எப்போதும் இளமையாக இருக்கவும், நோயில்லா வாழ்வும் கிடைக்க தன்வந்திரி சித்தரின் இந்த மந்திரத்தை 108 முறை இப்படி உச்சரியுங்கள்!

dhanvantari-siddhar-mooligai
- Advertisement -

எல்லோருக்குமே நோயில்லாமல் வாழ வேண்டும் என்கிற ஆசை உண்டு. அது மட்டுமல்லாமல் எப்பொழுதும் நாம் இளமையாக காட்டிக் கொள்ள தான் விரும்புவோம். எவ்வளவு வயதானாலும் நமக்கு நாம் எப்பொழுதுமே இளமையாக இருக்கிறோம் என்கிற நினைப்பு தான் மனதிற்குள் இருக்கும். இளமையாக வாழ பல்வேறு விஞ்ஞானிகள் என்னவெல்லாமோ கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எதுவும் அவர்களுக்கு பலன் கொடுக்கவில்லை.

dhanvantari-siddhar

இவ்வளவு நவீன காலத்திலும் செய்ய முடியாத ஒன்றை அந்த காலத்தில் சித்தர்கள் செய்து காட்டி சாதித்துள்ளனர் என்று கேட்கும் பொழுதே நமக்கு வியப்பாக இருக்கும். கடுமையான தவத்தால் ஈடில்லா சக்திகளை சித்தர்கள் பெற்று, இன்றும் பூமியில் வாழ்ந்து கொண்டிருப்பதாக பல்வேறு தரப்பினர் நம்பிக் கொண்டிருக்கின்றனர். அந்தவகையில் தன்வந்திரி சித்தர் நோயில்லாத வாழ்வை அருள்பவர். இவரின் அருள் பெற இந்த மந்திரத்தை எப்படி உச்சரிக்க வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படித்து வாருங்கள்.

- Advertisement -

வைத்தீஸ்வரன் கோவிலில் பலகாலம் தவம் புரிந்து அங்கேயே ஜீவ சமாதி அடைந்தவர் தன்வந்திரி சித்தர் ஆவார். இன்றும் அக்கோவிலை சுற்றி சித்தரின் ஆன்மா உலாவிக் கொண்டிருப்பதாக அங்குள்ள மக்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனர். இவரின் அருளைப் பெறுவதற்கு இவருடைய இந்த மந்திரத்தை அமைதியான ஒரு இடத்தில் அமர்ந்து 108 முறை உச்சரிக்க வேண்டும்.

Thiyanam

ஒரு சிறு குண்டூசி சத்தம் கூட கேட்காத ஒரு இடத்தில் அமைதியாக தியான நிலையில் அமர வேண்டும். தியானத்திற்கு உரிய ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்து கொள்ள வேண்டும். தன்வந்திரி சித்தர் உடைய புகைப்படத்தை வைத்து, அவருக்கு முன்னால் அகல் தீபம் ஒன்றை வைத்து, அதனுள் எண்ணெய் ஊற்றி, பஞ்சு திரி இட்டு தீபம் ஏற்றிக்கொள்ள வேண்டும். பின்னர் தன்வந்திரி சித்தரை மனதில் நிறுத்திக் கொண்டு கீழ்வரும் இந்த மந்திரத்தை தொடர்ந்து 108 முறை உச்சரிக்க வேண்டும்.

- Advertisement -

தன்வந்திரி சித்தர் மந்திரம்:
ஓம் தன்வந்திரி திருவடிகள் போற்றி!

dhanvantari-siddhar1

நீங்கள் ஒவ்வொரு முறை இந்த மந்திரத்தை உச்சரிக்கும் பொழுதும் அதன் அதிர்வலைகள் சித்தருடைய அருளை உங்களுக்கு கிடைக்க செய்யும். தன்வந்திரி சித்தர் மட்டுமல்ல, எந்த ஒரு சித்தரின் அருள் பெறவும் இதுபோல நாம் அமைதியான முறையில் தியானம் செய்வது பலன் தரும். சித்தர்களை நினைத்து தியானம் செய்யும் பொழுது இயல்பாகவே மனம் ஒரு நிலை பட்டுவிடும். இது மிகப்பெரும் அதிசயங்களில் ஒன்றாக இருக்கிறது.

- Advertisement -

siddhar-jeeva-samathi

தன்வந்திரி சித்தர் புனர்பூசம் நட்சத்திரத்திற்கு உரியவர். சுமார் 800 ஆண்டுகள் 32 நாட்கள் வரை இவருடைய ஆயுட்காலம் உள்ளது. பலநூறு சீடர்களை பெற்ற இவர் நந்தியை குருவாகக் கொண்டவர். இந்திய விஞ்ஞானத்தின் தந்தையாக இருந்த தன்வந்திரி சித்தர் ஆயுர்வேத மருத்துவத்தை மக்களுக்கு அளித்தவர். கர்ம வினைகளின் படி ஒரு மனிதனுக்கு ஏற்படும் நோய் நொடிகள் தீர தன்வந்திரியை வழிபடலாம்.

olai-chuvadi

இவர் எழுதிய பல்வேறு நூல்களில் தன்வந்திரி வைத்திய சிந்தாமணி 1200, தன்வந்திரி தண்டகம் 140, தன்வந்திரி நிகண்டு 300 ஆகிய நூல்கள் பிரசித்தி பெற்றவை. இவருடைய நூல்களில் இருக்கும் மருத்துவ குறிப்புகள் மனிதனுடைய ஆயுளை நீட்டிக்க வல்லது. இவருடைய அருளைப் பெற்று அனைவரும் நலம் பெறுவோம்.

இதையும் படிக்கலாமே
அடுத்த வருடமே சொந்த வீடு வாங்க உங்களுக்கும் ஆசையா? புதிய செங்கல் வாங்கி இப்படி வழிபாடு செய்தால் போதுமே!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -