1 ரூபாயைக் கூட, 1 லட்சமாக மாற்றக்கூடிய சக்தி இந்த நேரத்திற்கு உண்டு! இன்றும், நாளையும் வரக்கூடிய இந்த அபூர்வ நேரத்தில், பணத்தை சேமித்தால் பணம் பல மடங்கு பெருகும்.

pournami

நாம் எல்லோரும் அறிந்த மைத்ரேய முகூர்த்தத்தை பற்றி தான் இந்த பதிவின் மூலம் சற்று விரிவாக தெரிந்து கொள்ளப் போகின்றோம். மைத்ரேய முகூர்த்தம் என்பது வெறும் கடனை அடைப்பதற்காக மட்டும் அல்ல, இந்த மைத்ரேய முத்தத்தில் நாம் எந்த ஒரு காரியத்தைத் தொடங்கினாலும் அதன் மூலம் நமக்கு பல மடங்கு லாபம் கிடைக்கும். அதாவது இந்த நேரத்தை அதிர்ஷ்டமான நேரம் என்றே சொல்லலாம். இந்த நேரத்தில் நீங்கள் கடனை திருப்பிக் கொடுத்தாலும், கடன் சீக்கிரம் அடையும். பணத்தை சேமித்து வைத்தாலும், சேமிப்பு பல மடங்காக பெருகும் என்பதில் சந்தேகமே கிடையாது. அதுமட்டுமில்லாமல் இந்த நேரத்தில், நாம் வேண்டிக் கொண்டால், நம்முடைய லட்சியம் கூட சீக்கிரமே வெற்றியை அடையும்.

Pournami days in Tamil Calendar

பொதுவாகவே பவுர்ணமி தினத்தன்று பிரபஞ்ச சக்தி அதிக அளவில், நிலவொளியின் மூலமாக நம்முடைய பூமிக்கு வரும். இந்த பௌர்ணமி தினத்தோடு சேர்த்து, வரக்கூடிய மைத்ரேய முகுர்த்த நேரம் எப்போது வருகிறது, அந்த நேரத்தை நாம் எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாமா?

30-10-2020 அதாவது இன்று மாலை 4.50 மணி முதல் 6.50 மணி வரை அதிர்ஷ்டத்தை தரக்கூடிய மைத்ரேய முகுர்த்த நேரம்.

money

31-10-2020 அதாவது நாளை மாலை 4.50 மணி முதல் 6.49 மணி வரை அதிர்ஷ்டத்தை தரக்கூடிய மைத்ரேய முகுர்த்த நேரம்.

- Advertisement -

இன்று மற்றும் நாளை இந்த நேரத்தில் என்ன செய்தால் கடன் தீரும். என்ன செய்தால் நீங்கள் சேமிக்கும் பணம் இரட்டிப்பாகும். ரொம்ப ரொம்ப சுலபமாக சொல்லப்பட்டிருக்கக்கூடிய இரண்டு முறைகளை தான் இப்போது பார்க்க போகிறோம்.

kadan

முதலில் உங்களுக்கு கடன் சீக்கிரமே தீரவேண்டும் என்றால், நீங்கள் கடன் கொடுக்க வேண்டிய அந்த குறிப்பிட்ட தொகையையில் இருந்து, உங்களால் முடிந்த ஒரு தொகையை எடுத்துக்கொள்ளுங்கள். அந்தத் தொகையை இந்த மைத்ரேய முகூர்த்தம் வரும் நேரத்தில், ஒரு பச்சை துணியில் வைத்துக்கொள்ள வேண்டும். அதில் நீங்கள் கடன் கொடுக்கக் கூடிய நபரின் பெயரை ஒரு வெள்ளைக் காகிதத்தில் எழுதி வைத்து விடுங்கள். இதோடு சேர்த்து ஒரு வசம்பு வைத்து, அந்தத் துணியை மூட்டை கட்டி, அதாவது நூல் கொண்டு கட்டி, உங்கள் வீட்டு பூஜை அறையிலும் வைத்துக் கொள்ளலாம். அல்லது சுத்தமாக இருக்கக்கூடிய மற்ற இடங்களிலும் வைத்துக் கொள்ளலாம். கடன் தீருவதற்காக இந்த முடிச்சு அப்படியே இருக்கட்டும்.

green

இரண்டாவதாக சேமிப்பு உயரவேண்டும் என்றால், இந்த மைத்ரேய முகூர்த்த நேரத்தில் ஒரு பச்சை துணியை எடுத்துக் கொண்டு, அதில் சேமிப்புக்கான, உங்களால் முடிந்த முதல் தொகையை வைத்து அதனோடு ஒரு வெள்ளைக் காகிதத்தில் ‘சேமிப்பு’ என்ற வாத்தியும் எழுதி வைத்து ஒரு வசம்பு துண்டையும் அதன் உள்ளே வைத்து முடிச்சு போட்டு வைத்துக்கொள்ளுங்கள். உங்களது சேமிப்பு தொடர்ந்து இந்த மூட்டையில் சேமித்து வாருங்கள்.

vasambu 3

இதே போல் தான் உங்களுக்கு பணம் தவிர, மற்ற தேவைகள் வேறு எதுவும் இருந்தால் கூட அந்த குறிக்கோளை ஒரு வெள்ளைக் காகிதத்தில் எழுதி, பச்சை துணியில் வைத்து அதனோடு ஒரு வசம்பை வைத்து முடிச்சு போட்டு வைத்துக் கொண்டாலும் அது நிச்சயம் நிறைவேறும் என்பதில் சந்தேகமே கிடையாது. எடுத்துக்காட்டாக தீராத நோய் தீர வேண்டும், அப்படி இல்லை என்றால் நன்றாக படிக்க வேண்டும், குறிப்பிட்ட இந்த காலேஜில் சீட்டு கிடைக்க வேண்டும், திருமணம் நடக்க வேண்டும், குழந்தைப்பேறு கிடைக்க வேண்டும், இப்படி எந்த நல்ல காரியமாக இருந்தாலும் சரி.

praying-god

எது நிறைவேற வேண்டுமென்றாலும், பச்சை துணியில் நீங்கள் வைத்து முடிச்சு போட கூடிய நேரம் என்பது கட்டாயம் இந்த மைத்ரேய முகூர்த்தில் இருக்க வேண்டும். மனதார பிரபஞ்சத்திடம் உங்களுடைய வேண்டுதலை சொல்லி இந்த முடிச்சை கட்டி வைக்க வேண்டும். இந்த இரண்டு நாட்களில், குறிப்பிட்ட இந்த நேரத்தில், உங்களுக்கு எந்த நாளில் இந்த பரிகாரத்தை செய்ய முடியுமோ அப்போது செய்யுங்கள்.

pournami

இறுதியாக 31-10-2020 அன்று நிறைவான பௌர்ணமி நாள். இந்த தினத்தில் நீங்கள் உங்களுடைய குறிக்கோளுக்காக கட்டி வைத்திருக்கும் இந்த முடிசினை, நிலவு ஒளி படும்படி சிறிது நேரம் வைத்து விட்டு, அதன் பின்பு உங்களது பூஜை அறையில் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

chitra-pournami

மைத்ரேய முகூர்த்தம், பவுர்ணமி நிலவு ஒளியும் சேரும்போது நீங்கள் கட்டி வைத்திருக்கும் அந்த பச்சை நிற மூட்டையில் எழுதி வைத்திருக்கும் குறிக்கோளானது சீக்கிரமே நிறைவேற, இரட்டிப்பு பலம் கிடைக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது. கடன் தீர வேண்டும் என்றாலும், அந்த கடனை முழுமையாக அடைப்பதற்கு, அந்த மூட்டைக்குள் அடிக்கடி பணத்தை போட்டு வாருங்கள். சேமிப்பு உயர வேண்டும் என்றாலும் அந்த மூட்டைக்குள் அடிக்கடி பணத்தை சேர்க்க வேண்டும்.

இவ்வாறாக உங்களுடைய முயற்சியை தூண்டுவதற்காக, உங்களுடைய முன்னேற்றத்தை அதிவேகமாக செயல்படுத்துவதற்காக, நம்முடைய முன்னோர்கள் நமக்காக சொல்லிவிட்டுச் சென்ற இந்த மைத்ரேய முகூர்த்த நேரத்தையும் பௌர்ணமி நிலவு ஒளியில் இருந்து கிடைக்கக்கூடிய பிரபஞ்ச சக்தியையும், நீங்கள் உங்களுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக பயன்படுத்திக்கொள்ள வேண்டும், இதோடு சேர்ந்த விடாமுயற்சியும் உங்களுக்கு விஸ்வரூப வெற்றியை பெற்று தரும், என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
தலைவாரும் போது உதிரும் முடியை பறக்க விட்டால் என்ன நடக்கும் தெரியுமா? தவறியும் இதை மட்டும் செய்து விடாதீர்கள்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.