சுவையான ரவை இனிப்பு போண்டா 5 நிமிடத்தில் எப்படி சுட்டு எடுப்பது? பாட்டி காலத்து ரவை பணியாரம் இப்படித்தான் செய்யணும்!

- Advertisement -

ரவை இனிப்பு போண்டா உள்ளே மெத்தென்று சாப்ட் ஆகவும் வெளியே மொறு மொறு என்று கிரிஸ்பியாகவும் இருக்கக்கூடிய ஒரு ரெசிபியாக இருக்கிறது. நம்முடைய பாட்டி காலத்தில் இப்படித்தான் ரவை வைத்து பணியாரம் எல்லாம் செய்து கொடுப்பது உண்டு. ஆனால் இன்று பெரும்பாலும் இதை மறந்து போய்விட்டோம் என்று கூறலாம். ஒரு கப் ரவை இருந்தாலே சட்டுனு அசத்தலாக சுவையான மொறு மொறு இனிப்பு ரவை போண்டா ரெசிபி இப்படியும் செய்யலாமே!

ரவை இனிப்பு போண்டா செய்ய தேவையான பொருட்கள்:
ரவை – 200 கிராம், பொடித்த வெல்லம் – 200 கிராம், துருவிய தேங்காய் – கால் கப், ஏலக்காய் தூள் – கால் டீஸ்பூன், உப்பு – இரண்டு சிட்டிகை, எண்ணெய் – தேவையான அளவு.

- Advertisement -

ரவை இனிப்பு போண்டா செய்முறை விளக்கம்:
ஒரு கப் ரவையை எடுத்துக் கொள்ளுங்கள். வறுக்காத ரவையாக இருந்தாலும் பரவாயில்லை. நீங்கள் எந்த கப்பில் ரவையை அளந்து எடுத்தீர்களோ, அதே கப் அளவிற்கு தண்ணீர் எடுத்து ஊற்றி ரவையை நன்கு ஊற வைக்க வேண்டும். பத்து நிமிடத்திற்கு பிறகு தண்ணீர் எல்லாம் உறிஞ்சி கொண்டிருக்கும்.

ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நீங்கள் இந்த ஊற வைத்த ரவையை சேர்க்க வேண்டும். இதனுடன் வாசனைக்காக ஏலக்காய் தூளும் சேர்த்துக் கொள்ளுங்கள். பின் இரண்டு சிட்டிகை அளவிற்கு உப்பு மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் துருவி வைத்துள்ள தேங்காய் துருவல் அல்லது தேங்காய் சில்லுகளை நறுக்கியும் நீங்கள் சேர்க்கலாம்.

- Advertisement -

பிறகு நீங்கள் பொடித்த வெல்லத்தையும் இதனுடன் சேர்த்துக் கொள்ளலாம், எனவே பெரிய மிக்ஸி ஜாராக பார்த்து எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் பொடித்து வைத்த வெல்லம் சுத்தமானதாக இருக்கிறதா? என்பதை சோதித்துக் கொள்ளுங்கள். இப்போது மிக்ஸியை இயக்கி நைசாக மாவு போல அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி நன்கு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அடுப்பை மீடியம் ஃபிளேமில் வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
சால்னாவை ஒரு முறை இப்படி வித்தியாசமா செஞ்சு பாருங்க. இனி பரோட்டாக்கு சிக்கன் குருமாவே இருந்தா கூட இந்த சால்னாவை தான் சைடிஷ் ஷா கேப்பாங்க.

பின்னர் நீங்கள் அரைத்து வைத்துள்ள ரவை இனிப்பு போண்டா மாவில் இருந்து ஒவ்வொரு கரண்டியாக எடுத்து போண்டா போல ஊற்றுங்கள் அல்லது நீங்கள் கைகளிலும் சிறு சிறு போண்டாக்களாக எடுத்துப் போடலாம். எல்லா புறமும் பொன்னிறமாக சிவக்க வெந்து வந்த பின்பு எண்ணெயை வடிகட்டி ஒரு டிஷ்யூ பேப்பர் அல்லது நியூஸ் பேப்பரில் வைத்து விடுங்கள். எண்ணெய் அதில் உறிஞ்சி கொள்ளும். அவ்வளவுதாங்க சுட சுட சூப்பரான ரவை இனிப்பு போண்டா மொறு மொறுன்னு உள்ளேயும், வெளியே மிருதுவாகவும் இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க உங்களுக்கு ரொம்பவே பிடிக்கும். இது பாரம்பரியமாக நம்முடைய பாட்டிமார்கள், தாய்மார்கள் செய்து வரும் ஒரு எளிய பணியார வகை தான். நீங்களும் செஞ்சு பார்த்து உங்களுடைய குழந்தைகளுக்கும் கொடுத்து அசத்துங்கள்.

- Advertisement -