இட்லி தோசை மாவு உங்க வீட்ல இல்லையா? கவலைய விடுங்க! சூப்பரான, சுவையான, சுலபமான, ஆரோக்கியமான இந்த தோசையை 5 நிமிடத்தில் சுட்டு விடலாமே.

multigrain-dosa

இட்லி தோசை மாவு இல்லை என்றாலும் இனி கஷ்டப்பட தேவையில்லை. கடைக்குச் சென்று இட்லி மாவு தான் வாங்க வேண்டும் என்று எந்த அவசியமும் தேவையில்லை. உப்புமா செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்கள் வீட்டில் அடுத்த நாள் காலை என்ன உணவு செய்யலாம் என்று யோசித்தால், முதல் நாள் இரவே இந்த பொருட்களை எல்லாம் இந்த அளவுகளில் ஊற வைத்துவிடுங்கள். மறுநாள் காலை மிக்ஸியில் போட்டு அரைத்து உடனடியாக ஐந்தே நிமிடத்தில் இந்த தோசை  ஊற்றலாம்.

pasi-paruppu

மல்டி க்ரைன் தோசை செய்ய தேவையான பொருட்கள்:
அரிசி – 1 கப், பச்சை பயறு – 1/4 கப், கடலைப்பருப்பு – 1/4 கப், உளுத்தம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், பாசிப் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன், இந்தப் பொருட்களையெல்லாம் ஒரு பவுலில் போட்டு நல்ல தண்ணீரை ஊற்றி மூடி போட்டு 6 லிருந்து 8 மணி நேரம் ஊற விட வேண்டும். (இட்லி அரிசி, சாப்பாட்டு அரிசி, பச்சரிசி எந்த அரிசியை வேண்டுமென்றாலும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.)

இரவு இந்த தோசை வேண்டும் என்றால் 6 மணி நேரத்திற்கு முன்பாக ஊற வைத்துக் கொள்ளலாம். மறுநாள் காலை இந்த தோசையை செய்ய வேண்டுமென்றால், இரவே நீங்கள் தூங்க செல்வதற்கு முன்பாக, இந்த பொருட்களை எல்லாம் ஊறவைத்துக் கொள்ளுங்கள். (ஊற வைப்பதற்கு முன்பு 3 முறை கழுவி விட்டு அதன் பின்பு ஊற வைத்துக் கொள்ளுங்கள்.)

மறுநாள் காலை, இந்த தண்ணீரை வடித்து விட்டு, மற்ற பொருட்களை எல்லாம் மிக்ஸி ஜாரில் போடவேண்டும். இதோடு பச்சை மிளகாய் – 2, இஞ்சி – சிறிய துண்டு, பூண்டு – 4 பல், சீரகம் சோம்பு இரண்டும் சேர்த்து 1 ஸ்பூன், தேவையான அளவு உப்பு, போட்டு மிக்ஸி ஜாரில் தோசை மாவு பதத்திற்கு அரைத்து ஒரு பௌலில் மாற்றிக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

கொஞ்சம் புளிப்பு சுவை தேவை என்பவர்கள், இதில் 2 ஸ்பூன் புளித்த தயிரை போட்டுக்கொள்ளலாம். ஆனால் தயிர் அவசியம் இல்லை. இந்த மாவை தோசை மாவு பதத்திற்கு கரைத்து தோசை கல்லில், சாதாரண மாவு தோசை வார்ப்பது போல மொறுமொறுவென்று வாத்து நெய் அல்லது எண்ணெயை ஊற்றி சிவக்க வைத்து, தேங்காய் சட்னி அல்லது உங்களுக்கு பிடித்த சைடிஷோடு பரிமாறிக் கொள்ளலாம். மாவை மொழுமொழுவென்று மைய அரைத்து விடாதீர்கள். சிறிய ரவை பதம் அளவிற்கு அரைத்துக் கொள்ளுங்கள். தோசை இன்னும் மொறு மொறுப்பாக வரும்.

dosa

சாதாரணமாக செய்யும் அரிசி தோசையை விட, இதில் ஊட்டச்சத்தும் புரதச்சத்தும் அதிகம் உள்ளது. வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் தாராளமாக இந்த தோசையை கொடுக்கலாம். உங்கள் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள். ஆரோக்கியம் தரும் சுலபமான உணவுகளில் இதுவும் ஒன்று.

இதையும் படிக்கலாமே
எப்போதும் இளமையாக இருக்கவும், நோயில்லா வாழ்வும் கிடைக்க தன்வந்திரி சித்தரின் இந்த மந்திரத்தை 108 முறை இப்படி உச்சரியுங்கள்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.