கேசரியை நாட்டுச்சக்கரை சேர்த்து ஒருமுறை இப்படி செய்து பாருங்கள். செய்வதும் சுலபமாக இருக்கும், குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

kesari
- Advertisement -

இனிப்பு என்றாலே பிடிக்காத குழந்தைகள் கிடையாது, ஆனால் அந்த இனிப்பை நம் உடலுக்கு ஆரோக்கியமான இந்த நாட்டுசக்கரை, கருப்பட்டி இது போன்ற நம் பாரம்பரிய பொருட்களில் செய்வதென்றால் குழந்தைகளுக்கு அவ்வளவாக பிடிப்பதில்லை. நாம் அதை கட்டாயப்படுத்தி தான் கொடுக்க வேண்டி இருக்கிறது. அப்போது தான் அவர்களின் ஆரோக்கியத்தை நல்ல முறையில் காக்க முடியும். அந்த வகையில் இன்று நாம் நாட்டுச் சர்க்கரை கொண்டு சுவையான கேசரி எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
நாட்டு சக்கரை – 1 கப், ரவை – 1 கப், தேங்காய் – 1/2 கப், நெய் – 10 டேபிள் ஸ்பூன்,
முந்திரி, திராட்சை, பாதாம், (மூன்றும் 10 கிராம்).

- Advertisement -

முதலில் 1 கப் அளவிற்கு நாட்டு சக்கரை எடுத்துக் கொள்ளுங்கள். பின் அடுப்பில் ஒரு வானலியை வைத்து இந்த நாட்டு சர்க்கரை அதில் சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள். நாட்டுச்சர்க்கரையை எந்த கப்பில் எடுக்கிறீர்களோ, அதே கப்பிற்கு 3 கப் அளவில் தண்ணீர் சேர்த்து, சர்க்கரை நன்றாக கரைந்த உடன் இறக்கி விடுங்கள். இதற்கு பாகுபதம் எல்லாம் தேவையில்லை. தண்ணீரில் நாட்டு சர்க்கரை கரைய வேண்டும் அவ்வளவு தான்.

பிறகு இன்னொரு கடாயில் நெய் விட்டு முந்திரி, திராட்சை, பாதாம், உங்களுக்கு வேறு எந்த நட்ஸ் சேர்க்க விருப்பமோ அதையும் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின் அதே கடாயில் இன்னொரு ஸ்பூன் நெய் விட்டு, 1/2 கப் அளவிற்கு தேங்காயை நன்றாக சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். தேங்காய் நன்றாக சிவந்து வர வேண்டும். பின் மீண்டும் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு நெய் ஊற்றி ரவையை பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

- Advertisement -

நாட்டு சர்க்கரை எடுத்த கப்பிலே 1 கப் அளவிற்கு ரவை எடுத்து கொள்ளுங்கள். ரவை வறுத்தபின் ஏற்கனவே நாம் காய்ச்சி வைத்திருக்கும் நாட்டுச்சர்க்கரை பாகை இதில் சேர்த்து நன்றாக வேக விடுங்கள். ரவை பாதியளவு வெந்தவுடன் வறுத்து வைத்த தேங்காயை இதில் சேர்க்க வேண்டும். இவை மூன்றையும் நன்றாக கிண்டி வேக வையுங்கள். இடையிடையே கொஞ்சம் நெய் சேர்த்துக் கொள்ளுங்கள். இவை அனைத்தும் வெந்தவுடன் கடைசியில் வறுத்து வைத்துள்ள நட்ஸ் சேர்த்து கிண்டி இறக்கி விடுங்கள்.

அவ்வளவு தான். குழந்தைகளுக்கு சுவையான, ஆரோக்கியமான நாட்டுச்சர்க்கரை கேசரி ரெடி. இந்த முறையில் செய்து கொடுத்துப் பாருங்கள். உங்கள் குழந்தைகளே மீண்டும் மீண்டும் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு சுவையாகவும் அதே நேரத்தில் உடலுக்கு ஆரோக்கியத்தையும் கொடுக்கும்.

- Advertisement -