சுவையான, சுலபமான முருங்கைக்கீரை சாம்பார் ஒருமுறை இப்படி வைத்துப் பாருங்கள்!

murugai-keerai-sambar
- Advertisement -

முருங்கைக்கீரையை பொரியலாக சமைத்து சாப்பிட வில்லை என்றாலும், முருங்கைக்கீரை போட்ட சாம்பாரை சாப்பிட்டாலாவது, கீரையின் சத்து, நம் உடலில் கொஞ்சம் சேரும். சுவையான, சுலபமான முருங்கைக்கீரை சாம்பார் எப்படி செய்வது என்பதைப்பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நம்முடைய சாம்பார் வைக்கும் முறையிலேயே தான், இந்த முருங்கைக்கீரை சாம்பார் வைக்க வேண்டும். சின்ன சின்ன டிப்ஸை ஃபாலோ பண்ணி சாம்பார் வைத்தீர்கள் என்றால், இதன் சுவை கொஞ்சம் அதிகமாகவே கூடும். சரி சாம்பார் எப்படி செய்வது என்று பார்த்துவிடலாம்.

murugai-keerai

Step 1:
முதலில் குக்கரில் 150 கிராம் அளவு துவரம்பருப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு, அதில் 6 பல் பூண்டு தோலுரித்து, போட்டுக் கொள்ள வேண்டும். கால் ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, பருப்பை 4 விசில் விட்டு குழைய வேகவைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு, மத்து போட்டு கடைந்து, பருப்பை எடுத்து தயாராக வைத்துக் கொள்ளுங்கள். பருப்போடு சேர்த்து பூண்டை வேகவைத்து மசித்து முருங்கைக்கீரை சாம்பார் வைத்தால் அதன் சுவையே தனி.

- Advertisement -

Step 2:
அடுத்ததாக அகலமான கடாயில், 2 டேபில் ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி, 1/4 ஸ்பூன் – கடுகு, 1/2 ஸ்பூன் – சீரகம், 3 வரமிளகாய் – (இரண்டாக உடைத்து விதையோடு தாளித்துக் கொள்ளுங்கள்), ஒரு சிட்டிகை பெருங்காயம், 10 சின்ன வெங்காயம் –  பொடியாக நறுக்கியது சேர்த்து, 3 நிமிடம் வெங்காயத்தை வதக்கிய பின்பு, பழுத்த தக்காளி 2, பொடியாக நறுக்கியது சேர்த்து, 2 நிமிடங்கள் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.

thalipu

தக்காளி வதங்கியதும், இறுதியாக உங்கள் வீட்டில் சாம்பார் பொடி, அல்லது குழம்பு பொடி, இருந்தால் இதில் சேர்த்துக் கொள்ளலாம். இல்லை என்றாலும், மிளகாய்த்தூள், தனியாத்தூள் தேவையான அளவு சேர்த்து, ஒரு நிமிடம் மட்டும் வதக்கி, வேக வைத்திருக்கும் பருப்பை,  சேர்த்து விட வேண்டும். இதோடு சேர்த்து சாம்பாருக்கு தேவையான தண்ணீரையும் இந்த இடத்தில் ஊற்றி விடுங்கள்.

- Advertisement -

தேவையான அளவு உப்பு போட்டு, பருப்பு 3 நிமிடம் கொதித்த பின்பு தான், பெரிய நெல்லிக்காய் அளவு புளி கரைசலை கரைத்து சாம்பாரில் ஊற்ற வேண்டும். புளிக்கரைசல் ஊற்றி சாம்பார், மிதமான தீயில் ஏழிலிருந்து எட்டு நிமிடம் கொடுக்க வேண்டும். அடுத்ததாக கொத்தமல்லி தழையை தூவி கொள்ளுங்கள். (புளிக்கரைசலை கெட்டியாக கரைக்க கூடாது. புளிகரைசல் தண்ணீராகத்தான் இருக்க வேண்டும்.)

murgai-keerai-sambar

Step 3:
சாம்பாரை இறக்குவதற்கு இரண்டு நிமிடம் முன்பாக, ஒரு கைப்பிடி அளவு முருங்கைக் கீரையைத் தூவி, சாம்பாரை மூடி வைத்து கொதிக்க விட்டு, இறக்கி விட்டீர்கள் என்றால், கமகம வாசத்தோடு முருங்கைக்கீரை சாம்பார் தயார். சுலபமாக நம் வீட்டில் வைக்கும் சாம்பார் தான். இந்த பதிவில் குறிப்பிட்டிருக்கும் சின்ன சின்ன குறிப்புகளை சரியான முறையில் பின்பற்றி, இந்த சாம்பாரை சரியான முறையில் கொதிக்கவைத்து, இருக்கும் பட்சத்தில் அதன் சுவை மேலும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் உங்கள் வீட்டிலும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.

இதையும் படிக்கலாமே
90களின் மனம் கவர்ந்த தேன் மிட்டாய் செய்ய ஒரு கப் இட்லி மாவு இருந்தாலே போதுமே! உடனே செய்து பார்த்திடலாம்.

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -