எந்த எண்ணெய் தேய்த்தாலும் தலைமுடி கொட்டுவது நிற்கவில்லையா? கொத்து கொத்தாக கொட்டும் தலைமுடி உதிர்வை தடுத்து நிறுத்த தினமும் 1 டம்ளர் இதை பருகுங்கள்!

katrazhai-juice-hair
- Advertisement -

என்னதான் நாம் விதவிதமான எண்ணெய்களை வாங்கி தலைக்கு தேய்த்து வந்தாலும் தலைமுடி உதிர்வது மட்டும் நின்ற பாடு இல்லை என்பவர்களுக்கு உடலுக்கு வெளியே மட்டுமல்லாமல் உடலுக்கு உள்ளேயும் ஊட்டச்சத்துக்கள் தேவை என்பது தெரிய வேண்டும். உள்ளுக்கு எடுத்துக் கொள்ளும் உணவு ரொம்பவும் முக்கியம். மாறிவரும் காலத்திற்கு ஏற்ப நம்மை நாம் பழகிக் கொள்வதால் பாரம்பரியம் மறக்கப்படுகிறது.

இதனால் உடல் உஷ்ணம் அதிகரித்து, தலைமுடி உதிர்வும் வேகமாக நடைபெறுகிறது. இதிலிருந்து நம்மை எளிதாக பாதுகாக்க இந்த ஒரு ஜூஸ் ரொம்பவே உதவியாக இருக்கும். இதை எளிதாக நம் வீட்டில் தயாரிப்பது? எப்படி இதை எடுத்துக் கொள்ள வேண்டும்? என்பதைத் தான் இந்த அழகு குறிப்பு சார்ந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

நம் உடலில் இருக்கக்கூடிய அதீத உஷ்ணம் காரணமாக பல்வேறு பிரச்சனைகளுக்கு இன்று ஆளாகி கொண்டிருக்கிறோம். சிறுநீரக பிரச்சனை, தலைமுடி வேகமாக உதிர்வது, வழுக்கை தலை விழுவது, வயிற்று உபாதைகள் போன்றவற்றிலிருந்து எளிதாக நாம் விடுபடுவதற்கு இந்த ஒரு பானம் மிகச் சிறந்த பாரம்பரிய ஆரோக்கிய பானமாக இருக்கிறது.

நம் வீட்டிலேயே நல்ல முறையில் தயாரிக்க கற்றாழை மடல் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். கற்றாழை மடலில் இருக்கக்கூடிய மேற்பகுதியை நீக்கிவிட்டு உள்ளே இருக்கும் ஜெல் போன்ற பகுதியை ஆறிலிருந்து ஏழு முறை நன்கு கழுவி அலசி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

கற்றாழையை நன்கு கழுவினால் தான் மேற்புறம் இருக்கக்கூடிய லேசான விஷத்தன்மை நீங்கும். இதில் வடியும் மஞ்சள் நிற திரவம் விஷத்தன்மை கொண்டது ஆகும். இது அலர்ஜி, அரிப்பு போன்றவற்றை ஏற்படுத்தலாம். இது போன்ற நன்கு சுத்தம் செய்யப்பட்ட கற்றாழை ஜெல்லை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு மிக்சர் ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் ஒரு கப் அளவிற்கு தயிர் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பின் ஒரு கைப்பிடி புதினா இலைகளை நன்கு அலசி சுத்தம் செய்து சேருங்கள். தலைமுடி உதிர்வுக்கு அரை கைப்பிடி அளவிற்கு பச்சையாக இருக்கக்கூடிய கருவேப்பிலையை நன்கு சுத்தம் செய்து சேர்க்க வேண்டும். பின்னர் இவற்றுடன் ஒரு சிறு துண்டு இஞ்சியை தோல் நீக்கி குட்டி குட்டியாக பொடித்து நறுக்கி சேர்க்கவும்.

- Advertisement -

இதோடு கொஞ்சம் போல உப்பு சேர்த்து தேவையான அளவுக்கு தண்ணீர் ஊற்றி நைஸ் ஆக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அரைத்து எடுத்ததை ஒரு டம்ளரில் ஊற்றி அப்படியே காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம் அல்லது நீங்கள் காலை உணவு எடுத்துக் கொண்ட ஒரு மணி நேரத்திற்கு பின்பு சாப்பிடலாம். இப்படி குடிப்பதால் உடலில் இருக்கக்கூடிய அதிக உஷ்ணத்தன்மை குறைந்து குளிர்ச்சியுரும்.

இதையும் படிக்கலாமே:
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இந்த பொடியை மூன்று முறை மட்டும் இப்படி பயன்படுத்தி வந்தால் போதும் நீங்க நாள் முழுவதும் தேடினாலும் ஒரு நரை முடியை கூட கண்டுபிடிக்கவே முடியாது

இதனால் பல்வேறு நலன்கள் நமக்கு இயற்கையாகவே ஏற்படுகின்றது. உடலுக்கு உள்ளே கொடுக்கக் கூடிய இந்த ஒரு சத்துக்கள் நிறைந்த பானத்தினால் நமக்கு உச்சந்தலையில் ரத்த ஓட்டம் அதிகரித்து, வறட்சித் தன்மை நீங்கி இழந்த முடியை மீண்டும் இழந்த இடத்திலிருந்து முளைக்க செய்ய தூண்டுகிறது. இதனால் வேகமாக முடி வளரும். நீங்களும் தொடர்ந்து இதை பருகி உடலையும், தலைமுடியையும் பாதுகாப்பாக வைத்திருங்கள்.

- Advertisement -