- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநடக்காத காரியம் நடந்திட பஞ்சமி வழிபாடு

நடக்காத காரியம் நடந்திட பஞ்சமி வழிபாடு

- Advertisement -

நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் இந்த ஒரு காரியம் நடந்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்போம். மேலும் அந்த காரியம் நல்லபடியாக நடந்தேறுவதற்கான முயற்சிகளையும் செய்வோம். உதாரணமாக திருமணம் நடக்க வேண்டும் என்று திருமணத்திற்காக முயற்சி செய்தால் ஏதாவது ஒரு சூழ்நிலையில் அந்த திருமணம் தடைப்பட்டு கொண்டே இருக்கும். அதே போல் ஒரு குறிப்பிட்ட வேலைக்குரிய தகுதிகள் அனைத்தும் இருந்தும் அந்த வேலையில் முயற்சி செய்யும்பொழுது ஏதாவது ஒரு தடைகள் ஏற்பட்டு அந்த வேலை கிடைக்காமல் போய்விடும். இதே போல் தான் தொழில், குடும்பம் என்று நாம் கூறிக் கொண்டே செல்லலாம். இப்படி அனைத்து விதமான தகுதிகள் இருந்தும் நமக்கு ஒரு காரியம் நடக்கவில்லை என்றால் அந்த காரியம் நடைபெறுவதற்கு பஞ்சமி தினத்தன்று வாராகி அம்மனை வழிபாடு செய்யும் முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

நடக்காத காரியம் நடந்திட பஞ்சமி வழிபாடு

சக்தி வாய்ந்த தெய்வங்களுள் ஒருவராகவும் சப்த கன்னிகளில் ஒருவராகவும் திகழக்கூடியவர் வாராகி அம்மன். வராக மூர்த்தியின் மறு அவதாரமாகவும் வாராகி அம்மன் திகழ்கிறார். இவரை நாம் வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வாழ்வில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட வாராஹி அம்மனை பலவிதமான வேண்டுதல்களுக்கு பலவிதமாக வழிபாடு செய்வதுண்டு. அதிலும் குறிப்பாக பஞ்சமி வழிபாடு என்பது வாராஹி அம்மனுக்கு மிகவும் சக்தி வாய்ந்த வழிபாடாக திகழ்கிறது.

- Advertisement -

மாசி மாதத்தின் இருபதாம் தேதி மார்ச் மாதத்தின் நான்காம் நாள் வளர்பிறை பஞ்சமி இருக்கிறது. இன்றைய தினத்தில் இரவு 12 மணிக்குள் இரண்டே இரண்டு விரலி மஞ்சள் வைத்து வாராகி அம்மனின் இந்த ஒரு மந்திரத்தை கூறி வழிபாடு செய்தோம் என்றால் நீண்ட நாட்கள் ஆக தடைப்பட்டு இருக்கக்கூடிய காரியங்கள் நடந்திடும் என்று கூறப்படுகிறது. அவ்வளவு அற்புதமான சிறப்பு மிகுந்த விரலி மஞ்சள் வைத்து செய்யக்கூடிய வழிபாட்டு முறையை தெரிந்து கொள்வோம்.

இந்த வழிபாட்டை இன்று இரவு 12 மணிக்குள் செய்வது என்பது மிகவும் சிறப்பு. வீட்டு பூஜை அறையில் வாராகி அம்மனின் படம் இருக்கும் பட்சத்தில் அந்த படத்திற்கு முன்பாக ஒரு தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். வாராகி அம்மனின் படம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை ஒரு தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். தரையில் ஒரு விரிப்பை விரித்து அதில் அமர்ந்து கொண்டு வலது கையில் முனை உடையாத இரண்டு விரலி மஞ்சளை வைத்து மூடிக்கொள்ளுங்கள். இப்பொழுது உங்களுக்கு எந்த காரியம் நீண்ட நாட்களாக தடைப்பட்டு இருக்கிறதோ அந்த காரியம் நடந்திட வேண்டும் என்று முழுமனதோடு வாராகி அம்மனை வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

பிறகு வாராகி அம்மனின் இந்த ஒரு மந்திரத்தை குறைந்தபட்சம் 10 நிமிடத்தில் இருந்து அதிகபட்சம் 20 நிமிடம் வரை நிறுத்தி நிதானத்துடன் கூற வேண்டும். இப்படி கூறி முடித்த பிறகு இந்த விரலி மஞ்சள் சிவப்பு அல்லது பச்சை நிற துணியில் வைத்து மூட்டையாக கட்டி வீட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள். நீங்கள் வேண்டிய வேண்டுதல் எப்பொழுது நிறைவடைகிறதோ அப்பொழுது இந்த மூட்டையை எடுத்து அருகில் இருக்கக்கூடிய நீர் நிலைகளில் போட்டு விட வேண்டும்.

மந்திரம்

“அபராஜிதா அஸ்வாரூட வாராஹி வசிய வசிய ஸ்வாகா”

இதையும் படிக்கலாமே:5-3-2025 வளர்பிறை சஷ்டி, கிருத்திகை வழிபாடு

எளிமையான இந்த வழிபாட்டு முறையால் இனிமேல் நடக்கவே நடக்காது என்று நினைத்த காரியத்தை கூட வாராகி அம்மன் எளிதில் நடத்தி முடித்து விடுவாள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்