நரம்பு சம்மந்தமான பிரச்சனைகள் நீங்க முஷ்டி முத்திரை

narambu-vali

பொதுவாக மனிதர்களின் உடலுறுப்புகள் அனைத்தும் நன்கு செயல்பட அவர்களின் உடல் முழுவதும் உள்ள நரம்புகள் வலுவாக இருக்க வேண்டும். இன்று மன அழுத்தம் மற்றும் வேறு பல காரணங்களால் பலருக்கும் “நரம்பு தளர்ச்சி” குறைபாடு ஏற்படுகிறது. அதை போக்குவதற்கான முத்திரை தான் இந்த “முஷ்டி முத்திரை”. அதை எப்படி செய்ய வேண்டும் என்பதை இங்கு காண்போம்.

muthirai
நரம்பு வலி நீங்க முத்திரை

முத்திரை செய்யும் முறை:

முதலில் உங்கள் முதுகும், கழுத்தும் நேராக இருக்கும் வகையில் தரையில் சம்மணமிட்டு அமர்ந்து கொள்ளவேண்டும். பிறகு உங்கள் இரு கைகளையும் உங்கள் தொடைகளின் மீது வைத்துக் கொள்ளவேண்டும். இப்போது உங்கள் இருகைகளிலும் உள்ள விரல்கள் அனைத்தையும் முடக்கம் மேலே உள்ள படத்தில் காட்டியவாறு வைத்துக்கொள்ள கொள்ளவேண்டும்.

இப்போது உங்கள் கண்களை மூடிக்கொண்டு, மூச்சுக்காற்றை மெதுவாகவும், ஆழமாகவும் உள்ளுக்கு சுவாசிக்க வேண்டும். பின்பு மெதுவாக மூச்சை வெளியிட வேண்டும். இதே முறையில் இந்த பயிற்சியை தினமும் காலையிலும், மாலையிலும் 15 முதல் 20 நிமிடங்கள் வரை செய்ய வேண்டும்.

yoga

பலன்கள்:
இம்முத்திரையை செய்து வருவதால் நம் உடலிலுள்ள நரம்புகள் அனைத்தும் வலு பெற்று நரம்பு தளர்ச்சி நீங்கும். உடலில் ஏற்பட்டிருந்த சோர்வு நீங்கும். மூளை புத்துணர்ச்சி அடைந்து சிந்திக்கும் ஆற்றல் மேம்படும். உங்கள் மனதிலிருந்த கோப எண்ணங்கள் நீங்கி மனம் அமைதியடையும்.

இதையும் படிக்கலாமே:
சுவாசம் சம்மந்தமான அனைத்து நோய்களையும் தீர்க்கும் முத்திரை பற்றி தெரியுமா ?

இது போன்ற மேலும் பல யோக முத்திரைகள் மற்றும் சித்த மருத்துவ குறிப்புக்கள் பலவற்றை அறிய தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.

English Overview:
Here we described Narambu thalarchi treatment. It is actually a mudra which can recover all nervous problems.