- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஇந்த ஒரு பொருளை நகை வைக்கும் பாக்ஸில் வையுங்கள். அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரமாய்...

இந்த ஒரு பொருளை நகை வைக்கும் பாக்ஸில் வையுங்கள். அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரமாய் மாறிவிடும்.

- Advertisement -

கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை சேர்த்து வைக்க வேண்டும் என்று நாம் நினைப்போம். அவ்வாறு சேர்த்து வைக்கும் பணம் என்றும் நம்முடன் நிரந்தரமாக நிலைத்திருக்க, அந்த பணத்தை நாம் நகையில் முதலீடு செய்வோம். அப்படி செய்யக்கூடிய நகையை நாம் என்றுமே நம்முடன் நிலையாக வைத்திருக்க வேண்டும் என்று தான் எண்ணுவோம். எந்த ஒரு சூழ்நிலையிலும் நம்முடைய நகை நம்மை விட்டு நீங்காமல் மேலும் மேலும் அதிக அளவு நகை சேர எந்த பொருளை நகை வைத்திருக்கும் பாக்சில் வைக்க வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

தங்கத்திற்கு அதிபதியாக விளங்க கூடிய தாயார் தான் சுவர்ணலட்சுமி தாயார். அந்த சுவர்ணலட்சுமி தாயார் வாசம் செய்யும் இடமாக கருதப்படுவது திருமாலின் மார்பு. அப்படிப்பட்ட திருமாலை நாம் வழிபடுவதன் மூலம் நமக்கு ஏற்பட்டிருக்கும் சுவர்ண தோஷங்கள் அனைத்தும் நீங்கும் என்றும் மேலும் மேலும் நம் இல்லத்தில் நகைகள் சேரும் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று கூறுவார்கள். அந்த புதன்கிழமை அன்று விடியற்காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் பொழுது நாம் பெருமாளுக்கு சூட்டுவதற்காக துளசி மாலையை வாங்கிக் கொண்டு போய் கொடுக்க வேண்டும். அந்த துளசி மாலையை சுவாமிக்கு அணிவிக்கும் பொழுது அந்த மாலை சுவாமியின் மார்பகத்தில் படும்படி இருக்க வேண்டும். சுவாமியை நன்றாக வழிபட்ட பிறகு துளசிமாலையை திருப்பி நாம் வாங்கி வீட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு சுவாமியின் மார்பில் பட்ட துளசி மாலையை நாம் வீட்டிற்கு எடுத்து வந்து நம் வீட்டில் நகை வைத்திருக்கும் இடத்தில் நகையின் மீது அந்த துளசியை வைக்க வேண்டும். அவ்வாறு வைப்பதால் நமக்கு ஏற்பட்டிருக்கும் நகை தோஷம் அனைத்தும் நீங்கி, அங்கு மகாலட்சுமி கடாட்சம் பெற்று நகைகள் மேலும் மேலும் வந்து சேரும்.

- Advertisement -

கோவிலுக்கு செல்ல இயலாதவர்கள் தங்கள் வீட்டில் இருக்கக்கூடிய பெருமாளுக்கு தங்கள் கைகளாலேயே துளசியை மாலையாக கட்டி அணிவித்து அன்று முழுவதும் பெருமாளிடம் துளசி மாலை இருப்பது போல் பார்த்துக் கொள்ள வேண்டும். மறுநாள் வியாழக்கிழமை அன்று காலையில் பூஜை முடித்த பிறகு அந்த துளசி மாலையுடன் சிறிது பச்சை கற்பூரத்தையும் சேர்த்து நகை வைக்கும் இடங்களில் வைக்க வேண்டும். நகைகளில் இருக்கும் தோஷங்கள் நீங்கி நகைகள் பன்மடங்கு சேரும் என்றும் கூறப்படுகிறது. இந்த பரிகாரம் நகைக்கு மட்டும் இன்றி, நாம் பணம் வைக்கும் இடங்களிலும் வைத்து பணத்தை மேலும் பன்மடங்கு சேர்க்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: கல்லாப்பெட்டியில் வெள்ளிக்கிழமை இந்த ஒரு பூவை வைத்தால் போதும். பல லட்சங்களை கொட்டிக் கொடுப்பாங்க மகாலட்சுமி.

மிகவும் எளிமையான இந்த அற்புதமான பரிகாரத்தை நாமும் நம் வீட்டிலேயே செய்து நகை மற்றும் பணத்தை நம்மிடமே தக்க வைத்து கொள்வோம்.

சற்று முன்