உங்களை பார்த்து பொறாமைப் படுபவர்களுடைய தீய பார்வைகளை ஒன்றுமில்லாமல் செய்ய இப்படி தலையை சுற்றி செய்து விடுங்கள் போதும்.

thirusti-kari-thundu

அவ்வப்போது நம்மை பார்த்து ஒவ்வொரு நேரத்தில், ஒவ்வொரு முன்னேற்றத்தில் பலருடைய பொறாமையின் கண்கள் நம்மீது திருஷ்டியாக படத்தான் செய்யும். ஒருவருடைய முன்னேற்றத்தைப் பார்த்து, அடுத்தவர்கள் பொறாமை படுவது கூட மிகப் பெரிய திருஷ்டி ஆக அமையும். இதனால் அவர்களுக்கு தேவை இல்லாத பிரச்சனைகளும், மன கஷ்டங்களும் உருவாகும். ஒரு சிலருக்கு உடல் நலக்கோளாறுகள் கூட ஏற்படும். இவற்றில் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட, ஏதாவது ஒரு சூழ்நிலையில் இதனை அனுபவித்து இப்படியும் இருக்குமோ? என்கிற கேள்விகள் எழுந்திருக்கும்.

thirusti

உலகத்தில் நல்லவை என்று ஒன்று இருக்கும் பொழுது, நிச்சயமாக கெட்டவை என்றும் ஒன்று இருக்கும். நல்லவைகளை பாசிட்டிவாக ஏற்றுக் கொள்ளும் நாம், தீயவைகளை மூடநம்பிக்கை என்று ஒதுக்கி விடுகிறோம். ஒரு சில விஷயங்கள் எல்லாம் நம் மூளைக்கு அப்பாற்பட்டதாக இருக்கலாம். அதைத்தான் தெய்வீக ரகசியமாக இன்று வரை நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதில் ஒன்று தான் திருஷ்டி என்பது. திருஷ்டி நம்மீது தெரிந்தோ! தெரியாமலோ! பல இடங்களில் விழுந்து விடுகிறது. இதனை சரிசெய்ய எளிதாக இந்த வழிகளை பின்பற்றலாம். அது என்ன வழி? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

ஒருவர் முன்னேறும் பொழுது அந்த முன்னேற்றத்தை மட்டும் காண்பவர்களுக்கு, அதற்குப் பின் உள்ள முயற்சிகளும், வலிகளும் தெரிவதில்லை. உடனே இவர்கள் மட்டும் எப்படித்தான் இப்படி எல்லாம் பணம் சம்பாதிக்கிறார்கள்? இவ்வளவு பெரிய வீடு எப்படி கட்டினார்கள்? இத்தனை பொருட்களை வாங்க இவர்களுக்கு எப்படி தான் காசு வந்தது? அடிக்கடி நகை வாங்குகிறார்களே? இவன் மட்டும் எப்படி முன்னேறினான்? இவனுக்கு மட்டும் எப்படி அதிர்ஷ்டம் பெருகி வருகிறது? என்பது போன்ற எண்ணங்கள் நல்ல மனதுடன் எழுபவை அல்ல. இதனால் அவர்கள் உங்களை பார்க்கும் பொழுது திருஷ்டியாக மாறிவிடுகிறது.

kadugu 4-compressed

இந்த பொறாமை கண்களையும், திருஷ்டி பார்வையையும் நீக்க வீட்டிலேயே எளிதாக இந்த பரிகாரத்தை செய்யலாம். உங்களுக்கு இது போல் ஏதாவது ஒரு அசௌகரியமான உணர்வு தோன்றினால், திருஷ்டி இருப்பது போல நினைத்தால் உடனே இப்படி செய்து விடுங்கள். ஒரு சிறிய இரும்பு கிண்ணம், அல்லது களி மண்ணால் செய்த மண் கிண்ணம் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கடுகு எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். சிறிதளவு ஊற்றினால் போதும். அந்த எண்ணெயில் உங்களுடைய முகத்தை ஒருமுறை பார்த்துக் கொள்ளுங்கள். பின்னர் அந்த எண்ணெயை யாருக்காவது தானம் கொடுத்து விடுங்கள். இப்படி செய்தால் உங்கள் மேல் இருக்கும் திருஷ்டிகள் விலகிவிடும். அவர்களுடைய பொறாமை எண்ணங்களும் பொசுங்கி விடும். திருஷ்டியால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் உங்களை எதுவும் செய்யாது.

- Advertisement -

சனி பகவானால் வரக்கூடிய பாதிப்புகளுக்கும் இது போல் பரிகாரம் செய்யலாம். சனிக்கிழமை அன்று இதனை செய்து வர திருஷ்டிகள் நீங்கி, உங்களுக்கு வரக்கூடிய ஆபத்தை முன் கூட்டியே ஏதாவது ஒரு ரூபத்தில் எச்சரிக்கையாக உங்களுக்கு தெரிய வைக்கும். அதே போல் இன்னொரு விஷயமும் செய்யலாம்.

ஒரு கரித்துண்டை எடுத்துக் கொள்ளுங்கள். கரித்துண்டு தீய விஷயங்களை கிரகிக்க கூடியது. இதனை ஏழு முறை உங்களுடைய தலையை சுற்றி திருஷ்டி கழியுங்கள். பின்னர் ஓடும் நீரிலும், அல்லது கால் படாத இடத்திலும் இதனை போட்டு விடலாம். அவ்வளவு தான். இந்த பரிகாரத்தை எந்த கிழமையில் வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும் தாராளமாக செய்யலாம். உங்களுக்கு ஒரு விதமான மன குழப்பம் இருக்கும் பொழுது, இதுபோல் உங்களை நீங்களே திருஷ்டி சுற்றி போட்டு கொள்ளுங்கள். குழப்பங்கள் நீங்கி தெளிவான சிந்தனை பிறக்கும். உங்களைப் பார்த்து பொறாமைப்படுபவர்களின் தீய எண்ணங்கள் பலிக்காமல் செய்து விடும்.

இதையும் படிக்கலாமே
உங்களுடைய வாழ்க்கை பிரகாசிக்க ‘செப்பு பாத்திரத்தில்’ இப்படி செய்தால் கோடி நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.