ஆரோக்கியமான முருங்கைக்கீரையை அசத்தலான சுவையில் ஒருமுறை இப்படி செய்து குடுங்க. கீரையே சாப்பிடாத குழந்தைங்க கூட இன்னும் கொஞ்சம் கொடுங்கன்னு கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.

murunai keerai sadam
- Advertisement -

பொதுவாகவே தினமும் ஒரு கீரையை சாப்பிட வேண்டும் . அதிலும் இரும்புச் சத்து அதிகம் கொண்ட இந்த முருங்கைக் கீரையை வாரம் ஒரு முறையாவது கட்டாயமாக நம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இது நம் உடலுக்கு பல நன்மைகளை தருகிறது இருப்பினும் குழந்தைகள் இதை அதிகம் விரும்பி உண்பதில்லை. இந்த சமையல் குறிப்பு பதிவில் நாம் குழந்தைகள் விரும்பும் வகையில் முருங்கைக்கீரை வைத்து சாதம் செய்வது எப்படி என்று தான் பார்க்க போகிறோம்.

செய்முறை

இந்த சுத்தம் செய்வதற்கு முதலில் முருங்கைக் கீரையை நன்றாக சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து 2 கப் அரிசி, 1/2 கப் பாசிப்பருப்பு எடுத்து 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் 6 கப் அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும். (இதை பாத்திரத்தில் சமைப்பதாக இருந்ந்தால் 2 1/2 கப் அளவிற்கு 6 கப் அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும்.

- Advertisement -

இதே நீங்கள் குக்கரில் செய்வதாக இருந்தால், ஒன்றிற்கு 2 என்ற வீதத்தில் தண்ணீரை சேர்த்துக் கொள்ளலாம்.) தண்ணீர் நன்றாக கொதித்த பிறகு நாம் ஊற வைத்திருக்கும் அரிசி பாசிப்பருப்பை இரண்டையும் அதில் சேர்க்க வேண்டும்.

அரிசியும், பாசிப்பருப்பும் பாதி அளவு வெந்த பிறகு அதில் 1 டீஸ்பூன் சோம்பு, 1/2 டீஸ்பூன் சீரகம், 1/2 டீஸ்பூன் மிளகு மற்றும் 15 பல் பூண்டை ஒன்றிரண்டாக நறுக்கி அதில் சேர்க்க வேண்டும். மேலும் 3 தக்காளியை நறுக்கி சேர்க்க வேண்டும். அத்துடன் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூளை சேர்க்க வேண்டும்.

- Advertisement -

அரிசி முக்கால் பதத்திற்கு வெந்த பிறகு அதில் நாம் சுத்தம் செய்து வைத்திருக்கும் முருங்கைக் கீரையை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். ஐந்து நிமிடம் அடுப்பில் வைத்திருந்து பிறகு அதில் ஒரு டீஸ்பூன் மிளகாய்த் தூள் மற்றும் சாதத்திற்கு தேவையான அளவு உப்பை அதில் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். இவையெல்லாம் வெந்த பிறகு அடுப்பை அணைத்து விட்டு ஒரு தட்டை வைத்து மூடி வைத்து விட வேண்டும்.

அடுத்ததாக ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, 1 டீஸ்பூன் கடுகை சேர்த்து 15 சின்ன வெங்காயத்தை நறுக்கி அதையும் சேர்த்து 3 காய்ந்த மிளகாயை இரண்டாக கிள்ளி போட்ட பிறகு ஒரு கொத்து கருவேப்பிலையை அதில் போட்டு நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு இந்த தாளித்த பொருட்களை சாதத்துடன் சேர்த்து, அதனுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை ஒரு கைப்பிடி அளவு சேர்க்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: மோர் கறி ரெசிபி

இவையெல்லாம் சேர்த்த பிறகு அதை நன்றாக கிளறி விட வேண்டும். அவ்வளவு தான் சுவையான அருமையான சத்தான முருங்கைக் கீரை சாதம் தயாராகி விட்டது. வாசனைக்காக இதில் நாம் கொஞ்சம் நெய்யையும் சேர்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி தரும் இந்த முருங்கை கீரை சாதத்தை அடிக்கடி செய்து சாப்பிடுங்கள் .

- Advertisement -