ரோட்டோர கடைகளில் விற்கும் காளான் மசாலா! நம்முடைய வீட்டிலேயே எப்படி செய்வது?

musroom
- Advertisement -

ரோட்டோர கடைகளில் விற்கும், மஷ்ரூம் மசாலாவை, விரும்பி சாப்பிடும் மசாலா பிரியர்கள் நிறைய பேர்! அதே மஷ்ரூம் மசாலாவை, நம் வீட்டில் ஆரோக்கியமான முறையில், அதே சுவையோடு, எந்தவிதமான சாஸ்ஸும் சேர்க்காமல், எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இப்படிப்பட்ட மசாலா பொருட்களை கடையில் வாங்கினால் தான் ருசி அதிகம், என்பது நம்மில் பலரது கருத்து. அந்த ரோட்டுக்கடை சுவை கொஞ்சம் கூட மாறாமல் நம் வீட்டிலும் செய்யலாமே!

mushroom_3

Step 1:
முட்டைகோஸ் – 200 கிராம், காளான் – 200 கிராம், மைதா – 100 கிராம், சோள மாவு (கான்பிளவர் மாவு) – 25 கிராம், கரம்மசாலா – 1 ஸ்பூன், காஷ்மீரி மிளகாய்த் தூள் –  1 டேபிள் ஸ்பூன், உப்பு தேவையான அளவு.

- Advertisement -

முதலில் முட்டைகோஸையும், காலனையும் நன்றாக கழுவி, பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பாக ஒரு அகலமான பாத்திரத்தில் நறுக்கி வைத்திருக்கும் முட்டைகோஸ், நறுக்கி வைத்திருக்கும் காளான், மைதா, சோள மாவு, காஷ்மீரி மிளகாய் தூள், கரம் மசாலா, தேவையான அளவு உப்பு சேர்த்து, உங்கள் கைகளாலேயே நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். தண்ணீர் ஊற்ற தேவையில்லை. தேவைப்பட்டால் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளலாம். உப்பு சேர்த்து பிசையும்போது, தானாகவே தண்ணீர் விடும் என்பது குறிப்பிடத்தக்கது. மசால்வடை மாவு போல, இந்த கலவை தயாராகி இருக்கும்.

musroom2

Step 2:
அடுத்ததாக அடுப்பில் கடாயை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தயாராக வைத்திருக்கும் இந்த கலவையை, சிறு சிறு உருண்டைகளாக எடுத்து, லேசாக தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும். உருண்டைகளாகப் போட்டும் பொரித்து எடுக்கலாம். உள்ளே வேக கொஞ்சம் நேரம் எடுக்கும் என்பதால், அந்த உருண்டையை, இலேசாக ஒரு அழுத்து அழுத்தி, எண்ணெயில் போட்டு பொரித்து, எடுத்தீர்கள் என்றால், இரண்டே நிமிடத்தில் மொரு மொரு மஷ்ரூம், முட்டை கோஸ் வடை தயாராகிவிடும். இது அப்படியே ஒரு ஓரமாக இருக்கட்டும்.

- Advertisement -

Step 3:
இப்போது அடுப்பில் மற்றொரு கடாயை வைத்து விட்டு, ஒரு டேபிள்ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய 2 பெரிய வெங்காயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். வெங்காயம் வதங்கும் போது, இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 ஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 2, கறிவேப்பிலை, இவைகளை சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள்.

musroom1

புளிபிற்காக தக்காளி சாஸ் எதுவுமே சேர்க்க வேண்டாம். மீடியம் சைஸ் உள்ள 3 தக்காளியை மிக்ஸியில் நன்றாக அரைத்து, அந்த விழுதை, வழங்கிக்கொண்டிருக்கும் வெங்காயத்தோடு சேர்த்து விடுங்கள். இப்போது, இந்த கிரேவிக்கு தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா பொடி, சேர்த்து தொக்கு பதத்திற்கு வரும் வரை, நன்றாக வதக்க வேண்டும். அதாவது தக்காளியின் பச்சை வாடையும், மசாலா பொருட்களின் பச்சை வாடையும், முழுமையாக போக வேண்டும்.

- Advertisement -

musroom3

இறுதியாக பொரித்து வைத்திருக்கும் முட்டைகோஸ் காலன் வடைகளை, இரண்டு மூன்றாக உங்கள் கைகளாலேயே கிள்ளி, இந்த மசாலாவில் சேர்த்து ஐந்திலிருந்து, ஏழு நிமிடங்கள் வரை நன்றாகக் கிளறி இறக்கி கொள்ள வேண்டும். இப்போது சூப்பரான ரோட்டுக்கடை மஷ்ரூம் மசாலா தயாராகி விட்டது. இப்போது பரிமாறும் போது சிறிய கிண்ணத்தில் மஷ்ரூம் மசாலாவைப் போட்டு, அதன் மேலே பொடியாக நறுக்கிய பச்சை வெங்காயம் தூவி, கொத்தமல்லி தழையை தூவி சாப்பிட வேண்டியதுதான்.

இதையும் படிக்கலாமே
ஒவ்வொரு தமிழ் மாத பிரதோஷ தினத்திலும் எதை நிவேதனமாக படைத்தால்! என்ன நன்மைகள் நடக்கும்? என்பதை நீங்களும் தெரிஞ்சுக்கணுமா?

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -