உங்க வீட்டில ஒருவாட்டி இப்படி ரசம் வச்சா, சாப்பாடுதான் பத்தாம போயிரும். தெருவே மணக்க மணக்க மைசூர் ரசம் செய்வது எப்படி?

mysore-rasam

ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு முறையை பின்பற்றி ரசம் வைப்பார்கள். அந்த வரிசையில் பருப்பு ஊற்றிய மைசூர் ரசத்தை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சுடச்சுட சாதம் வடித்து, இந்த ரசத்தை வைத்தால் குழம்பு எதுவுமே தேவையில்லை. ரசம் மட்டுமே போதும். வீட்டில் வடித்த சாதம்தான் பத்தாது, அந்த அளவிற்கு ருசியுள்ள ஒரு ரசத்தை பக்குவமாக எப்படி செய்வது பார்த்து விடலாமா? இந்த ரசம் சாப்பாட்டுக்கு தொட்டுக் கொள்ள ஒரு வத்தல் இருந்தால் கூட போதுமே. சொல்லும் போதே நாக்கில் எச்சி ஊறுது.

rasam-soru

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். அதில் 1/2 ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி வரமிளகாய் – 6 போட்டு, மிளகாய் கருகாத அளவிற்குப் வறுத்து எடுத்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு அதே கடாயில் வரமல்லி – 4 ஸ்பூன் சேர்த்து, 30 செக்கன் வரை வர மல்லியை வறுத்த பின்பு, சீரகம் – 2 ஸ்பூன், மிளகு – 1 ஸ்பூன், வெந்தயம் – 1 ஸ்பூன், பெருங்காய கட்டி சிறிய துண்டு, கறிவேப்பிலை – 1 கொத்து, இந்த பொருட்களை எல்லாம் போட்டு வாசம் வரும் வரை சிவக்க வறுத்து, நன்றாக ஆற வைத்து மிக்ஸியில் போட்டுக் கொள்ள வேண்டும்.

இதோடு முதலில் வருத்தப் மிளகாயையும் மிக்ஸியில் போட்டு 90% அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். எப்போதெல்லாம் ரசம் வைப்போமோ, அப்போதெல்லாம் இந்த ரச பொடியை பயன்படுத்திக் கொள்ளலாம். காற்றுப்புகாத பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

toor-dal

அடுத்தபடியாக ஒரு சிறிய எலுமிச்சம்பழ அளவு புளியை தண்ணீரில் கரைத்து தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 50 கிராம் அளவு துவரம்பருப்பை வேகவைத்து மசித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

கடாயை அடுப்பில் வைத்து, முதலில் கரைத்து வைத்திருக்கும் புளி கரைசலை ஊற்ற வேண்டும். 3 தக்காளிப் பழங்களைப் பொடியாக நறுக்கி புளி கரைசலுடன் போட வேண்டும். அதன் பின்பு 1/2 ஸ்பூன் அளவு மஞ்சள் தூள், 2 ஸ்பூன் அளவு உப்பு போட்டு, இந்தக் கலவையைப் பச்சை வாடை போகும் வரை 5 லிருந்து 6 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும்.

rasa-podi

அடுத்தபடியாக வேக வைத்திருக்கும் துவரம் பருப்பை கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கரைத்து, கடாயில் ஊற்றி விடுங்கள். அடுத்தபடியாக 1/2 லிட்டர் அல்லது 3 1/4 லிட்டர் அளவு தண்ணீரை கடாயில் ஊற்ற வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைக்க வேண்டும். இப்போது, முதலில் நாம் ரசப்பொடி அரைத்தோம் அல்லவா? அதிலிருந்து 2 ஸ்பூன் ரசப்பொடி எடுத்து, ஒரு சிறிய  கிண்ணத்தில் போட்டு 1/2 டம்ளர் அளவு தண்ணீர் விட்டு, நன்றாகக் கரைத்து கொதிக்கும் ரசத்தில் ஊற்றி விடுங்கள்.

rasam

தளதளவென ரசம் 4 கொதி வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள். (இதில் போட்டிருக்கும் பருப்பின் பச்சை வாடை கொஞ்சம் நீங்க வேண்டும்.) இறுதியாக கொத்தமல்லி தழையை தூவி விடவேண்டும். அடுத்தபடியாக  ஒரு தாளிப்பு கரண்டியில் 1 டேபிள் ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய், சீரகம், தாளித்து ரசத்தில் கொட்டி கலந்து சுட சுட பரிமாறுங்கள் அட்டகாசமான மைசூர் ரசம் தயார். உங்களுக்கு இந்த ரெசிபி படித்திருந்தால் உங்களுடைய வீட்டிலும் முயற்சி செய்து பாருங்கள்.