விரலில் இருக்கும் நகத்தை இப்படிப் பராமரித்து வந்தால் எப்பொழுதும் உங்களுக்கு நடப்பவை அனைத்தும் நன்மையாகவே நடக்கும்

nail
- Advertisement -

நமது முன்னோர்கள் நமக்கு நன்மை செய்கின்ற வகையில் பல சூட்சுமமான விஷயங்களை சம்பிரதாயம் என்ற பெயரில் கடைப்பிடித்து வந்தனர். அவ்வாறு அவர்கள் பின்பற்றி வந்த பல விஷயங்களை இன்றளவிலும் அவர்களின் தலை முறைகள் பின்பற்றி வருகின்றோம். அவ்வாறு அவர்கள் சொன்ன விஷயங்களில் ஒன்றான விரலில் வளரகூடிய நகத்தை கடிப்பது, வெட்டுவது போன்ற செயல்களை செய்வதன் மூலம் என்ன நன்மை, தீமைகள் உண்டாகின்றது என்பதையும், விரலில் வளரும் நகத்தை எப்படி பராமரித்தால் நமக்கு நன்மை கிடைக்கும் என்பதைப் பற்றியும் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

kolam

இப்படி நமது முன்னோர்கள் காலை எழுந்தவுடன் வீட்டில் வாசல் பெருக்கி தண்ணீர் தெளித்து கோலம் இடுவது, வீட்டின் வாசலில் சாணம் தெளிப்பது, வெள்ளிக்கிழமை வீட்டை சுத்தம் செய்யக்கூடாது, ஒட்டடை அடிக்கக் கூடாது, பிறந்த கிழமைகளில் எண்ணெய் தேய்த்து தலைக்குக் குளிக்கக் கூடாது, மாலை 6 மணிக்கு மேல் எவற்றையும் மற்றவருக்கு கடனாகக் கொடுக்க கூடாது, சூரிய உதயத்திற்கு முன் எழுந்து கொள்ள வேண்டும், நல்ல காரியங்களை சுபதினத்தில் மட்டுமே செய்ய வேண்டும், ராகு காலம் எமகண்ட நேரத்தில் எந்த ஒரு காரியத்தையும் துவங்கக் கூடாது என்றெல்லாம் இது போன்ற பல விஷயங்களை பின்பற்றி வந்தனர்.

- Advertisement -

அவர்கள் பின் பற்றிய இந்த விஷயங்களில் உடலின் ஆரோக்கியமும், வீட்டிற்கு வர இருக்கும் ஆன்மீக பலன்களும் மறைந்து இருக்கின்றன. எனவே இன்றளவிலும் முடிந்தவரை இவற்றையெல்லாம் பலரும் பின்பற்றி தான் வருகின்றனர். நமக்கு தீமை விளைவிக்கும் செயல்களை செய்யாமல் இருப்பதும், நன்மை விளைவிக்கும் செயலை பின்பற்றுவதும் நமக்கும் நமது குடும்பத்திற்கும் நன்மையை மட்டுமே அளிக்கும். எனவே இவ்வாறான விஷயங்களை எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் நம்பிக்கையுடன் பின்பற்றி வருவது என்றென்றும் ஐஸ்வர்யத்தை மட்டுமே அள்ளித் தரும்.

nail

நமது இரு கை, கால் விரல்களில் வளரக்கூடிய நகத்தை கடிப்பதென்பது வீட்டிற்கு தரித்திரத்தை உண்டாக்குகின்றது. இவ்வாறு செய்வது சுப தேவதைகளுக்கு பிடிப்பதில்லை, ஆனால் அசுப தேவதைகளை இவ்வாறான செயல்கள் ஈர்த்து விடுகின்றன. சிலர் விரல் நகங்களை கடித்து நினைத்த இடத்தில் துப்பி விடுவார்கள். இவை மற்றவர்களின் கால்களில் வெளிப்படுவதால் உங்களுக்கு துரதிஷ்டம் மட்டுமே உண்டாகிறது.

- Advertisement -

அதுமட்டுமல்லாமல் ஒரு சிலர் இப்பொழுது நகத்தை அழகுபடுத்துகின்ற பெயரில் அவற்றை கத்தி போன்ற இரும்பு உலோகங்களை பயன்படுத்தி, நகங்களை தேய்த்து அழகு படுத்துகின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் நகத்தில் இயற்கையாகவே இருக்கும் ஒரு பளபளப்புத் தன்மை குறைந்துவிடுகிறது. இவை குறையக்குறைய நமது உடலின் ஆரோக்கியமும் குறைந்து கொண்டே வருகிறது.

nailshap

எனவே அவற்றை மிகவும் சுத்தமாக பராமரிக்க வேண்டும். அவற்றை இரும்பு ஆயுதங்கள் கொண்டு சேதப்படுத்த கூடாது. அது மட்டுமல்லாமல் கை, கால் விரல்களின் நகங்களில் அழுக்கு சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு நகங்களை மிகவும் அதிகமாக வளர விடாமல் சரிசமமாக வெட்டிவிட வேண்டும்.

blaind

அதையும் வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் வெட்டக்கூடாது. பிறந்த கிழமை மற்றும் சுபதினங்களிலும் நகம் வெட்டுவது என்பதை தவிர்த்து விட வேண்டும். வெட்டிய நகத்தை மற்றவர் கால் படாமல் ஓரமாகப் போட்டு வைக்க வேண்டும். நீங்கள் வெட்டி வெளியில் போடும் நகம் மற்றவர் கால்களில் படுமாறு இருந்தால் மறுஜென்மத்தில் பார்வையற்றவர்களாக பிறக்க வாய்ப்பு இருப்பதாக சில ஆன்மீக தகவல்கள் கூறுகின்றன.

- Advertisement -