வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கு செய்ய வேண்டிய பரிகாரம்.

munnetram
- Advertisement -

வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் என்பது இருக்கத்தான் செய்யும். ஒரு சமயத்தில் முன்னேறினால் மற்றொரு சமயத்தில் கீழே இறங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். யாராலும் அவர்கள் வாழ்நாள் முழுவதும் முன்னேற்றத்தை மட்டுமே காண முடியும் என்று கூற முடியாது. அதே போல் இறக்கங்களை சந்திப்பவர்கள் கடைசி வரைக்கும் இறக்கத்திலேயே இருப்பார்கள் என்றும் சொல்ல முடியாது. எந்த நேரத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரக்கூடிய வழிபாட்டு முறையை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது குடும்பத்தில் நிதி சார்ந்த முன்னேற்றம், வேலையில் பதவி உயர்வு, தொழிலை விரிவுபடுத்துதல், படிப்பில் மேலும் சிறப்பாக படித்து நல்ல மதிப்பெண்கள் எடுப்பது இவை அனைத்தும் தான். இதை ஒரே வார்த்தையில் வாழ்க்கையின் முன்னேற்றம் என்று கூறிவிடலாம்.

- Advertisement -

ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் அவர்கள் எதை முக்கியமாக நினைக்கிறார்களோ அதில் முன்னேற்றம் பெற வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அப்படிப்பட்ட முன்னேற்றத்தை தரக்கூடியவராக திகழ்பவர் தான் புதன் பகவான். யார் ஒருவருக்கு புதன் பகவானின் அருள் பரிபூரணமாக கிடைக்கிறதோ அவர்களுடைய வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது எந்தவித தடைகளும் இன்றி ஏற்படும் என்றே கூறலாம். அப்படிப்பட்ட புதன் பகவானுக்குரிய அதி தேவதையாக பெருமாள் விளங்குகிறார்.

பெருமாளை வழிபடுவதன் மூலம் புதன் பகவானின் அருள் நமக்கு பரி பூரணமாக கிடைக்கும். அதே சமயம் பெருமாளை வணங்குவதால் மகாலட்சுமி தாயாரின் அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. சரி பரிகாரத்தைப் பற்றி பார்ப்போம். இந்த பரிகாரத்தை எல்லா நாட்களிலும் செய்யலாம். குறிப்பாக புதன்கிழமை செய்வது மிகவும் விசேஷமாக இருக்கும்.

- Advertisement -

நவகிரகங்களுக்கு இணையாக கருதப்படக் கூடியது நவதானியங்கள். புதன் பகவானுக்கு உரிய தானியமாக பச்சைப்பயறு விளங்குகிறது. இந்த பச்சை பயறை புதன்கிழமை அன்று நம்மால் இயன்ற அளவு எடுத்துக்கொண்டு அருகில் இருக்கும் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அங்கு இருக்கும் நவகிரகங்களில் புதன் பகவான் பாதத்தில் வைத்து வழிபடலாம். பெருமாள் கோவிலாக இருக்கும் பட்சத்தில் பெருமாளின் பாதத்தில் வைத்து வழிபடலாம்.

இவர்கள் இருவரில் யாராவது ஒருவரின் பாதத்தில் வைத்து வழிபட்டுவிட்டு அந்த பச்சை பயரை திரும்பி வீட்டிற்கு எடுத்து வர வேண்டும். இப்பொழுது ஒரு தாம்பாளத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் நடுவில் பச்சைப் பயரை வைத்து விடுங்கள். பிறகு அதற்கு மேல் தண்ணீரை ஊற்றுங்கள். சாதாரண பச்சைப் பயறு தெய்வத்தின் பாதத்திற்கு சென்றவுடன் தெய்வமாக மாறுகிறது. அந்த தெய்வத்திற்கு இப்பொழுது நாம் அபிஷேகம் செய்கிறோம். அபிஷேகம் செய்த தீர்த்தம் புனித தீர்த்தமாக மாறும் அல்லவா?

- Advertisement -

அந்த தீர்த்தத்தை எடுத்து நம் தலையில் தெளித்துக் கொள்ள வேண்டும். வீட்டில் இருக்கும் அனைவரின் தலைகளிலும் தெளிக்க வேண்டும். மறுநாள் அந்த பச்சைப் பயறை அருகில் இருக்கும் பசு மாட்டிற்கு தானமாக வழங்கி விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: தொலைந்த பொருட்கள் திரும்ப கிடைக்க வழிபாடு.

இவ்வாறு நாம் தொடர்ந்து இந்த வழிபாட்டை செய்து வருவதன் மூலம் புதன் பகவான் மற்றும் பெருமாளின் அனுக்கிரக பார்வை நம் மீது பட்டு நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் விலகி முன்னேற்றம் கிடைக்கும்

- Advertisement -