5 நிமிஷத்துல மஸ்ரூம்ல இப்படி ஒரு சூப்பரான ஃப்ரை செய்யலாம்ன்னு இது வரைக்கும் நீங்க கேள்விப்பட்டிருக்க கூட மாட்டீங்க. சப்பாத்தி, பரோட்டா வெரைட்டி ரைஸ் எல்லாத்துக்கும் செம்மையான ஒரு பெஸ்ட் சைடு டிஷ்.

mushroom fry
- Advertisement -

மஸ்ரூமை பொறுத்த வரையில் சைவ பிரியர்களுக்கு இது ஒரு பெரிய வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு இந்த மஷ்ரூமை வைத்து விதவிதமாக அதே நேரத்தில் பலவித மசாலாக்கள் சேர்த்து சுவையாக சமைக்க கூடிய ஒரு உணவு. இப்போது இந்த சமையல் குறிப்பு பதிவில் மஷ்ரூம் வைத்து மிகவும் எளிமையாக அதே நேரத்தில் சுவையாக செய்யக் கூடிய ஒரு மஷ்ரூம் ப்ரை ரெசிபியை எப்படி செய்வது என்பது பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

தேவையான பொருட்கள்

மஸ்ரூம் – 200 கிராம், பட்டர் – 1 டேபிள் ஸ்பூன், நெய் -1 டேபிள் ஸ்பூன், மிளகு தூள் – 2 ஸ்பூன், உப்பு-1/2 ஸ்பூன், காஷ்மீரி மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன், பூண்டு பல் – 20 தோலுரித்தது.

- Advertisement -

இந்த ரெசிபி செய்வதற்கு மஸ்ரூமை நாம் எப்போதும் போல நறுக்கி செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. மஸ்ரூம் கீழே இருக்கும் காம்பு போன்ற பகுதியை மட்டும் நறுக்கி விட்டால் போதும். அதை அப்படியே முழுதாகவே சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து உரித்து வைத்த பூண்டை இடி உரலில் சேர்த்து நன்றாக நசுக்கி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதை மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டாம்.

செய்முறை

அடுப்பில் பேனை வைத்து சூடானதும் பட்டர், நெய் இரண்டையும் சேர்த்த பிறகு நசுக்கி வைத்து பூண்டை அதில் சேர்த்து ஒரே ஒரு நிமிடம் மட்டும் வதக்கிக் கொள்ளுங்கள். அதன் பிறகு சுத்தம் செய்து வைத்த மஸ்ரூமை சேர்த்து உப்பையும் சேர்த்து ஒரு முறை பிரட்டி விடுங்கள்.

- Advertisement -

இது இரண்டும் ஒரே ஒரு நிமிடம் மட்டும் கிளறி விட்டால் போதும். அதன் பிறகு மிளகு, காஷ்மீரி சில்லி இரண்டையும் சேர்த்து மீண்டும் ஒரு முறை நன்றாக கலந்து அப்படியே விட்டு விடுங்கள். மூடி போட்டு வேக வைக்க வேண்டாம், தண்ணீரும் ஊற்ற வேண்டாம். மஷ்ரூமில் இருந்து தண்ணீர் விடும் அந்த தண்ணீரே இது வெந்து வர சரியாக இருக்கும்.

இதை நாம் இடையிடையே கைவிடாமல் கொஞ்சம் கிளறிக் கொண்டிருந்தால் மட்டும் போதும். இந்த மஷ்ரூமில் பூண்டு, மிளகு, உப்பு காரம் அனைத்தும் இறங்கி நல்ல ஒரு அருமையான சைடு டிஷ் தயார். இந்த மஸ்ரூம் கார்லிக் ஃப்ரை நம் எல்லா விதமான வெரைட்டி ரைஸ்க்கும் வைத்து சாப்பிடலாம். சப்பாத்தி பரோட்டா போன்ற டிபன் வகைகளுக்கும் வைத்து சாப்பிட நன்றாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: உளுந்து இல்லாமல், மாவு அரைக்காமல், நினைத்த உடனேயே இப்படி கூட மெதுவடை செய்து சாப்பிடலாமா? இப்படி ஒரு மொறு மொறு மெதுவடையை யாரும் வாழ்நாளில் செஞ்சிருக்கவே மாட்டீங்க.

இதில் மசாலாக்களோ, கிரேவியோ அதிகம் இல்லாதால் இதை ஒரு ஸ்னாக்ஸ் ஆக கூட குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம். இதன் சுவை மிகவும் பிரமாதமாகவே இருக்கும். இவ்வளவு சுவையான ஒரு ரெசிபியை இவ்வளவு சீக்கிரமாக முடியும் என்பதை நீங்களும் ஒரு முறை முயற்சி செய்து தான் பாருங்களேன்.

- Advertisement -