திருமண தடை நீங்க பைரவர் வழிபாடு.

bairavar pariharam
- Advertisement -

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர், திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று திருமணம் தொடர்பாக பல பழமொழிகளை நாம் கேட்டிருக்கிறோம். ஒருவருடைய வாழ்க்கையை தீர்மானிக்க கூடிய அதி முக்கியமான ஒரு வைபவமே திருமணம் என்று கூறப்படுகிறது. திருமணம் ஆவதற்கு முன்பு வரை இளைஞராக இருந்தவர்கள் திருமணம் ஆன அடுத்த நொடியை குடும்பத் தலைவராகவும், தலைவியாகவும் மாறி ஒரு குடும்பத்தை நிர்ணயிக்கக்கூடிய அளவிற்கு பொறுப்புகளை ஏற்கிறார்கள். அப்படிப்பட்ட அதி முக்கியமான திருமணம் ஒரு சிலருக்கு தாமதம் விரைவில் நடைபெறாமல் தாமதம் ஏற்படுகிறது. அப்படிப்பட்ட தாமதத்தை நீக்குவதற்கும் விரிவிலேயே திருமணம் நடைபெறுவதற்கும் செய்யக்கூடிய பைரவர் வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

திருமண வயதை நெருங்கிய உடனேயே உற்றார் உறவினர்கள் அனைவரும் எப்பொழுது கல்யாண சாப்பாடு போட போறீங்க என்று கேட்பார்கள். பெற்றவர்களுக்கு அது ஒரு பெரிய பொறுப்பாகவே இருக்கும். நல்ல முறையில் நல்லவராக பார்த்து தங்கள் பிள்ளைக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று விரும்புவார்கள். திருமணத்தில் தாமதமோ தடைகளோ ஏற்படும்பொழுது அதனால் மன உளைச்சலுக்கு பெற்றவர்கள் மட்டும் அல்லாமல் சம்பந்தப்பட்ட நபரும் ஆளாவார்கள். அப்படிப்பட்டவர்கள் செய்யக்கூடிய வழிபாட்டு முறையை பார்ப்போம்.

- Advertisement -

திருமண தடை ஏற்பட்டு இருப்பவர்களுடைய ஜாதகத்தில் எந்த திசை நடைபெறுகிறது என்பதை பார்க்க வேண்டும். மேலும் இந்த வழிபாட்டை திருமணத்தடை ஏற்பட்டவர்கள் தான் செய்ய வேண்டும். அவர்கள் சார்பாக வேறு யாரும் செய்யக்கூடாது. சூரிய மகா திசை நடந்தால் ஞாயிற்றுக்கிழமையும், சந்திரன் மகா திசையாக இருந்தால் திங்கட்கிழமையும், செவ்வாய் மகா திசையாக இருந்தால் செவ்வாய்க்கிழமையும், புதன் மகா திசையாக இருந்தால் புதன்கிழமையும், குரு மகா திசையாக இருந்தால் வியாழக்கிழமையும், சனி மகா திசையாக இருந்தால் சனிக்கிழமையும், சுக்கிரன், ராகு, கேது போன்ற மகா திசைகளாக இருந்தால் வெள்ளிக்கிழமையும் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

ராகு காலத்தில் செய்வது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. முடியாத பட்சத்தில் காலையிலோ மாலையிலோ இந்த பரிகாரத்தை செய்யலாம். அருகில் இருக்கும் சிவாலயங்களுக்கு செல்ல வேண்டும். அங்கு இருக்கும் கால பைரவருக்கு சந்தன காப்பு செய்ய சொல்லி ரோஜாப்பூ அல்லது செவ்வரளி பூவால் மாலை சாற்ற வேண்டும். பிறகு ஒரு கிலோ டைமண்ட் கற்கண்டை வாங்கி கால பைரவருக்கு நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். இரண்டு நெய் தீபம் ஏற்று கால பைரவரை மனதார வழிபட வேண்டும். பிறகு நெய்வேத்தியமாக வைத்த டைமண்ட் கற்கண்டு கோவிலுக்கு வருபவர்களுக்கு பிரசாதமாக வழங்க வேண்டும்.

- Advertisement -

இவ்வாறு தொடர்ந்து ஏழு வாரங்கள் செய்ய வேண்டும். எட்டாவது வாரம் காலபைரவருக்கு அவல் பாயாசம் செய்து நெய்வேத்தியமாக படைத்து கோவிலுக்கு வருபவர்களுக்கு பிரசாதமாக வழங்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கு செய்ய வேண்டிய பரிகாரம்.

இவ்வாறு வழிபடுவதன் மூலம் காலபைரவரின் அருளால் திருமண தடைகள் அனைத்தும் விலகி எதிர்பார்த்த நல்ல வரன் விரைவிலேயே அமையும்.

- Advertisement -