மூணு மாசம் வரை முட்டை கெடாமல் இருக்க இப்படி ஸ்டோர் பண்ணுங்க, இத்தனை நாள் இது தெரியாம போச்சேன்னு கண்டிப்பா பீல் பண்ணுவீங்க, அந்த அளவு ஒவ்வொரு டிப்ஸும் ரொம்ப யூஸ் பியூலா இருக்கும்.

- Advertisement -

இந்த குறிப்பில் உள்ள தகவல்களை நீங்கள் தெரிந்து கொண்டால் உங்கள் வீட்டில் இனி தேவை இல்லை என்று எந்த பொருளையும் வீணாக்க மாட்டீர்கள் என்று சொல்வதை விட உங்கள் வீட்டில் எந்த பொருளும் வீணாகாது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு ஒவ்வொரு பொருளையும் வீணாக்காமல் எப்படி பயன்படுத்துவது என்பதை தெரிந்து கொள்வதற்கான பயனுள்ள பதிவு. இதில் உள்ள சில தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் தெரிந்து.

வெஸ்டர்ன் டாய்லெட் பீங்கான் சுத்தமாக வைத்திருக்க ஒரு ஸ்பூன் பேஸ்ட், ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடா கொஞ்சம் ஷாம்பு மூன்றையும் நன்றாக கலந்து ஒரு வேஸ்ட் பிளாஸ்டிக் பாட்டிலில் ஊற்றி எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பின்புறம் ஊசி வைத்து சிறு துளைகளை போட்டுக் கொள்ளுங்கள், டாய்லெட் ஃப்ளசர் பாக்ஸில் இந்த பாட்டிலை போட்டு விட்டால், எப்போது ஃப்ளஷ் செய்தாலும் பாட்டிலின் பின்புறம் இருக்கும் ஓட்டையில் அந்த லிக்விட் வெளியேறி, பாத்ரூம் பீங்கான வழியாக இந்த தண்ணீர் பட்டு சுத்தமாகி விடும். ஷாம்பூ சேர்த்து போட்டிருப்பதால் அது நல்ல வாசமாகவும் இருக்கும்.

- Advertisement -

வீட்டில் பேஸ்ட் காலியானால் இனி அந்தக் கவரை தூக்கி போட வேண்டாம் மீதம் இருக்கும் பேஸ்டை கூட பண்ணிக்கோங்க . பேஸ்ட் கவரின் இரண்டு புறமும் கட் பண்ணி விட்டால் , பேஸ்ட் கவர் ஒரு நீள பேப்பர் போல் கிடைத்து விடும். இதை அப்படியே தண்ணீரில் போட்டு அலசி எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது அலசிய தண்ணீரில் கொலுசை ஊற வைத்து விடுங்கள். பத்து நிமிடம் கழித்து தேய்த்தால் கொலுசு நல்ல வெண்மையாக மாறி விடும். அழுக்கு அனைத்தும் நீங்கி விடும்.

மீதம் இருக்கும் பேஸ்ட் கலந்த தண்ணீரை வீணாக்காமல் அதை உங்கள் வாஷ்பேஷனில் அழுக்கு கறை படிந்திருக்கும் இடத்தில் இந்த தண்ணீரை ஊற்றி கொஞ்ச நேரம் கழித்து லேசாக பிரஷ் வைத்து தேய்த்துப் பாருங்கள் எல்லாம் அவ்வளவு பளிச்சென்று மாறி விடும். இதையே பாத்ரூம் பீங்கானுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

முட்டையை நீங்கள் ஃப்ரிட்ஜில் வைத்து ஸ்டோர் செய்வதை காட்டிலும் ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் அரிசி எடுத்து அரிசியில் இந்த முட்டையை வைத்துப் பாருங்கள் மூன்று மாதம் வரையிலும் கெடாமல் இருக்கும் . ஆனால் முட்டை வைக்கும் விதத்தை சரியாக வைக்க வேண்டும், கூர்மையாக இருக்கும் பகுதி அரிசியின் அடியிலும் வட்டமாக இருக்கும் பகுதி மேல் புறமும் இருக்க வேண்டும் இப்படி வைத்தால் முட்டை மூன்று மாதம் வரை கெடாமல் இருக்கும்.

வீட்டில் சின்ன, சின்ன கத்தி ஸிசர் போன்றவை சமையலறையில் நாம் அதிகம் பயன்படுத்துவோம். இவை தண்ணீர் அதிகம் இருக்கும் இடத்தில் புழங்குவதால் சீக்கிரம் துருவேறி விடும். இவைகளையும் பயன்படுத்திய பிறகு ஒரு பேப்பரில் சுற்றி முட்டையை வைத்தது போல் ஒரு பவுலில் அரிசி வைத்து அதில் இந்த பொருட்களை சொருகி வைத்து விட்டால் எவ்வளவு வருடமானாலும் துருப்பிடிக்கவே பிடிக்காது. இது முறையில் நீங்கள் உங்கள் வீட்டில் ஸ்க்ரூட்ரைவர் போன்ற சின்ன சின்ன இரும்பு பொருட்கள் துருப்பிடிக்காமல் இருக்க பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்தக் குறிப்புகள் எல்லாம் உங்களின் அன்றாட வாழ்க்கையில் தினமும் பயன்படுத்தக்கூடிய முக்கியமான குறிப்புகள் தான் இது நீங்களும் உங்கள் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -