- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்இனி ஆப்பம், பணியாரம் செய்ய தனித்தனியாக மாவு அரைக்க வேண்டாம். பச்சரிசியில இப்படி மாவு அரைச்சு...

இனி ஆப்பம், பணியாரம் செய்ய தனித்தனியாக மாவு அரைக்க வேண்டாம். பச்சரிசியில இப்படி மாவு அரைச்சு வச்சுக்கிட்டா போதும் இரண்டையுமே சூப்பரா சட்டுனு செஞ்சிரலாம்.

- Advertisement -

பொதுவாகவே ஆப்பம் பணியாரம் இரண்டிற்குமே நாம் தனித்தனியாக தான் மாவு அரைக்க வேண்டும். பணியாரம் செய்வதற்கு மாவு கொஞ்சம் கொரகொரவென்று இருந்தால் கூட நன்றாகத் தான் இருக்கும். ஆனால் ஆப்பத்திற்கு மாவு நைசாக இருந்தால் தான் சாப்டாக வரும். இந்த சமையல் குறிப்பு பதிவில் பச்சரிசியை வைத்து அரைக்கும் இந்த மாவில் ஆப்பம் பணியாரம் இரண்டையுமே சுலபமாக செய்யலாம். வாங்க அந்த மாவை எப்படி அரைப்பது என்று பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

செய்முறை

இந்த பணியாரம் செய்ய முதலில் இரண்டு கப் பச்சரிசி மாவு, அரை கப் வெள்ளை அவல், அரை கப் ஜவ்வரிசி, கால் கப் பாசிப் பருப்பு, ஒரு டீஸ்பூன் வெந்தயம் இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து இரண்டு முறை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்த பிறகு நான்கு மணி நேரம் ஊற விடுங்கள்.

- Advertisement -

நான்கு மணி நேரம் கழித்து இதில் இருக்கும் தண்ணீரை வடித்து விட்டு மிக்ஸி ஜாரில் சேர்த்து இத்துடன் கால் கப் அதிகம் புளிக்காத தயிரையும் சேர்த்து மைய அரைத்து இதை ஒரு பௌலில் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். இந்த மாவை தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொண்டால் சரியாக இருக்கும்.

அடுத்ததாக ஒரு பெரிய வெங்காயம், ரெண்டு பச்சை மிளகாய், ஒரு துண்டு இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி இவை அனைத்தையும் பொடியாக அரிந்து அரைத்து வைத்த மாவில் சேர்த்துக் கால் டீஸ்பூன் உப்பையும் சேர்த்து இத்துடன் கொஞ்சமாக சோடா உப்பு, ஒரு சிட்டிகை சர்க்கரை இரண்டையும் சேர்த்து நன்றாக அடித்து வைத்து விடுங்கள்.

- Advertisement -

அடுப்பை பற்ற வைத்து பணியார சட்டி வைத்து அதில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி சூடான பிறகு பணியாரம் ஊற்றி ஒரு புறம் சிவந்தவுடன் மறுபுறம் திருப்பிப் போட்டு எடுத்து விடுங்கள். இந்த முறையில் செய்யும் போது பணியாரமும் ரொம்பவே ருசியாக இருக்கும்.

இதே மாவில் ஆப்பம் ஊற்றுவதாக இருந்தால், மிக்ஸியில் அரைத்து தனியாக ஊற்றிய உடனே அதிலும் கால் டீஸ்பூன் உப்பு, சமையல் சோடா சேர்த்து அடித்து வைத்து ஐந்து நிமிடம் கழித்து ஆப்பம் ஊற்றி எடுத்தால் நல்ல சாப்டான பஞ்சு போன்ற ஆப்பம் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: 10 நாள் ஆனாலும் கெட்டுப் போகாத கொத்தமல்லி தொக்கு! இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க இனி இட்லி, தோசைக்கு வேற சைட் டிஷ் தேடவே மாட்டீங்க.

இந்த முறையில் மாவு அரைத்து வைத்துக் கொண்டால் இதை புளிக்க வைக்க வேண்டும் என்று அவசியம் கூட கிடையாது. உடனே சமைக்க ஆரம்பித்து விடலாம். நீங்களும் இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க ரொம்பவே டேஸ்டா இருக்கும்.

சற்று முன்