சாக்பீஸ் இருந்தால் இவ்வளவு விஷயங்கள் செய்யலாமா? சாக்பீஸ் கொண்டு செய்யப்படும் 5 அட்டகாசமான வீட்டு குறிப்புகள்!

chalk3
- Advertisement -

கால்சியம் கார்பனேட் என்னும் அயனி உப்பு கொண்டு செய்யப்படும் இந்த சாக்பீஸ் பொதுவாக நம் சிறுவயதில் பாடம் சொல்லிக் கொடுக்க வாத்தியார்கள் பயன்படுத்தும் ஒரு பொருளாகவே பார்த்துக் கொண்டிருந்தோம். அதன் பிறகு அதை நாம் பலகையில் எழுத பயன்படுத்த ஆரம்பித்தோம். இன்றும் கூட பள்ளிக்கூடம் போகாத சிறு குழந்தைகளுக்கு பலகை ஒன்றை வாங்கிக் கொடுத்து அதை சாக்பீஸால் எழுதச் சொல்லி கற்றுக் கொடுக்கிறோம். ஓவியங்கள் வரையவும், கோலம் போடவும் கூட சாக்பீஸ் பயன்படுத்துகிறோம். இப்படி பல்வேறு வகையில் நமக்கு பயன் தரக்கூடிய இந்த சாக்பீஸ் வேறு எதற்கெல்லாம் பயன்படும்? என்னும் ரகசியங்களைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

chalk

குறிப்பு 1:
துணிகளின் மீது திடீரென கரைகள் ஏதாவது ஏற்பட்டு விட்டால் உடனே அங்கு சாக்பீஸை கொண்டு நன்கு கிறுக்கி விடுங்கள். கொஞ்ச நேரம் கழித்து சாக்பீஸ் கரையை தட்டிவிட்டால் கரையுடன் சேர்த்து எல்லாமே நீங்கிவிடும். அதன் பிறகு சாதாரணமாக நீங்கள் துவைப்பது போல துணியைத் துவைத்தால் போதும்! கரை இருந்த அடையாளமே தெரியாமல் மாயமாய் மறைந்துவிடும். வெள்ளை நிறத் துணிகளில் போகவே செய்யாத இன்க் கறை, மார்க்கர் கறை ஆகியவற்றை எளிதாக நீக்க இதே போல சாக்பீஸ் தடவி நன்கு உலர விட்டு பின்னர் அந்த இடத்தில் சிறிதளவு வினிகர் விட்டு தேய்த்தால் போதும் கரை எளிதாக நீங்கும்.

- Advertisement -

குறிப்பு 2:
வீட்டில் எறும்பு தொல்லை அதிகமாக இருந்தால் எறும்பு சாக்பீஸ் தான் போட வேண்டும் என்று இல்லை சுண்ணாம்பால் செய்யப்பட்ட இந்த சாதாரண சாக்பீஸ் கொண்டு அங்கங்கே கோடுகள் கிழித்து வைத்தால் போதும் அதன் பக்கத்தில் எறும்புகள் எதுவுமே வராது.

chalk1

குறிப்பு 3:
காடா துணியால் சாக்பீஸை நன்கு சுற்றிக் கொள்ளுங்கள், அதனை நீங்கள் இரும்புப் பொருட்கள் இருக்கும் இடங்களில் வைத்து விட்டால் அதில் ஏற்படும் ஈரப்பதத்தை உறிஞ்சி கொண்டு துரு ஏற்படுவதை தடுக்கும். அதே போல வெள்ளி பொருட்கள் இருக்கும் இடங்களில் வைத்தாலும் துருப்பிடிக்காமல், கருத்துப் போகாமல் பாதுகாப்புடன் இருந்து பளிச்சென மின்னும்.

- Advertisement -

குறிப்பு 4:
பழைய கட்டிடங்களில் விழும் விரிசல்களை மறைக்க இது போல் சுவற்றில் சாக்பீஸில் கொண்டு நன்கு தேய்த்து விடலாம். சிறு சிறு பிரிவுகள், கோடுகள் போன்றவற்றை மறைக்கவும் சாக்பீஸை பயன்படுத்தி நாம் பயன் பெறலாம். அது மட்டுமல்லாமல் ஆங்காங்கே சுவர்களில் குழந்தைகள் கிறுக்கி வைக்கும் பென்சில் கறைகளைப் போக்கவும், கொஞ்சம் சாக்பீஸ் தடவி பின்னர் ரப்பர் வைத்து அழித்தால் சுலபமாக அந்தக் கறை நீங்கிவிடும்.

chalk2

குறிப்பு 5:
சுவற்றில் தேவையில்லாத ஓட்டைகள் அல்லது ஆணி அடிக்கப்பட்டு இருக்கும் இடங்கள் போன்றவற்றில் அசிங்கமாக தெரியும் சில சுவர் புடைப்புகளை வெளியில் தெரியாமல் இருக்க அங்கு கொஞ்சம் சாக்பீஸை நன்கு அழுத்தி தேய்த்து விட்டால் போதும்! சுவற்றின் நிறத்திற்கும், சாக்பீஸ் நிறத்திற்கும் தொடர்பு உள்ளதால் இது போன்ற விஷயங்களில் நமக்கு கைகொடுக்கும் நல்ல தேர்வாக இருக்கும். தூரத்திலிருந்து பார்ப்பதற்கு அது சாக்பீஸ் கரை போல தெரியாது! சுவற்றின் நிறம் போல நமக்கு ஒன்றோடொன்று ஒத்தது போல காட்டிவிடும். இனி சாக்பீஸ் உடைய சிறு துண்டு கூட வீணாக்க மாட்டீர்கள் அல்லவா?

- Advertisement -