காஃபி பவுடர் காபி போட மட்டும் இல்லை முகம் வெள்ளை வெளேரென வெள்ளைக்காரங்க மாதிரியும் மாற்றுமாம் தெரியுமா?

white-skin-coffee-powder
- Advertisement -

காலையில் எழுந்ததும் முதலில் காபி அல்லது டீ பருகுவது தான் நம் வாடிக்கையாக இருக்கிறது. காபி குடித்தால் தான் அன்றைய நாள் முழுவதும் உற்சாகமாக இருப்பது போல ஒரு உணர்வு நமக்குள் ஊறிப் போய்விட்டது. இப்படிப்பட்ட இந்த காபி பவுடரில் நம் முகத்தை வெள்ளை வெளேர் என வெள்ளைக்காரங்க மாதிரி ஜொலிக்க செய்யக் கூடிய தன்மையும் இருக்கிறதாம். அந்த வகையில் காபி பவுடரை வைத்து நாம் செய்ய இருக்கும் அழகு குறிப்பு ரகசியம் என்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

சாதாரண காபி பவுடரில் ஏராளமான சத்துக்கள் நிரம்பியுள்ளன. இதில் இருக்கக் கூடிய சத்துக்கள் நம் சரும ஆரோக்கியத்திற்கு ரொம்பவும் முக்கியமானதாக இருக்கிறது. இது முகத்தை சீக்கிரம் முதிர்ச்சி அடைவதில் இருந்து தடுத்து பாதுகாப்பாக, ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். மேலும் கருவளையங்களை போக்கி, முக கருமையை நீக்கி முகத்தை ரொம்பவும் பொலிவாக வைத்துக் கொள்ள உதவும்.

- Advertisement -

இன்ஸ்டன்ட் ஆக நீங்கள் எங்காவது வெளியே செல்லும் பொழுது இந்த ஒரு பேக் போட்டு சென்றால் ஃபேசியல் செய்தது போல நல்ல ஒரு பொலிவு மற்றும் க்ளோ கிடைக்கும். இதற்கு முதலில் ஒரு சிறிய அளவிலான பவுலில் ஒரு ஸ்பூன் காபி பவுடரை எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் ரெண்டு டீஸ்பூன் அளவிற்கு எலுமிச்சை சாறை சேர்த்துக் கொள்ளுங்கள். எலுமிச்சையில் இருக்கக் கூடிய அமிலம் முகத்தில் இருக்கக் கூடிய அழுக்குகளை நீக்கி, இறந்த செல்களை வெளியேற்றி புதிய செல்களை புதுப்பிக்கக்கூடிய தன்மை கொண்டுள்ளது.

பின்னர் இவற்றுடன் அரை ஸ்பூன் அளவிற்கு சுத்தமான மஞ்சள் சேர்த்துக் கொள்ளுங்கள். மஞ்சள் ஒரு சிறந்த கிருமி நாசினி மற்றும் முகப்பொலிவை அதிகரித்து சுருக்கங்களை நீக்குவதற்கான ஒரு அற்புதமான மூலிகையாகவும் செயல்படுகிறது. இந்த மூன்று பொருட்களையும் நன்கு கலந்து பேஸ்ட் போல செய்து கொள்ள வேண்டும். பின்பு இதை முகத்தில் மென்மையாக தடவி பத்து நிமிடம் மசாஜ் செய்து அப்படியே உலர விட்டு விட வேண்டும்.

- Advertisement -

மசாஜ் செய்யும் பொழுது நம் முகத்தில் இருக்கக் கூடிய நுண்ணிய திட்டுக்கள் மற்றும் புள்ளிகளை வேரோடு அகற்றும். ஒரு பத்தில் இருந்து பதினைந்து நிமிடம் நன்கு உலர்ந்த பின்பு குளிர்ந்த நீரினால் முகத்தை கழுவிக் கொள்ளுங்கள். அவ்வளவுதான், ரொம்பவே எஃபக்டிவ் ஆன இந்த ஒரு பேக் இன்ஸ்டன்ட் க்ளோவை கொடுக்கும். வாரம் ரெண்டிலிருந்து மூன்று முறை இந்த பேக்கை தாராளமாக நீங்கள் போட்டுக் கொள்ளலாம். சரும ஆரோக்கியத்திற்கு, முகப்பொலிவிற்கு இதை விட சிறந்த பேக் இருக்க முடியாது.

இதையும் படிக்கலாமே:
பின்னல் கூட போட முடியாத மெல்லிய முடியை பெரிய கொண்டை போடும் அளவிற்கு தடிமனாக வளர்க்க தலைக்கு குளிக்கும் முன் இதை தேய்க்க மறக்காதீர்கள்.

இந்த பேக் வீட்டிலேயே செய்து கொள்ள ரொம்ப ரொம்ப சுலபமாக இருப்பதால் அனைவருமே பயன்படுத்தலாம். ஆண், பெண் வித்தியாசம் இன்றி இந்த பேக் போடுவதால் கிடைக்கக் கூடிய நன்மைகளை அனுபவிக்கலாம். முகப்பருவை விரட்டி அடிக்க கூடிய தன்மையும் இதற்கு உண்டு. முகப்பரு அதிகமாக இருப்பவர்கள் இந்த பேக்கை போட்டால் சீக்கிரம் முகப்பருக்களில் இருந்து விடுதலை கிடைக்கும். கண்ணுக்கு கீழ் இருக்கும் கருவளையத்திலும் இதை அப்ளை செய்து விரைவிலேயே கருவளையத்தை விரட்டி அடிக்கலாம்.

- Advertisement -