முட்டை கிரேவியை ஒரு முறை இப்படி செஞ்சி பாருங்க கறி குழம்பு தோத்துப் போயிடும் அந்த அளவுக்கு செம டேஸ்ட்டா இருக்கும். டிபன் சாப்பாடு என எல்லாத்துக்கும் பக்காவான சைடிஷா இருக்கும் மிஸ் பண்ணாம ட்ரை பண்ணுங்க.

egg gravy rice
- Advertisement -

அசைவம் சமைக்க முடியாத நேரத்தில் முட்டையை வைத்து ஏதாவது செய்து சாப்பிட்டால் கூட ஒரு அசைவ சமையலை சாப்பிட்ட திருப்தி கிடைத்து விடும். இந்த முட்டையை வைத்து அசைவ குழம்பே தோற்றுப் போகக் கூடிய வகையில் சூப்பரான ஒரு கிரேவியை எப்படி செய்வது என்று தான் இப்போது இந்த சமையல் குறிப்பு பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

செய்முறை

இந்த கிரேவி செய்வதற்கு முதலில் ஆறு முட்டையை வேக வைத்து எடுத்து பிறகு தோலுரித்து மேலே சின்ன சின்னதாக கீறல் போட்டு தனியாக வைத்து விடுங்கள். அதன் பிறகு இரண்டு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது இந்த கிரேவிக்கு ஒரு மசாலாவை தயார் செய்ய வேண்டும். அதற்கு மிக்ஸி ஜாரில் இரண்டு பெரிய தக்காளியை மீடியம் சைஸில் நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். அத்துடன் இரண்டு பச்சை மிளகாய், ஒரு கைப்பிடி கொத்தமல்லி, இதில் கொத்தமல்லியை அரைத்து ஊற்றும் போது குழம்பின் சுவை மிகவும் அருமையாக இருக்கும். இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைத்து அப்படியே வைத்து விடுங்கள்.

இப்போது குழம்பை தாளித்து விடலாம். அதற்கு அடுப்பில் கடாய் வைத்து நாலு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடான பிறகு 2 லவங்கம், 1 துண்டு பட்டை, 2 பிரிஞ்சி இலை, 1நட்சத்திர பூ, 1 ஸ்பூன் சீரகம் சேர்த்து பொரிந்த பிறகு நறுக்கி வைத்த வெங்காயத்தையும் ஒரு கொத்து கருவேப்பிலையும் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

வெங்காயம் நன்றாக வதங்கி பொன்னிறமாக மாறிய பின்பு அதில் 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து அதையும் நன்றாக பச்சை வாடை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு 11/2 ஸ்பூன் மிளகாய் தூள், 1 ஸ்பூன் தனியா தூள், 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 ஸ்பூன் உப்பு, 1/4 டீஸ்பூன் கரம் மசாலா, 1 ஸ்பூன் மிளகுத் தூள், 1 ஸ்பூன் சீரகத் தூள் என அனைத்தையும் சேர்த்து அடுப்பை லோ ஃபிலிமில் வைத்து வெங்காயத்துடன் சேர்த்து ஒரு முறை வதக்கிக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு அரைத்து வைத்த தக்காளி விழுதையும் சேர்த்து மீண்டும் ஒரு முறை பச்சை வாடை போக வதக்கிய பிறகு ஒன்னரை டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த கிரேவி உங்களுக்கு திக்காக வர வேண்டும் என்றால் இந்த தண்ணீரை போதும் கொஞ்சம் குழம்பு பதத்திற்கு வேண்டுமென்றால் இன்னும் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: மொறுமொறுன்னு போண்டா 10 நிமிஷத்தில் தோசை மாவிலேயே சுடலாமா அதெப்படி? கிரிஸ்பியான தோசை மாவு போண்டா ரெசிபி இதோ!

இந்த குழம்பு நன்றாக கொதிக்கும் போது முட்டையை எடுத்து இதில் சேர்த்த பிறகு மூடி போட்டு ஐந்து நிமிடம் வரை கொதிக்க விடுங்கள். அதன் பிறகு கொத்து கொத்தமல்லியை மேலே தூவி இறக்கி விடுங்கள். அவ்வளவு தான் முட்டை கிரேவி கறி குழம்பு சுவையில் தயார். சாதாரணமாக முட்டை குழம்பு வைப்பது விட இந்த முறையில் செய்வது மிகவும் சுலபமாக இருக்கும். அதே நேரத்தில் சுவையும் அட்டகாசமாக இருக்கும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -