- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalமுயற்சிகள் வெற்றியடைய ராகு கால வழிபாடு

முயற்சிகள் வெற்றியடைய ராகு கால வழிபாடு

- Advertisement -

பிறக்கும் குழந்தை முதல் இறக்கும் தருவாயில் இருக்கும் வரை நாம் எதையாவது ஒன்றை செய்ய முயன்று கொன்றே தான் இருப்போம். முயற்சி இல்லாதவன் மனிதனாக கூட அல்ல ஒரு உயிரினமாக கூட கருத முடியாது. ஏனென்றால் மனிதனிடம் மட்டுமே முயற்சி என்பது இருப்பதில்லை. ஒவ்வொரு ஜீவராசி இடமும் முயற்சிகள் இருப்பதால்தான் அந்த முயற்சிகளின் வெளிப்பாட்டால் அந்த உயிரினம் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த முயற்சிகள் வெற்றி அடைவதற்கும், நீண்ட நாட்களாக இருக்கக்கூடிய வேண்டுதல்கள் நிறைவேறுவதற்கும் ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் ஏற்ற வேண்டிய ஒரு தீபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

முயற்சிகள் வெற்றியடைய ராகு கால வழிபாடு

ஒருவர் தங்களுடைய படிப்பில் சிறந்து விளங்க வேண்டும் என்றும் முயற்சி செய்வார். மற்றொருவரோ தாங்கள் செய்யும் வேலையில் மேற்கொண்டு முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்று முயற்சி செய்வார். குடும்பத்தில் இருக்கக்கூடிய பெண்களோ தங்கள் குடும்பம் அடுத்த கட்ட நிலையை நோக்கி முன்னேற வேண்டும் என்ற முயற்சிகளை செய்வார்கள். தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் அதிக அளவில் லாபம் பெற வேண்டும் என்றும் முயற்சி செய்வார்கள். இப்படி ஒவ்வொரு நொடியில் இருக்கக்கூடிய முயற்சிகளும் வெற்றியடைய வேண்டும் என்றுதான் ஆசைப்படுவோம். அப்படி வெற்றி பெறாமல் தடைபட்ட சூழ்நிலையில் இருக்கும் பொழுது செய்ய வேண்டிய ஒரு தீப வழிபாட்டை தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

இந்த தீப வழிபாட்டை ஞாயிற்றுக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். அதுவும் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமையில் வரக்கூடிய ராகு காலமான மாலை 4:30 லிருந்து 6 மணிக்குள் தான் செய்ய வேண்டும். இதற்காக கோவிலுக்கு செல்ல வேண்டும் என்ற எந்த ஒரு நிபந்தனையும் கிடையாது. வீட்டு பூஜை அறையில் இந்த தீபத்தை ஏற்றி வைத்து வழிபாடு செய்யலாம். இதற்கு ஒரு சிறிய அளவில் இருக்கக்கூடிய தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ளுங்கள்.

அதில் கோதுமையை பரப்பிக் கொள்ள வேண்டும். கோதுமை இல்லாத பட்சத்தில் பச்சரிசியை பரப்பிக் கொள்ளலாம். முடிந்த அளவிற்கு கோதுமையை வாங்கி வைத்து தீபம் ஏற்ற முயற்சி செய்யுங்கள். அடுத்ததாக இதற்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்துக் கொள்ளுங்கள். அந்த அகல் விளக்கில் தேங்காய் எண்ணெய் ஊற்ற வேண்டும். பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபம் கிழக்கு பார்த்தவாறு இருக்க வேண்டும். இப்பொழுது அந்த தீபத்திற்கு முன்பாக ஒரு சிறிய விரிப்பை விரித்து அதன் மேல் வடக்கு பார்த்தவாறு நாம் அமர்ந்து கொண்டு அந்த தீபச்சுடர் ஒளியை பார்த்து இந்த மந்திரத்தை 33 முறை கூற வேண்டும்.

- Advertisement -

மந்திரம்

தீப மங்கள ஜோதி சரணம் பிரசத்யே

இந்த மந்திரத்தை உங்களுடைய குலதெய்வத்தை நினைத்துக் கொண்டும் இஷ்ட தெய்வத்தை நினைத்துக் கொண்டும் அந்த தீபச்சுடர் ஒளியை பார்த்தவாறு 33 முறை கூற வேண்டும். இப்படி கூறி முடித்த பிறகு உங்களுடைய நிறைவேறாத நீண்ட நாள் வேண்டுதல்கள் எது இருக்கிறதோ அதை கூறலாம் அல்லது நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் எது வெற்றியடையாமல் இருக்கிறதோ அதை கூறலாம். இப்படி ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் நீங்கள் இந்த தீபத்தை ஏற்றி வைத்து இந்த மந்திரத்தை கூறி வழிபாடு செய்ய உங்களுடைய வேண்டுதல்கள் விரைவிலேயே நிறைவேறும்.

இதையும் படிக்கலாமே: எதிரிகளும் தீய சக்திகளும் விலகி ஓட பரிகாரம்

இந்த தீப வழிபாட்டை முழு நம்பிக்கையுடன் செய்பவர்களுக்கு அவர்கள் தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவேறும் வேண்டிய வேண்டுதல்களும் நிறைவேறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்