எல்லா முயற்சிகளிலும் வெற்றி பெற பௌர்ணமி பூஜை மந்திரம்

Vinayagar-1

இன்றிருக்கும் நிச்சயமற்ற பொருளாதார சமூகச் சூழலில் நாம் அனைவருமே பொருள் ஈட்டக் கிடைக்கின்ற ஒவ்வொரு வாய்ப்பையும் தவறவிடாமல் அதன் மூலம் நம் எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான கூடுதலான பணத்தை ஈட்ட முயற்சிக்கிறோம். எந்த ஒரு விஷயத்திலும் அதன் தொடக்கம் சரியாக இருந்தால் மட்டுமே அதில் வெற்றிபெற முடியும். அப்படி நாம் வாழ்க்கையில், பணம் சம்பாதிக்க புதிதாய் ஏதேனும் முயற்சிப்பது அல்லது எந்த ஒரு முயற்சியில் ஈடுபடும் போதும் விநாயகரை வழிபட்டு தொடங்கினால் அது வெற்றிபெறும். அப்படி அந்த விநாயகப் பெருமானை வழிபடுவதற்கான மந்திரம் இது.

Vinayagar

விநாயகர் மந்திரம் :

ஓம் செல்வம் அருள்க தேவா போற்றி
ஓம் நல்லன எமக்கருள் நாயக போற்றி
ஓம் ஆக்கமும் ஊக்கமும் அருள்வாய் போற்றி
ஓம் காக்க எங்களை உன்கழிலிணை போற்றி

இம்மந்திரத்தை பௌர்ணமி தினத்தன்று காலை 6.00 மணியிலிருந்து ஒன்பது மணிக்குள்ளாக, அருகிலுள்ள விநாயகர் கோவிலுக்கோ அல்லது அவரது சந்நிதிக்கோ சென்று விநாயகருக்கு அருகம்புல் சமர்ப்பித்து எருக்கம் பூக்களை வைத்து, நல்லெண்ணெய் அல்லது நெய் தீபம் ஏற்றி, பத்திகள் கொளுத்தி உங்கள் மனதின் கவனத்தை முழுவதும் விநாயகர் மீது வைத்து இம்மந்திரத்தை 27 முறை கூறிவழிபட வேண்டும். அப்படி காலையில் இந்த வழிபாட்டை செய்ய முடியாதவர்கள், மாலை 6.30 மணியிலிருந்து 7.30 மணிக்குள்ளாக மேற்கூறிய விநாயகர் வழிபாட்டை செய்யலாம்.

இதனால் நீங்கள் ஈடுபடும் எந்த ஒரு புதிய முயற்சியிலும் வெற்றி கிட்டும். உங்கள் வியாபாரம் தொழில் அல்லது வேலையில் கிடைத்து வந்த செல்வம் அல்லது ஊதியம் பெருகும் வாய்ப்பு ஏற்படும். மேலும் உங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தினரின் வாழ்க்கையில் அவர்கள் விரும்பிய அனைத்தையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றி தருவார் அந்த விநாயகப் பெருமான்.

இதையும் படிக்கலாமே:
தோஷம் நீக்கி வெற்றி தரும் மந்திரம்

English Overview:
Here we have given Lord Ganesh Mantra in Tamil. By chanting this mantra on Pournami days one can get all goodness.