நிறைய பேருக்கு தினம் தினம் முருகனைப் புகழ்ந்து பாட வேண்டும், திருப்புகழ் பாட வேண்டும், கந்தர் அலங்காரம் பாட வேண்டும், வேல்மாறல் படிக்க வேண்டும், இப்படி முருகனுக்கு உகந்த பாடல்களை எல்லாம் படித்து முருகனை மகிழ்வித்து பூஜை செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் ஏனோ தெரியவில்லை. இதற்கான நேரம் நமக்கு கிடைப்பதில்லை. என்ன செய்வது.
அவசர அவசரமான இந்த உலகத்தில், அன்றாட வேலைகளை செய்வதற்கே நேரம் போதவில்லை. இல்லத்தரசிகளாகவே இருந்தாலும் அவர்களுக்கு ஆயிரம் வேலைகள். வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் ஆயிரம் கை போதாது. 24 மணி நேரமும் பத்தாது. ஆனால் கைபேசியில் ரீல்ஸ் பார்ப்பதற்கு மட்டும் நேரம் இருக்கிறது. தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். இன்று நாம் அதிகமாக செய்யக் கூடிய தவறு இது.
ரீல்ஸ் பார்க்கநேரத்தை ஒதுக்குபவர்கள் கூட, இன்று இறைவழிபாடு செய்வதற்கு நேரம் ஒதுக்குவதில்லை. சரி, அது போகட்டும். தினமும் ஐந்து நிமிடம் ஆவது நமக்கு இந்த அழகான வாழ்க்கையை கொடுத்த கடவுளுக்கு நன்றி சொல்லுவோம். இறை வழிபாடு செய்வோம். உங்களுக்கும் முருகனை வழிபாடு செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. பெரிய பெரிய பாடல்கள் எல்லாம் படிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இருந்தாலும் அதற்கு நேரம் கிடைக்கவில்லை என்று தோன்றினால், கவலை படாதீங்க.
தினமும் முருகனுக்கு இரண்டு பூக்களை சமர்ப்பணம் செய்துவிட்டு, பின் சொல்லக்கூடிய இந்த மந்திரத்தை படித்தாலே போதும். முருகனைப் போற்றிப் பாடி அர்ச்சித்த பலன் உங்களை வந்து சேரும். தினமும் செய்ய முடியவில்லை. செவ்வாய்க்கிழமை கிருத்திகை சஷ்டி தினத்திலாவது இந்த வழிபாட்டை செய்யுங்கள். முருகனின் அருள் உங்களுக்கு கிடைக்கும். நிறைய நல்லது நடக்கும். நிறைய கஷ்டங்கள் உங்களை விட்டு தானாக விலக துவங்கும். அது என்ன மந்திரம்.
முருகன் போற்றி
ஓம் சரவணா போற்றி !
ஓம் சண்முகா போற்றி !
ஓம் கந்தா போற்றி !
கடம்பா போற்றி !
ஓம் கார்த்திகையா போற்றி !
ஓம் முருகா போற்றி போற்றி !
முதலில் முருகனைப் போற்றி இந்த வரிகளை படித்துவிட்டு, பிறகு இந்த ஒரு வரி மந்திரத்தை சொன்னால் போதும். பல முருகன் பாடல்களைப் படித்த புண்ணியம் உங்களை வந்து சேரும். “ஓம் நமோ குமாராய நமஹ !” சிவபெருமானே தன்னுடைய வாயால் முருகனுக்கு சொன்ன மந்திரம் தான் இந்த ஒரு வரி மந்திரம். அதற்காக திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, வேல்மாறல், கந்த சஷ்டி கவசம் இவைகளை எல்லாம் படிக்கவே தேவையில்லை என்று சொல்ல வரவில்லை.
இதையும் படிக்கலாமே: 3-3-2025 மைத்ரேய முகூர்த்த நேரம் எப்போது?
மாதத்தில் ஒருநாளோ இரண்டு நாளோ அப்படிப்பட்ட பெரிய பெரிய பாடல்களை நேரம் ஒதுக்கி படிக்கலாம். தவறு கிடையாது, அல்லது நேரம் இருப்பவர்கள் தினம் தினம் கூட இந்த பாடலை எல்லாம் படிக்கலாம். நேரம் இல்லை என்பவர்கள் இறைவனின் பாதத்தை சரணடைய இந்த எளிமையான பதிவும், மந்திரமும் உங்களுக்கு பயனுள்ளபடி அமையட்டும் என்ற தகவலுடன் இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.