சுவாசம் சம்மந்தமான அனைத்து நோய்களையும் தீர்க்கும் முத்திரை பற்றி தெரியுமா ?

swasa-mudra

பூமியிலுள்ள மற்ற எல்லா உயிர்களையும் போல மனிதனும் காற்றை சுவாசித்தே உயிர்வாழ்கிறான். ஆனால் மனிதனுக்கு மட்டும் பல வித காரணங்களால் சுவாச சம்பந்தமான நோய்கள் ஏற்படுகிறது. அப்படி சுவாச சம்பந்தமான குறைபாடுகளை கலையும் முத்திரை தான் இது.

swasa muthirai

முத்திரை செய்யும் முறை:
முதலில் உங்கள் முதுகும், கழுத்தும் நேராக இருக்கும் வகையில் தரையில் சம்மணமிட்டு அமர்ந்து கொள்ளவேண்டும். பிறகு உங்கள் இரு கைகளையும் உங்கள் தொடைகளின் மீது வைத்துக் கொள்ளவேண்டும். இப்போது உங்கள் இரு கைகளிலும் உள்ள நடுவிரல்கள், உங்கள் கட்டைவிரல்களுடன் தொட்டுக்கொண்டிருக்குமாறு வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் ஆட்காட்டி விரல்கள் வெளிப்புறமாக நீட்டிக்கொண்டிருக்க வேண்டும். உங்களின் மோதிர மற்றும் சுண்டு விரல்களை மடக்கி கட்டைவிரல்களின் அடியை மேலே உள்ள படத்தில் காட்டிய படி தொட்டிருக்குமாறு வைத்துக் கொள்ளவேண்டும்.

இப்போது உங்கள் கண்களை மூடிக்கொண்டு, மூச்சுக்காற்றை மெதுவாகவும், ஆழமாகவும் உள்ளுக்கு சுவாசிக்க வேண்டும். பின்பு மெதுவாக மூச்சை வெளியிட வேண்டும். இதே முறையில் இந்த பயிற்சியை தினமும் காலையிலும், மாலையிலும் 15 முதல் 20 நிமிடங்கள் வரை செய்ய வேண்டும்.

Thiyanam

பலன்கள்:

இம்முத்திரையை தொடர்ந்து செய்வதால் சுவாச சம்பந்தமான நோய்கள் குறைபாடுகள், நீங்கி சுவாச இயக்கம் நன்கு நடைபெறும். நுரை ஈரல்கள் தூய்மையாகி வலுப்பெறும். ஆஸ்துமா போன்ற நோய்கள் சில வாரங்களில் கட்டுக்குள் வரும். உடலின் வாதத்தன்மையின் சமநிலையை காக்கும். மனவலிமை மனோதிடம் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
அனைத்து விதமான தலைவலிகளும் நீங்க முத்திரை

இது போன்று மேலும் பல நோய் தீர்க்கும் முத்திரைகள், யோக முத்திரைகள் என பலவற்றை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.