உளுந்து இல்லாமல், மாவு அரைக்காமல், நினைத்த உடனேயே இப்படி கூட மெதுவடை செய்து சாப்பிடலாமா? இப்படி ஒரு மொறு மொறு மெதுவடையை யாரும் வாழ்நாளில் செஞ்சிருக்கவே மாட்டீங்க.

vadai1
- Advertisement -

உளுந்து சேர்க்காமல் விதவிதமாக இன்ஸ்டன்ட் ஆக நிறைய மெதடில் மெதுவடை செய்து சாப்பிட முடியும். அந்த வரிசையில் இன்று முற்றிலும் வித்தியாசமான ஒரு வடை ரெசிபியை தான் பார்க்கப் போகின்றோம். இது பார்ப்பதற்கு மெதுவடை போலவே இருக்கும். ஆனால் உளுந்து மாவில் செய்தது கிடையாது. ரவை உருளைக்கிழங்கை வைத்து தான் இந்த வடையை செய்யப் போகின்றோம். ஈவினிங் டீ டைமுக்கு இப்படி கூட ஸ்னாக்ஸ் செய்து சாப்பிடலாம். ருசியா இருக்கும். இந்த வடைக்கு தொட்டுக் கொள்ள புதினா சட்னி, கொத்தமல்லி சட்னி, தேங்காய் சட்னி, அல்லது எதுவுமே இல்லை என்றால் டொமேட்டோ சாஸ் வைத்து பரிமாறி பாருங்கள். குழந்தைகள் விரும்பி விரும்பி சாப்பிடுவார்கள். வாங்க இந்த இன்ஸ்டன்ட் வடையை எப்படி செய்வது என்று நாமும் பார்க்கலாம்.

செய்முறை

முதலில் இரண்டு உருளைக்கிழங்குகளை எடுத்து தோல் சீவி, துருவலில் நன்றாக துருவிக் கொள்ளுங்கள். ஒரு கிண்ணத்தில் உருளைக்கிழங்கு துருவலை போட்டு, தண்ணீர் ஊற்றி இரண்டு முறை அலசி எடுத்து விடுங்கள். கிழக்கில் இருக்கும் வெள்ளை மாவு எல்லாம் நீங்கிவிடும். பிறகு இந்த துருவிய உருளைக்கிழங்கை தண்ணீரிலேயே போட்டு வையுங்கள். அப்படியே கருக்காமல் இருக்கட்டும்.

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் 1 ஸ்பூன் ஊற்றி, அதில் சீரகம் 1 ஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 1, சில்லி ஃபிளக்ஸ் 1 ஸ்பூன், கருவேப்பிலை 1 கொத்து போட்டு, 2 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றவும். இந்த தண்ணீரில் தேவையான அளவு உப்பு போட்டு, துருவிய உருளைக்கிழங்கை தண்ணீரில் போட்டு வைத்திருக்கிறோம் அல்லவா, அந்த உருளைக்கிழங்கை தண்ணீர் இல்லாமல் நன்றாக பிழிந்து, கடாயில் கொதித்துக் கொண்டிருக்கும் தண்ணீரில் போட்டு கொள்ளவும்.

உருளைக்கிழங்கு போட்ட உடன் ஒரு சில நொடிகளில் தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும். அப்போது, 1 டம்ளர் அளவு ரவையை இதோடு கொட்டி கட்டிகள் இல்லாமல் கலந்து, ரவை கெட்டியாக வந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள். (1 டம்ளர் ரவைக்கு, 2 டம்ளர் தண்ணீர் சரியான அளவாக இருக்கும். கடாயில் கொதிக்கும் தண்ணீரில் ரவை உருளைக்கிழங்கு எல்லாம் சேர்த்து அரை பாகம் வெந்துவிடும்.)

- Advertisement -

ரவை இரண்டு நிமிடத்தில் தண்ணீரையெல்லாம் உறிஞ்சி வெந்து கட்டிபட்டு விடும். அடுப்பை அணைத்து ஒரு மூடி போட்டு இரண்டு நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள். இப்போது இந்த மாவு கை பொறுக்கும் சூடு வரும் அளவிற்கு ஆறட்டும். பிறகு உங்களுடைய கையை ஈரத்தில் நனைத்துக்கொண்டு இந்த மாவை கட்டிகள் இல்லாமல் சப்பாத்தி மாவு போல பிசைந்து கொள்ளுங்கள். வடை சுடுவதற்கு மாவு தயார். இந்த மாவை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி உள்ளங்கைகளில் வைத்து அழுத்தி நடுவே ஒரு ஓட்டை போட்டு எல்லா மாவையும் வடையாக தயார் செய்து கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: எவ்வளவு வயதானாலும் எலும்பு தேய்மான பிரச்சனை வராமல் இருக்க வாரம் ஒரு முறையாவது ராகி இட்லி இப்படி சுலபமாக செய்து சாப்பிடலாமே! 4 பொருள் இருந்தா பஞ்சு போல ராகி இட்லி ரெடி!

பிறகு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடு செய்து தயார் செய்த வடைகளை எல்லாம் போட்டு கடகடவென பொறித்து எடுத்தால் சூப்பரான ஸ்நாக்ஸ் தயார். இது ரொம்ப ரொம்ப ஈஸி ரெசிபி. மொறுமொறுப்பான ரெசிபி. குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பிடித்த ரெசிபி. எண்ணெய் கூட நிறைய குடுக்காது. ஒருமுறை உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -