சொத்து சேர்க்க, கெளரவம் பெறுக உதவும் குலசுந்தரி தேவி காயத்ரி மந்திரம்

Amman Manthiram

ஆறு முகங்களையும், ஒவ்வொரு முகத்திலும் சிவபெருமானை போல மூன்று கண்களையும் கொண்டவள் தான் அன்னை குலசுந்தரி தேவி. தாமரை மலரில் வீற்றிருக்கும் இவளை எவர் வணங்கி பூஜித்தாலும் அக்கணமே அருள் மழை பொழிய காத்திருக்கிறாள். அன்னையை வணங்கும் சமயத்தில் அவளுக்குரிய காயத்ரி மந்திரம் அதை ஜெபிப்பதன் பயனாக புதிய சொத்துக்களை சேர்க்கும் யோகம் பிறக்கும். செல்வம் வந்து சேரும். சமுதாயத்தில் கெளரவம் பெருகும். இதோ அந்த அற்புத மந்திரம்.

Kulasundari devi Goddess

குலசுந்தரி தேவி காயத்ரி மந்திரம்:

‘ஓம் குலசுந்தர்யை வித்மஹே
காமேஸ்வர்யை தீமஹி
தன்னோ நித்யஹ் ப்ரசோதயாத்’

பொது பொருள்:
ஓம் குலசுந்தரி தேவியே உங்களை வணங்குகிறேன். காமேஸ்வரி என்ற பெயர் கொண்ட அன்னையே, நிதயாதேவியான தாங்கள் என்னை காத்தருள வேண்டுகிறேன்.

இதையும் படிக்கலாமே:
ஏகாதசி அன்று ஜபிக்கவேண்டிய பெருமாளின் தமிழ் மந்திரம்

இந்த மந்திரத்தை தினமும் 108 முறை ஜபித்தால் நல்ல பலன் கிடைக்கும். வாக்கு பலிக்கும், செல்வம் பெருகும். பகை நீங்கும். அந்தஸ்து உயரும்.