- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilமுகத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவும் இந்த பொடியை தலைக்கு பயன்படுத்தினால் தலைமுடி உதிர்விலிருந்து நம்மால் தப்பிக்க...

முகத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவும் இந்த பொடியை தலைக்கு பயன்படுத்தினால் தலைமுடி உதிர்விலிருந்து நம்மால் தப்பிக்க முடியும்.

- Advertisement -

ஒருவர் அழகாகவும், இளமையாகவும் இருக்கிறார் என்ற தோற்றத்தை பிரதிபலிக்கக் கூடியது முகமும், தலைமுடியும் தான். ஒருவருடைய முகம் இளமையாக இருந்து தலைமுடி நன்றாக இல்லை என்றாலும், தலைமுடி நன்றாக இருந்து முகம் பொலிவில்லாமல் இருந்தாலும் அவர்கள் அழகாக இருக்கிறார்கள் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். அப்படி நாம் முகத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காக பயன்படுத்தப்படும் ஒரு பொருளை நம் தலைமுடிக்கும் பயன்படுத்தினோம் என்றால் இரண்டுமே மிகவும் அழகாகவும், இளமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். அந்த பொடி என்ன என்றும் அதை எப்படி தலைக்கு உபயோகப்படுத்த வேண்டும் என்றும் தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.

முகம் அழகாக இருப்பதற்காக முகத்திற்கு நாம் பல பூச்சுகளை உபயோகப்படுத்துவோம். பல பொருட்களை கலந்து உபயோகப்படுத்துவோம். அவ்வாறு உபயோகப்படுத்தப்படும் பொருட்களில் மிகவும் முக்கியமாக கருதப்படுவது தான் முல்தானி மட்டி.

- Advertisement -

இது ஒருவகையான மண் வகையை சேர்ந்தது என்று கூறப்படுகிறது. இதை நாம் முகத்திற்கு உபயோகப்படுத்தினோம் என்றால் அதனால் பொலிவிழந்த முகம் மிகவும் இளமையாகவும், அழகாகவும் தோன்றும். மேலும் இதனால் முகத்தில் இருக்கக்கூடிய கருமைகள் நீங்கி முகம் வெண்மை அடையும்.

நம் முகத்தில் பல அற்புதங்களை செய்யக்கூடிய இந்த முல்தானி மட்டியை நம் தலைக்கும் பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. இவ்வாறு நாம் நம் தலைக்கு பயன்படுத்தும் பொழுது நம் தலை முடி உதிர்வை இது தடுக்கிறது. மேலும் புதிய முடி வளர்வதற்கு காரணமாகவும் அமைகிறது. அதனால் நம் தலைமுடி அடர்த்தியாகவும், நீளமாகவும் வளரும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

முல்தானி மட்டி ஹேர் பேக் எப்படி செய்வது என்று பார்ப்போம். இதற்கு நாம் ஒரு பவுலை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் நம் முடியின் அளவிற்கு ஏற்றார் போல் முல்தானி மட்டி பொடியை எடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு நான்கு ஸ்பூன் முல்தானி மட்டி பொடியை எடுத்துக் கொள்கிறோம் என்றால் அதில் இரண்டு ஸ்பூன் அளவு கற்றாழை ஜெல்லை சேர்க்க வேண்டும். நம் வீட்டிலேயே இருக்கும் கற்றாழையாக இருந்தால் அதை இன்னும் கொஞ்சம் அதிகமாக கூட சேர்த்துக் கொள்ளலாம். அடுத்ததாக இதனுடன் நாம் பாதி எலுமிச்சம் பழச்சாறை சேர்க்க வேண்டும்.

இப்பொழுது இதை நாம் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். நம்முடைய தலைமுடியின் வேர்க்கால்களில் படும் அளவிற்கு நன்றாக தடவ வேண்டும். முடி முழுவதும் தடவ வேண்டும் என்ற அவசியம் இல்லை. அரை மணி நேரம் கழித்து மைல்டான ஷாம்பூ அல்லது சிவக்காயை பயன்படுத்தி தலை முடியை அலசி விடலாம். இவ்வாறு நாம் வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தினால் முடியின் ஆரோக்கியம் மேம்படும். தலைமுடி நீளமாகவும், அடர்த்தியாகவும் வளரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: ஒரே இரவில் கண் கருவளையம் நீங்கி கண்கள் பளப்பளப்பாக மாறி பிரகாசமாக மின்ன பாதாம் பவுடருடன் இதையும் சேர்த்து பேக் போட்டால் போதும்.

முல்தானி மட்டியை உபயோகப்படுத்தி நம் முகத்தை என்றும் இளமையாக வைத்திருப்பது போலவே நம் தலை முடியை ஆரோக்கியமாக வைத்திருப்போம்.

சற்று முன்