எம தீபம் ஏற்றும் முறை

yeman dheepam
- Advertisement -

தீபாவளி பண்டிகை எத்தனை சிறப்புடையதோ அதே போல அந்த பண்டிகையை சார்ந்து வரும் சில சம்பிரதாயங்களும் முக்கியமானது தான். தீபாவளி அன்று கங்கா ஸ்தானம் செய்வது முக்கியம். அதே போல அன்றே மாலை குபேர பூஜை செய்வது முக்கியம். இது போல தீபாவளிக்கு முன் ஏற்ற வேண்டிய எம தீபமும் முக்கியமானதாக சொல்லப்படுகிறது.

இந்த தீபம் நம் வீட்டில் இறந்த முன்னோர்கள் மேலுலகம் செல்ல வழிகாட்ட நாம் செய்யும் ஒரு சடங்காக பார்க்கப்படுகிறது. அதாவது சென்ற மாதம் புரட்டாசி மாகாள அமாவாசையில் முன்னோர்கள் நம்மை ஆசீர்வதிக்க பூலோகம் வருவதாக ஐதீகம். அப்படி வந்தவர்கள் இந்த நாளில் திரும்ப செல்வார்கள் எனவும் அந்த நேரத்தில் அவர்களுக்கு வழிகாட்டும் விதமாக நாம் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

- Advertisement -

அப்படியான இந்த தீபத்தை எங்கு ஏற்ற வேண்டும் எப்படி ஏற்ற வேண்டும். எப்பொழுது ஏற்ற வேண்டும் யார் யார் ஏற்ற வேண்டும் என்பன போன்ற தெளிவான விளக்கத்தை ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவில் இப்போது தெரிந்து கொள்ளலாம்.

எம தீபம் ஏற்றும் முறை

இந்த தீபத்தை தீபாவளிக்கு முந்தினம் மாலை தான் ஏற்ற வேண்டும். ஆனால் இந்த தீபம் ஏற்றப்படும் நேரத்தில் தேய்பிறை திரியோதசி திதி இருக்க வேண்டும். இந்த வருடம் திதியானது வெள்ளிக்கிழமை (10.11.23) பிரதோஷத்தன்று மாலை தான் இருக்கிறது. அடுத்த நாள் சனிக்கிழமை மதியத்துடன் இந்த திதி முடிந்து விடுகிறது. ஆகையால் சனிக்கிழமை மாலை ஏற்றாமல் வெள்ளிக்கிழமை மாலையை ஏற்றி விட வேண்டும்.

- Advertisement -

அதே போல் இந்த தீபத்தை வெள்ளிக்கிழமை மாலை நான்கிலிருந்து ஆறு முப்பது மணி வரை பிரதோஷ காலத்திலேயே ஏற்றலாம். இந்த தீபம் குறைந்தது ஒரு மணி நேரம் எரியும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்த தீபத்தை நாம் வீட்டில் நிலை வாசலுக்கு வெளியில் வைத்து தான் ஏற்ற வேண்டும். வீட்டிற்குள் ஏற்றக் கூடாது. அதே போல் தெரு வாசலிலும் ஏற்றக் கூடாது. இந்த தீபத்தை அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சுத்திரி ஊற்றி ஏற்ற வேண்டும்.

- Advertisement -

இந்த தீபமானது சற்று மேல் நோக்கி வைத்து ஏற்ற வேண்டும். அதற்கு உயரமாக செங்கல் மனை போன்ற ஏதாவது உயரமாக வைத்து ஏற்ற வேண்டும். இந்த தீபம் தெற்கு நோக்கி எறிய வேண்டும். நாமும் தெற்கு நோக்கி நின்று தான் தீபத்தை ஏற்ற வேண்டும். அதாவது தீபத்திற்கு பின்னால் நின்று ஏற்ற வேண்டும்.

இந்த தீபத்தை மட்டும் நாம் தீபத்திற்கு முன் நின்று ஏற்றக் கூடாது. அதே போல் இந்த தீபம் ஏற்ற நீங்கள் பயன்படுத்தும் அகலை மறுபடியும் வீட்டிற்குள் கொண்டு வந்து பூஜை அறையிலோ மற்ற பயன்பாட்டிற்கு பயன்படுத்தக் கூடாது. இந்த தீபத்திற்கு பயன்படுத்தும் அனைத்தையும் தீபம் ஏற்றியவுடன் வெளியே போட்டு விட வேண்டும்.

இந்த தீபமானது குறைந்து ஒரு மணி நேரம் எரிய வேண்டும். அப்படி எரியும் வேளையில் தீபத்திற்கு பின் நின்று இரு கரங்களையும் கூப்பி ஓம் எமதர்ம ராஜாய நமக என்ற இந்த நாமத்தை 24 முறை சொல்ல வேண்டும். இதன் மூலம் முன்னோர்களுக்கு நாம் வழிகாட்டி அந்த ஆசீர்வாதத்தை பெறுவோம். அத்துடன் எமதர்மராஜனின் அருளையும் பெற முடியும் என்பது ஐதீகம்.

இந்த தீபத்தை மாதவிலக்கான பெண்கள், கருவுற்றிருக்கும் பெண்கள் நீண்ட நாட்களாக உடல் நல கோளாறால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் அல்லது அந்த நேரத்தில் உடல் நலப் பிரச்சனையில் இருப்பவர்கள் யாரும் ஏற்றக் கூடாது. இவர்களை தவிர ஆண்கள் பெண்கள் அனைவருமே இந்த தீபத்தை ஏற்றலாம்.

இதையும் படிக்கலாமே: திருமண தடை நீங்க பைரவர் வழிபாடு.

இந்த தீப வழிபாட்டு முறை பற்றி தெரிந்து கொண்டு இன்றைய நாளில் ஏற்றப்படும் இந்த எம தீபம் நமக்கு முன்னோர்களின் ஆசிர்வாதத்தை பரிபூரணமாக பெற்று தரும் என்ற இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருப்பின் நீங்களும் தீபத்தை ஏற்றி பலன் அடையலாம்.

- Advertisement -