈரம் செய்து கழுவி விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: காஃபி பவுடர் காபி போட மட்டும் இல்லை முகம் வெள்ளை வெளேரென வெள்ளைக்காரங்க மாதிரியும் மாற்றுமாம் தெரியுமா?

கழுவிய பிறகு கூட துண்டை வைத்து அழுத்தம் கொடுத்து துடைத்து எடுக்கக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. வாரத்தில் மூன்று நாட்கள் இந்த பேக்கை போட்டு வந்தால் முகப்பரு குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுடைய முகத்தில் முகப்பரு வந்து போன தழும்பு இருந்தாலும், இந்த பேக்கை தொடர்ந்து போட்டு வாருங்கள். அந்த தழும்பின் அடையாளம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து விடும். மேலே சொன்ன எந்த குறிப்பை பயன்படுத்தி ஃபேஸ் பேக் போட்டாலும் சோப்பு போட்டு கழுவாதீங்க, வெறும் தண்ணீரில் கழுவிய பிறகு 5 – 6 மணி நேரத்திற்கு அப்படியே விட்டு விடுங்கள். பிறகு தேவை என்றால் சோப்பு அல்லது ஃபேஸ் வாஷ் போட்டு கழுவிக்கொள்ளலாம்.

- Advertisement -