- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநினைத்தது நடக்க எழுத வேண்டிய முருகன் மந்திரம்

நினைத்தது நடக்க எழுத வேண்டிய முருகன் மந்திரம்

- Advertisement -

நீங்கள் பணம் சொத்து சுகம் எதை இழந்திருந்தாலும் சரி, அதை மீட்டெடுக்க இந்த பரிகாரத்தை செய்யலாம். செய்யக்கூடிய வேலை, ஆரோக்கியம் அல்லது உங்களுடன் வாழ்ந்த உறவை பிரிந்து, அவர்களை நீங்கள் இழந்திருந்தாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். நீங்கள் இழந்தது திரும்பவும் உங்கள் கையை வந்து சேரும். இழந்ததை மீட்டுக் கொடுக்கக்கூடிய, கடவுள் இந்த முருகப்பெருமான்.

முருகப்பெருமானை நினைத்து 21 நாள் இந்த மந்திரத்தை எழுதினால், போதும். நீங்கள் நினைத்த வேண்டுதல் அப்படியே பலிக்கும். இழந்ததை மீட்டு நம் வேண்டுதலை நிறைவேற்றித் தரக்கூடிய அந்த மந்திரம் என்ன ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

இழந்ததை மீட்டு தரும் முருகன் வழிபாடு

இந்த வழிபாட்டிற்கு உங்களுடைய வீட்டில் வேல் இருந்தால் அதை வழிபாடு செய்து இந்த மந்திரத்தை எழுதலாம். வேல் இல்லை என்றால் முருகர் திருவுருவப்படத்திற்கு முன்பாக இந்த மந்திரத்தை எழுதலாம். சரி எங்களுடைய வீட்டில் வேல் இருக்கிறது. என்ன செய்வது. 21 நாள் கணக்கு வைத்துக் கொள்ளுங்கள். வழிபாட்டில் தடை வரக்கூடாது. அது போல நாளை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.

வீட்டில் இருக்கும் பெண்கள் ஆண்கள் யார் வேண்டும் என்றாலும் இந்த வழிபாட்டை செய்யலாம். காலையில் சூரிய உதயத்திற்கு முன்பு இந்த வழிபாட்டை நிறைவு செய்திருக்க வேண்டும். வேலுக்கு அபிஷேகம் செய்து சந்தன குங்குமம் பொட்டு வைத்து, பூஜை அறையில் வைக்கவும். தினமும் அந்த வேலைக்கு கல்கண்டு, வாழைப்பழம் இப்படி ஏதாவது எளிமையான பிரசாதம் வைக்கவும்.

- Advertisement -

விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். வேலுக்கு ஒரு பூ வையுங்கள். ஒரு புது நோட்டு புத்தகம் வாங்கிக் கொள்ளுங்கள். அதையும் பூஜையறையில் வைத்து விடுங்கள். பூஜை அறையை தயார் செய்து வேலுக்கு முன்பாக அமர்ந்து உங்களுடைய பிரார்த்தனையை முருகப்பெருமானிடம் சொல்லி அந்த பிராத்தனை நிறைவேற வேண்டும் என்று வேண்டுதல் வைக்கவும்.

அந்த நோட்டு புத்தகத்தை எடுத்து ‘குருவாய் வருவாய் அருள்வாய் குகனே’ என்ற இந்த மந்திரத்தை 9 முறை எழுதவும். பிறகு கற்பூர ஆரத்தி காண்பித்து வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளவும். 21 நாட்கள் இதே போல வழிபாட்டை செய்ய வேண்டும். அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு இந்த வழிபாட்டை நிறைவு செய்திருக்க வேண்டும்.

- Advertisement -

உங்களுடைய வீட்டில் வேல் இல்லை என்றாலும் பரவாயில்லை. முடிந்தவர்கள் புது வேல் வாங்கி வைத்து இந்த வழிபாட்டை நிறைவு செய்துவிட்டு இந்த வேல் கொண்டு போய் முருகன் கோவில் உண்டியலில் போட்டு விடலாம். தவறு கிடையாது. சின்னதாக பித்தளையில் செய்யப்பட்ட வேல் வாங்கி வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: கண் திருஷ்டி நீங்க ஞாயிற்றுக்கிழமை பரிகாரம்

முடியாதவர்கள் முருகப்பெருமானின் திருவுருவப்படத்திற்கு முன்பே நம்பிக்கையோடு இந்த வழிபாட்டை செய்தாலும், நிச்சயம் உங்கள் வேண்டுதல் பலிக்கும். அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. 21 நாள் மேல் சொன்ன முறையில் முருகனை கும்பிட்டால் வெற்றி நிச்சயம் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்