அமாவாசை அன்று பசு மாட்டிற்கு இந்த 1 பொருளை இப்படி கொடுத்தாலே போதும். முன்னோர்கள் சாபத்தால் தலைமுறை தலைமுறையாக கஷ்டப்பட்டு வரும் குடும்பம் கூட ஒரே நாளில் தலைதூக்கும்.

amavasai
- Advertisement -

அறிந்தோ அறியாமலோ நம்முடைய முன்னோர்களுக்கு, நாம் செய்த பாவத்தாலோ அல்லது நமக்கு முன் வாழ்ந்த முன்னோர்கள், அவர்களுக்கு முன் வாழ்ந்த தலைமுறையினருக்கு செய்த பாவத்தாலோ, தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் இன்றைய தலைமுறையினர் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் சூழ்நிலை ஏற்படுகின்றது. கஷ்டப்படும் கூடிய அந்தக் குடும்பத்தில் உள்ளவர்கள் ஜாதக கட்டத்தை பார்த்தாலே தெரிந்துவிடும், முன்னோர்களின் சாபத்திற்கு ஆளாகி இருப்பது. முன்னோர்களுடைய சாபத்திற்கு ஆட்பட்ட குடும்பம் நிச்சயமாக ஏதோ ஒரு தீர்க்க முடியாத கஷ்டத்தில் பாதிக்கப்பட்டிருக்கும். ஜாதகமே உங்களுக்கு இல்லை என்றாலும், உங்கள் வீட்டில் தீராத கஷ்டம் இருந்து வந்தாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். இப்படியாக முன்னோர்களின் சாபத்தில் இருந்து வெளிவர, முன்னோர்களின் ஆசீர்வாதத்தை முழுமையாக பெற, ஆன்மீக ரீதியாக சுலபமான ஒரு பரிகாரத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

pithru dhosam

முன்னோர்கள் சாபத்திலிருந்து வெளி வரவும், நமக்கு அடுத்த சந்ததியினர், முன்னோர்களின் கோபத்திற்கு ஆளாகாமல் இருக்கவும், பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை தவறாமல் செய்து வர வேண்டும். மாதம் கொடுக்கக்கூடிய அமாவாசை தர்ப்பணத்திலிருந்து, வருடத்திற்கு ஒருமுறை செய்யும் சிராத்தம் வரை தவறவிடாமல் செய்தாலே நம்முடைய குடும்பத்திற்கு வரும் கஷ்டங்களில் பாதி குறைந்துவிடும்.

- Advertisement -

சரி, ஏற்கனவே இருக்கும் சாபத்தை எப்படி சரி செய்வது? மாதம்தோறும் வரக்கூடிய அமாவாசை தினத்தன்று பசுமாட்டிற்கு இந்த பொருளை இப்படி கொடுக்க வேண்டும். அமாவாசை வருவதற்கு முன்பாக 3 நாட்களுக்கு முன்பே நவதானியத்தை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

pithru dhosam

அந்த நவதானியங்களை ஒரு நாள் முழுவதும் தண்ணீரில் ஊற வைத்துவிட்டு, அதன் பின்பு அந்த தண்ணீரை நன்றாக வடிகட்டி விட்டு சுத்தமான, எச்சில் படாத பாத்திரத்தில் வைத்து, தட்டு போட்டு மூடி வைத்து விடுங்கள். இந்த தானியம் இரண்டு அல்லது மூன்று நாட்களில் நன்றாக முளைவிடத் தொடங்கி இருக்கும்.

- Advertisement -

முளைவிட்ட இந்த நவதானியத்தை அமாவாசை தினம் காலை வேலையில் பசுமாட்டிற்கு கொண்டு போய் சாப்பிட கொடுத்து விட வேண்டும். இப்படி செய்துவந்தால் முன்னோர்களின் கோபம் குறைந்து, முன்னோர்களின் சாபத்தில் இருந்து விடுபட்டு நம்முடைய ஜாதக கட்டத்தில் இருக்கும் தோஷம் விலகி, நம்முடைய குடும்பத்தில் இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் படிப்படியாக குறைவதை நிச்சயம் உணர முடியும்.

navadhanyam

மாதம்தோறும் வரக்கூடிய அமாவாசை தினங்களில் தவறாமல் இந்த முளைகட்டிய நவதானியத்தை, குடும்ப தலைவனின் கையால், பசுமாட்டிற்கு கொண்டு போய் கொடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். இதேபோல் நிறைய பேர் வீடுகளில் செய்யும் ஒரு தவறு இது. இறந்தவர்களின் திருவுருவப் படத்திற்கு செயற்கையான பூக்களால் தொடுத்த மாலைகளை அணிவித்து இருப்பார்கள்.

navadhanya

இது மிகவும் தவறு. உங்கள் வீட்டில் இருக்கும் இறந்தவர்களின் படங்களுக்கு செயற்கையாக இருக்கும் பூக்கள் மாலையை அணிவிக்க கூடாது. உங்களுடைய வீட்டில் இறந்தவர்களின் திருவுருவ படத்திற்கு சந்தன மாலை அணிவிப்பது மிகவும் நல்லது. முன்னோர்களின் ஆசீர்வாதத்தை நமக்குப் பெற்றுத் தரக் கூடிய சக்தி இந்த சந்தன மாலைக்கு உண்டு.

navadhanyam1

இந்த சந்தன மாலையை இறந்தவர்களின் திருவுருவப்படத்திற்கு மாட்டி வைத்திருந்தால், இறந்தவர்கள் மன மகிழ்ச்சியோடும், மன நிறைவோடும் மனம் குளிர்ந்து, நம்மை வாழ்த்திக் கொண்டே இருப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். முயற்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -