மைசூர் ஸ்டைலில் மஷ்ரூம் பிரியாணியை ஒருமுறை இப்படி காரசாரமா செஞ்சு பாருங்க, மத்த பிரியாணி எதுவும் இது கிட்ட நிக்க கூட முடியாது. அந்தளவுக்கு டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்.

Mushroom Briyani
- Advertisement -

மஷ்ரூம் வைத்து செய்யப்படும் உணவு வகைகள் அனைத்துமே மிகவும் சுவையாகவே இருக்கும். அது மட்டும் இன்றி இது உடலுக்கும் ஆரோக்கியத்தை தரக்கூடியது தான். இந்த மஷ்ரூமை வைத்து செய்யப்படும் பிரியாணி சைவ பிரியர்களுக்கு ஒரு வரமேன்றே சொல்லலாம். இப்போது மஷ்ரூம் பிரியாணியை நல்ல காரசாரமாக ரொம்பவே சுவையா மைசூர் ஸ்டைலில் எப்படி செய்வது என்பதை தான் இப்போது எந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

தேவையான பொருட்கள்

மஷ்ரூம் – 250 கிராம், பாஸ்மதி அரிசி – 1 கப், பெரிய வெங்காயம் – 1, பூண்டு – 5 பல், இஞ்சி – 1 சிறிய துண்டு, பச்சை மிளகாய் – 3, தக்காளி – 2, தனியா – 1 டேபிள் ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 5, சோம்பு -1 ஸ்பூன், சீரகம் -1 ஸ்பூன், மிளகு -1 ஸ்பூன், மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன், உப்பு -1 ஸ்பூன், கறிவேப்பிலை கொத்தமல்லி -1கைப்பிடி, ஏலக்காய் – 2, பட்டை -1 துண்டு, லவங்கம் – 5, நெய் -1 டேபிள் ஸ்பூன், எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை

இந்த பிரியாணி செய்வதற்கு முன்பாக பாஸ்மதி அரிசியை சுத்தம் செய்து 10 நிமிடம் நல்ல தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக பிரியாணி செய்வதற்கு ஒரு மசாலாவை தயார் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ஒரு மிக்ஸி ஜாரில் பூண்டு, இஞ்சி, வெங்காயத்தை தோலுரித்து பெரிதாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் தனியா, காய்ந்த மிளகாய், சோம்பு, சீரகம், மிளகு, கொத்தமல்லி சிறிதளவு அனைத்தையும் சேர்த்து நல்ல பைன் பேஸ்ட் ஆக அரைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்ததாக அடுப்பில் குக்கர் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு ஏலக்காய், லவங்கம், பட்டை என அனைத்தையும் சேர்த்த பிறகு, ஒரு கொத்து கருவேப்பிலையும் சேர்த்து நாம் ஏற்கனவே அரைத்து வைத்த  பேஸ்டையும் இதில் சேர்த்த பிறகு, எண்ணெயில் இதன் பச்சை வாடை போகும் வரை வதக்க வேண்டும்.

அதன் பிறகு மஷ்ருமை இரண்டாக நறுக்கி சுத்தம் செய்து அதையும் இத்துடன் சேர்த்த பின், தக்காளியை நல்ல பொடியாக நறுக்கி அதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உப்பு அனைத்தையும் சேர்த்து ஒரு முறை கலந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது நாம் சேர்த்த அனைத்தும் வதங்கிய பிறகு ஊற வைத்த பாஸ்மதி அரிசியை தண்ணீர் இல்லாமல் வடித்து இதில் சேர்த்த பிறகு, ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி நெய்யும் சேர்த்து ஒரு முறை கலந்து விட்ட பிறகு குக்கரை மீடியம் ஃபிளேமில் ஒரே ஒரு விசில் மட்டும் விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: இட்லி மாவு இருந்தா போதும் ஈவினிங் ஸ்நாக்ஸுக்கு நல்ல ஒரு சூப்பரான இனிப்பு பணியாரம் தயார் பண்ணிடலாம். பணியாரம் எண்ணெய் குடிக்காம இருக்க இதோட சூப்பர் டிப்ஸும் இருக்கு வாங்க தெரிஞ்சுக்கலாம்.

விசில் முழுவதுமாக இறங்கிய பிறகு மூடியை திறந்து லேசாக கலந்து விட்டால் போதும். சுவையான மைசூர் ஸ்டைல் மஷ்ரூம் பிரியாணி கம கம என்று வாசனையுடன் காரசாரமாக தயார்.

- Advertisement -