தவறியும் இந்த நாட்களில் எல்லாம் நகையை அடகு வைத்து விடாதீர்கள்? மீண்டும் திரும்ப வராமலேயே போய்விடும். நகை அடமானம் வைக்க சிறந்த நாள் எது தெரியுமா?

gold-lakshmi
- Advertisement -

நகையை அடமானம் வைப்பது என்பதே மிகவும் தவறான செயலாகும். இந்த செயலானது வீட்டில் இருக்கும் மகாலட்சுமியை கொண்டு போய் நாமே கடையில் அடகு வைப்பதற்கு சமம் ஆகும். ஆனால் வேறு என்ன செய்வது? வழியே இல்லாத நேரத்தில் இந்த தவறை செய்வதை தவிர வேறு ஒன்றும் நம்மால் செய்ய முடியாது என்கிற பட்சத்தில் நகையை நீங்கள் அடகு வைக்கப் போனால், அதனை தெரியாமல் கூட இந்த நாட்களில் எல்லாம் வைத்து விடாதீர்கள். அப்படியான நாட்கள் என்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இப்பதிவை படியுங்கள்.

settu-gold

வீட்டில் இருக்கும் செல்வத்தை அடகு கடையில் கொண்டு போய் வைப்பது என்பதே துரதிர்ஷ்டம் தான். இத்தகைய துரதிருஷ்டமான நேரத்தில் கூட நாம் அதிர்ஷ்ட நாளை பார்க்க வேண்டும் என்பது தான் ஜோதிட கூற்று. நல்ல நேரத்தில் கொண்டு போய் நீங்கள் நகையை அடமானம் வைக்கும் பொழுது, அந்த நகையை எப்படியாவது நீங்கள் மீட்டு விடுவீர்கள். ஆனால் தெரிந்தோ! தெரியாமலோ! இந்த நாட்களில் எல்லாம் நீங்கள் நகையை அடமானம் வைத்து விட்டால், நீங்கள் எவ்வளவு முயற்சித்தாலும் பின்னாளில் அந்த நகையை மீட்க முடியாமல் போய்விடலாம்.

- Advertisement -

இந்த விஷயங்களெல்லாம் தெரியாததால் தான், நிறைய பேருடைய நகைகள் மீட்க முடியாமல் மூழ்கிப் போய் விடுகிறது. நீங்கள் குறிப்பிட்ட இந்த நாட்களை தவிர்த்து, மற்ற நாட்களில் அடமானம் வைத்தால் நிச்சயமாக உங்களுடைய நகை மீண்டும் எப்படியாவது உங்களை வந்து சேர்ந்துவிடும். ஜோதிடத்தில் ஒரு பழமொழி இருக்கிறது. ‘நாளும்-கோளும் செய்யாதது எதுவுமே செய்யாது’ என்பது தான் அந்தப் பழமொழி. அதாவது நாளும் நட்சத்திரமும், கோளும் கோள்களும் நமக்கு செய்யாத ஒரு நல்ல விஷயத்தை வேறு எதுவும் நமக்கு செய்துவிடப் போவதில்லை என்பது தான் இதன் அர்த்தம். அதனால் தான் எந்த ஒரு சுப காரியத்தையும் நாள், நட்சத்திரம் பார்த்து செய்கிறார்கள்.

stars

அதே போல் தான் தங்க நகையை அடமானம் வைக்கும் பொழுது நாள், நட்சத்திரம் பார்த்து அதன் பின்னர் அடமானம் வையுங்கள். அடமானம் வைக்கும் பொழுது மீண்டும் அதை எப்படியாவது மீட்டு விட வேண்டும் என்கிற எண்ணமும் உடன் இருக்க வேண்டும். உங்கள் பிரச்சினை தீர்ந்தது என்று நிம்மதியாக அப்படியே இருந்து விட கூடாது. நீங்கள் வைக்கப் போவது நகையை மட்டுமல்ல உங்கள் வீட்டின் செல்வத்தை என்பதை எப்பொழுதும் மறந்து விடக்கூடாது.

- Advertisement -

ஒரு முறை வீட்டை விட்டு செல்வம் வெளியேறி விட்டால் மீண்டும் வருவது என்பது எவ்வளவு கஷ்டம் என்பதை நீங்களே அனுபவித்து உணர்ந்திருப்பீர்கள். இதில் புதிதாக சொல்ல வேறு ஒன்றும் இல்லை. சரி வாருங்கள் எந்தெந்த நாட்களில் எல்லாம் நகை அடகு வைக்க கூடாது என்பதை இனி பார்ப்போம்.

Gold

ஒருவருடைய ஜனன நாள் என்பது மிகவும் முக்கியமான ஒரு நாளாகும். அதேபோல் அவர்கள் ஜனன நட்சத்திரமும் மிகமிக முக்கியம். ஆக பிறந்தநாள் மற்றும் ஜனன நட்சத்திரத்தில் தவறியும் நகையை அடமானம் வைத்து விடாதீர்கள். அதேபோல வாரத்தில் ஏழு நாட்கள் இருந்தாலும், அதில் மூன்று நாட்கள் மிகமிக விசேஷமானது என்பது அனைவரும் அறிந்ததுதான். அவைகள் அதாவது செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இறை வழிபாட்டிற்குரிய நாளாகக் கருதப்படுவதால், இந்த நாளில் நகையை கொண்டு போய் அடமானம் வைப்பது அவ்வளவு நல்லதல்ல.

- Advertisement -

Today Gold rate

மேலும் வீட்டில் விசேஷம் வைத்திருக்கும் நாட்களில் மற்றும் பண்டிகை நாட்களில் நகையை அடமானம் வைக்கக்கூடாது. நகையை அடமானம் வைக்க முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். அதுபோல் குளிகை நேரத்தில் கட்டாயம் நகையை அடமானம் வைக்க கூடாது. குளிகையில் நாம் செய்யும் செயல் நமக்குத் திரும்பத் திரும்ப நடக்கும் என்பது விதி. குளிகையில் நகையை அடமானம் வைத்தால் அடிக்கடி நீங்கள் நகையை அடமானம் வைக்கும் சூழ்நிலை உருவாகும். நகை வாங்குவதற்கு குளிகை நேரம் மிக சிறந்த நேரம். குளிகையில் நகையை வாங்குவது மேலும் மேலும் நகை நம்மிடம் சேர்வதற்கு நல்ல நேரமாகும்.

gold

பிறந்த நட்சத்திரம் மட்டுமல்லாமல் மகம், ஹஸ்தம், அனுஷம், மூலம், சதயம் ஆகிய ஐந்து நட்சத்திரங்கள் வரும் காலங்களில் நகையை தவறியும் நீங்கள் அடகு வைத்து விடாதீர்கள். இதனை உங்கள் வீட்டில் இருக்கும் காலண்டரில் பார்த்தாலே தெரிந்துவிடும். அதே போல் திதி என்று காலண்டரில் போட்டிருக்கும். அதில் பஞ்சமி, தசமி, சஷ்டி, பௌர்ணமி, அமாவாசை, ஏகாதசி போன்ற திதிகளில் நகையை கட்டாயம் அடமானம் வைக்க கூடாது. மேலே குறிப்பிட்ட இந்த நாட்களை தவிர மற்ற நாட்களில் தாராளமாக நீங்கள் அவசரத்திற்கு மட்டும் உங்களுடைய நகையை அடமானம் வைக்கலாம். வேறு வழியே இல்லாத சமயத்தில் மட்டும் நகையை அடமானம் வையுங்கள். மற்ற நேரத்தில் அதனை பணமாக கூட நீங்கள் கடன் பெறலாம் தவிர நகையை வைப்பதில் மட்டும் சிந்தித்து செயல்படுங்கள்.

இதையும் படிக்கலாமே
உங்களை பார்த்து பொறாமைப் படுபவர்களுடைய தீய பார்வைகளை ஒன்றுமில்லாமல் செய்ய இப்படி தலையை சுற்றி செய்து விடுங்கள் போதும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -