முன் நெற்றியில் முடியே இல்லையா? ஏறிக் கொண்டே செல்லும் முடியை தடுத்து நிறுத்தி மீண்டும் அந்த இடத்தில் அடர்த்தியாக வளர செய்யக்கூடிய அற்புதமான வீட்டு ஹேர் பேக் எது?

- Advertisement -

சிலருக்கு முன் நெற்றியில் கொஞ்சம் கூட முடியே இல்லாமல் இருக்கும். இது பெரும்பாலான ஆண்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனை என்று நினைப்போம். ஆனால் பெண்களுக்கு கூட முன் நெற்றியில் முடி ஏறிக் கொண்டே செல்லும். இது அழுத்தம் கொடுத்து முடியை இழுத்து பிடித்து வாரிக் கொள்வதால் உண்டாக கூடிய பிரச்சனையாக இருக்கிறது. இப்படிப்பட்ட முன் நெற்றியில் கூட தலைமுடி ஏறிக் கொண்டே செல்வதை தடுத்து நிறுத்தி, அடர்த்தியாக மீண்டும் முடியை நன்கு வளர செய்யக்கூடிய அற்புதமான இயற்கை வீட்டு ஹேர் பேக் தான் இது! இதை எப்படி தயாரிப்பது? எப்படி அப்ளை பண்ணுவது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் பார்க்க இருக்கிறோம்.

முடியை எப்பொழுதும் தளர்வாக பின்னிக் கொள்ள வேண்டும். நன்கு தலைக்கு எண்ணெய் தடவிய பின்பு முடியை இறுக்கி பின்னலாம்! ஆனால் எண்ணெய் இல்லாத சமயங்களில் இது போல தலைமுடியை நன்கு இழுத்து பிடித்து கிளிப் போட்டு பின்னி கொள்வதால் முன் நெற்றியில் இருக்கக்கூடிய முடி டேமேஜ் அடைகிறது. இதனால் அது மெல்ல மெல்ல உதிர ஆரம்பிக்கிறது. இப்படி முன் நெற்றியில் இருக்கக்கூடிய ஒவ்வொரு முடியாக உதிரும் பொழுது நெற்றி பகுதி தெரியுமாறு முடி ஏறிக்கொண்டே செல்லும். இத்தகைய பிரச்சனையை தடுத்து நிறுத்தி மீண்டும் அந்த இடத்தில் முடியை வளர செய்து முன் நெற்றியில் கூட பார்ப்பதற்கு அழகாக, அடர்த்தியான முடியை பெற என்ன செய்வது?

- Advertisement -

முதலில் இதற்கு கற்றாழை மடல் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதை நன்கு அலசி சுத்தம் செய்து உள்ளிருக்கும் ஜெல்லை மட்டும் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எடுத்து நன்கு கூழ் போல கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். கற்றாழை ஜெல் கடைகளில் வாங்க கூடாது. இயற்கையாக நீங்கள் பறித்து எடுக்க வேண்டும். பின்னர் இதனுடன் ஒரு துண்டு இஞ்சியை மிக்ஸியில் நன்கு நைசாக அரைத்து அதிலிருந்து வரக்கூடிய சாற்றில் 5 ஸ்பூன் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் இதனுடன் முட்டையின் வெள்ளை கருவை சேர்க்க வேண்டும். முட்டையின் வெள்ளை கருவில் ஏராளமான சத்துக்கள் உண்டு. இது தலை முடியை வேகமாக வளர ஊக்குவிக்கும், அற்புதமான ஒரு மருந்தாக செயல்படும்.. முட்டையின் மஞ்சள் கருவையும் நீங்கள் விருப்பப்பட்டால் சேர்க்கலாம் ஆனால் அது சில நேரத்தில் துர்வாடை அடிக்கும் என்பதால் பலருக்கு பிடிப்பதில்லை.

- Advertisement -

முட்டை கரு சேர்த்ததும் அதில் சுத்தமான விளக்கெண்ணெய் ஒரு ஸ்பூன் சேர்த்துக் கொள்ளுங்கள். இதை நன்கு ஒரு பேஸ்ட் போல எவ்வளவு முடியுமோ, அவ்வளவு அடித்துக் கலக்கி கொள்ளுங்கள். பின்னர் இதை முதலில் உங்களுடைய தலையின் பின் பகுதியில் தடவிக் கொள்ளுங்கள். மண்டை ஓட்டில் எல்லா இடங்களிலும் படும்படி தடவிக் கொள்ள வேண்டும். பின்னர் முன் பகுதியில் நெற்றி வரை சுற்றிலும் எல்லா இடங்களிலும் நன்கு தடவி கொள்ள வேண்டும். பிறகு ஒரு கொண்டை போல கட்டிக் கொள்ளுங்கள். அப்படியே அரை மணி நேரம் ஊற விட்டு விடுங்கள்.

கற்றாழை, முட்டையின் வெள்ளை கரு, விளக்கெண்ணெய் மற்றும் இஞ்சிச்சாறு இவை அனைத்தும் தலை முடியின் சீரான வளர்ச்சிக்கு உதவக்கூடிய பொருட்களாக இருக்கிறது. அரை மணி நேரம் கழித்து நீங்கள் தலையை அலசிக் கொள்ளுங்கள். இப்படி வாரம் ஒருமுறை மட்டும் தொடர்ந்து செய்து வாருங்கள், ரெண்டே மாதத்தில் இழந்த முடியை மீண்டும் அந்த இடத்தில் அடர்த்தியாக கருகருவென வளர செய்யலாம்.

- Advertisement -