உங்களுக்கு எத்தகைய ஆபத்துகளும் ஏற்படாமல் இருக்க இம்மந்திரம் துதியுங்கள்

murugan-compressed

உலகில் பெரும்பாலான மக்கள் இறை நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கின்றனர். தங்களின் அன்றாட வாழ்க்கையில் எதையும் எதிர்கொள்ள இந்த இறை நம்பிக்கை அவர்களுக்கு கை கொடுக்கிறது. இப்படி நாம் தினமும் செயல் புரியும் போது நமக்கு எப்போது, என்ன ஆபத்து ஏற்படும் என்பது தெரியாது. மேலும் நமக்கு மறைமுக எதிரிகள் தோன்றி பல வகையான துன்பங்களை தருகின்றனர். வேண்டுவோரின் வினை தீர்ப்பவர் முருகன். மேற்கூறியவற்றை போன்று பல பிரச்சனைகளை தீர்க்க உதவும் “முருகன் போற்றி” இதோ.

kantha sasti kavasam lyrics

முருகன் போற்றி

ஓம் ஆறுமுகனே போற்றி
ஓம் ஆண்டியே போற்றி
ஓம் அரன் மகனே போற்றி
ஓம் அபிஷேகப் பிரியனே போற்றி
ஓம் அழகா போற்றி
ஓம் அபயா போற்றி
ஓம் ஆதிமூலமே போற்றி
ஓம் ஆவினன் குடியோய் போற்றி
ஓம் இறைவனே போற்றி
ஓம் இளையவனே போற்றி
ஓம் இடும்பனை வென்றவனே போற்றி
ஓம் இடரைக் களைவோனே போற்றி
ஓம் ஈசன் மைந்தனே போற்றி
ஓம் ஈராறு கண்ணனே போற்றி
ஓம் உமையவள் மகனே போற்றி
ஓம் உலக நாயகனே போற்றி
ஓம் ஐயனே போற்றி
ஓம் ஐங்கரன் தம்பியே போற்றி
ஓம் ஒன்றே போற்றி
ஓம் ஓங்காரனே போற்றி
ஓம் ஓதுவார்க்கினியனே போற்றி
ஓம் ஔவைக்கருளியவனே போற்றி
ஓம் கருணாகரனே போற்றி
ஓம் கதிர் வேலவனே போற்றி
ஓம் கந்தனே போற்றி
ஓம் கடம்பனே போற்றி
ஓம் கவசப்பிரியனே போற்றி
ஓம் கார்த்திகை மைந்தனே போற்றி
ஓம் கிரிராஜனே போற்றி
ஓம் கிருபாநிதியே போற்றி

ஓம் குகனே போற்றி
ஓம் குமரனே போற்றி
ஓம் குன்றம் அமர்ந்தவனே போற்றி
ஓம் குறத்தி நாதனே போற்றி
ஓம் குரவனே போற்றி
ஓம் குருபரனே போற்றி
ஓம் சங்கரன் புதல்வனே போற்றி
ஓம் சஷ்டி நாயகனே போற்றி
ஓம் சரவணபவனே போற்றி
ஓம் சரணாகதியே போற்றி
ஓம் சத்ரு சங்காரனே போற்றி
ஓம் சர்வேஸ்வரனே போற்றி
ஓம் சிக்கல்பதியே போற்றி
ஓம் சிங்காரனே போற்றி
ஓம் சுப்பிரமணியனே போற்றி
ஓம் சுரபூபதியே போற்றி
ஓம் சுந்தரனே போற்றி
ஓம் சுகுமாரனே போற்றி
ஓம் சுவாமிநாதனே போற்றி
ஓம் சுருதிப் பொருளுரைத்தவனே போற்றி
ஓம் சூழ் ஒளியே போற்றி
ஓம் சூரசம்ஹாரனே போற்றி
ஓம் செல்வனே போற்றி
ஓம் செந்தூர்க்காவலனே போற்றி
ஓம் சேகரனே போற்றி
ஓம் சேவகனே போற்றி
ஓம் சேனாபதியே போற்றி
ஓம் சேவற்கொடியோனே போற்றி
ஓம் சொற்பதங்கடந்தவனே போற்றி
ஓம் சோலையப்பனே போற்றி

kantha sasti kavasam lyrics

ஓம் ஞானியே போற்றி
ஓம் ஞாயிறே போற்றி
ஓம் ஞாலம் காப்பவனே போற்றி
ஓம் ஞானோபதேசியே போற்றி
ஓம் தணிகாசலனே போற்றி
ஓம் தயாபரனே போற்றி
ஓம் தண்டாயுதபாணியே போற்றி
ஓம் தகப்பன் சாமியே போற்றி
ஓம் திருவே போற்றி
ஓம் திங்களே போற்றி
ஓம் திருவருளே போற்றி
ஓம் தினைப்பணம் புகுந்தோய் போற்றி
ஓம் துணைவா போற்றி
ஓம் துரந்தரா போற்றி
ஓம் தென்பரங்குன்றனே போற்றி
ஓம் தெவிட்டா இன்பமே போற்றி
ஓம் தேவாதி தேவனே போற்றி
ஓம் தேவசேனாபதியே போற்றி
ஓம் தேவனே போற்றி
ஓம் தேயனே போற்றி
ஓம் நாதனே போற்றி
ஓம் நிமலனே போற்றி
ஓம் நிறணந்தவனே போற்றி
ஓம் பிரணவமே போற்றி
ஓம் பரப்பிரம்மமே போற்றி
ஓம் பழனியாண்டவனே போற்றி
ஓம் பாலகுமாரனே போற்றி
ஓம் பன்னிரு கையனே போற்றி
ஓம் பகை ஒழிப்பவனே போற்றி
ஓம் போகர் நாதனே போற்றி

- Advertisement -

kantha sasti kavasam lyrics
ஓம் போற்றப்படுவோனே போற்றி
ஓம் மறை நாயகனே போற்றி
ஓம் மயில் வாகனனே போற்றி
ஓம் மகா சேனனே போற்றி
ஓம் மருத மலையானே போற்றி
ஓம் மால் மருகனே போற்றி
ஓம் மாவித்தையே போற்றி
ஓம் முருகனே போற்றி
ஓம் மூவாப் பொருளே போற்றி
ஓம் யோக சித்தியே போற்றி
ஓம் வயலூரானே போற்றி
ஓம் வள்ளி நாயகனே போற்றி
ஓம் விறலிமலையானே போற்றி
ஓம் வினாயகர் சோதரனே போற்றி
ஓம் வேலவனே போற்றி
ஓம் வேதமுதல்வனே போற்றி
ஓம் கலியுக வரதனே போற்றி
ஓம் புண்ணிய மூர்த்தியே போற்றி
முருகனுக்கு அரோகரா

Sivanmalai Murugan

அழகன் எனப் புகழப்படும் முருகப்பெருமானின் போற்றி மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் ஒரு முறை துதிப்பவர்களுக்கு நன்மைகள் பல ஏற்படும். முருகப்பெருமான் வழிபாட்டிற்குரிய செவ்வாய்கிழமைகள், சஷ்டி, கிருத்திகை நட்சத்திர தினங்களில் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு, வீட்டில் முருகனின் படத்திற்க்கு மலர்களை சாற்றி, விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி ஒரு வேளை உணவு உண்ணாமல் இந்த 108 போற்றியை துதித்து முருகனை வழிபடுவதால் உங்களுக்கு வரவிருக்கின்ற எப்பேர்ப்பட்ட ஆபத்துகளும் நீங்கும். மறைமுக எதிரிகள் ஒழிந்து போவார்கள். கடன் பிரச்சனை சீக்கிரம் தீரும். பூர்வீக வீடு, நிலம் போன்ற சொத்துகளில் இருக்கும் பிரச்சனைகள் தீரும்.

kantha sasti kavasam lyrics

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்று கூறுவர். தமிழர்களின் கடவுளாகிய முருக பெருமானின் புகழ்பெற்ற கோயில்கள் குன்று, மலைகள் இருக்கும் பகுதிகளிலேயே இருக்கின்றன. பழந்தமிழ் இலக்கியங்களில் மலை, மலை சார்ந்த குறிஞ்சி நில கடவுளாக முருகப்பெருமான் என்று குறிப்பிட்டிருக்கின்றனர். தன்னை விரும்பி அழைக்கும் பக்தர்களின் துயர் துடைக்க ஓடோடி வரும் தெய்வமாக முருகன் இருக்கிறார். அவரை புகழும் இந்த முருகன் போற்றி துதியை படிப்பதால் எல்லா நன்மைகளும் படிப்பவர்களுக்கு உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
அதிக பணவரவு கிடைக்க செய்யும் ஸ்லோகம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Murugan potri in Tamil. It is also called as Murugan thuthi in Tamil or Kandhan stuti in Tamil or Murugan tamil slogam or Murugan tamil manthiram.