இந்த 1 பொருளை ஒரே ஒரு முறை, கோவில் உண்டியலில் போட்டால் போதுமே! வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு வாழ்க்கையில் கஷ்டம் என்பதே வராது.

undiyal

உங்களுடைய வாழ்க்கையில் கஷ்டம் வருவதற்கு என்ன காரணமாக வேண்டுமென்றாலும் இருக்கலாம். ஜாதகரீதியாக பிரச்சனை, ஜாதகத்தில் உள்ள கிரக தோஷங்கள், அல்லது கெட்ட நேரத்தில் வரக்கூடிய பிரச்சனை, இப்படி என்று, இந்த பிரபஞ்சம் உங்களுக்கு எந்த வழியில் பிரச்சனையை கொடுத்தாலும் சரி, அந்தப் பிரச்சினையை தடுத்து நிறுத்தக் கூடிய ஒரு சக்திவாய்ந்த பரிகாரத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த பரிகாரத்தை வாழ்நாளில் ஒரே ஒருமுறை செய்து, இந்தப் பொருளை உண்டியலில் சேர்த்து விடுங்கள். உங்கள் வாழ்க்கையில் தீராத துன்பம், தீராத துயரம், தீராத மனவேதனை, பணக் கஷ்டம் வருவதற்கு வாய்ப்பே கிடையாது. அப்படி கஷ்டங்கள் வந்தாலும், அது சுலபமாக, தண்ணீரில் கரைத்த உப்பு போல கரைந்து போய்விடும்.

nagar

அப்படி என்ன சக்தி வாய்ந்த பரிகாரம் அது? நீங்க தெரிஞ்சுக்க வேணாமா? இந்த பரிகாரத்திற்கு ஒரு சிறிய அளவிலான நாகர் சிலை வேண்டும். இதை உங்களுடைய வசதிக்கு ஏற்ப தங்கத்தில் வாங்கிக் கொள்ளலாம். வெள்ளியில் வாங்கிக்கொள்ளலாம், செம்பு, பித்தளை எந்த உலகத்தில் வேண்டுமென்றாலும் வாங்கிக் கொள்ளலாம். சிறிய அளவில் இருக்கும் நாகர் சிலையை நல்ல நாள் கிழமை பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள்.

அந்த சிலையை உங்கள் வீட்டிற்கு கொண்டு வந்து, மஞ்சள் தண்ணீரால் அபிஷேகம் செய்து, பன்னீரால் அபிஷேகம் செய்து, பாலைக் கொண்டு அபிஷேகம் செய்து, நல்ல தண்ணீரில் கழுவி ஒரு சிவப்பு நிற சுத்தமான துணியில் வைத்து முடிச்சு போட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள். வாரம்தோறும் வெள்ளிக்கிழமையும், செவ்வாய்க்கிழமையும் உங்கள் வீட்டில் எப்படி பூஜை செய்தீர்களோ அதேபோல் பூஜை செய்து இந்த முடிச்சுக்கு தீப தூப ஆராதனை காட்டி வழிபாடு செய்ய வேண்டும்.

nagaraja

தொடர்ந்து 5 வாரம் வெள்ளிக்கிழமை செவ்வாய்க்கிழமை இந்த பூஜை முடியும் வரை, இந்த நாகர் சிலை உங்கள் வீட்டிலேயே இருக்கட்டும். இந்த நாகர் சிலை வீட்டில் இருக்கும் வரை நீங்கள் சுத்தபத்தமாக அசைவம் சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். பெண்களுக்கு இடையே வரும் மாத விலக்கு நாட்களை தவிர்த்துவிடுங்கள். அதைத் தவிர்த்துவிட்டு 5 வாரங்கள் கணக்கு வைத்துக் கொள்ளலாம்.

5 வாரங்கள் இந்த பூஜையை முடித்துவிட்டு உங்கள் வீட்டில் இருக்கும் நாகர் சிலையை எடுத்துக்கொண்டு போய், புகழ்பெற்ற ஒரு கோவில் உண்டியலில் சேர்த்து விடவேண்டும். திருப்பதி, பழனி, அறுபடை வீடுகளில் ஏதாவது ஒரு கோவில், அப்படி இல்லை என்றால் சமயபுரத்து மாரியம்மன் கோவில் இப்படியாக புகழ்பெற்ற அல்லது மிகவும் பழமையான ஏதாவது ஒரு கோவிலுக்கு, சென்று அந்த கோவில் உண்டியலில் இந்த நாகர் சிலையை சேர்த்துவிட வேண்டும்.

undiyal

அவ்வளவு தான். உங்களை பிடித்த கஷ்டங்கள் அனைத்தும் உங்களை பிடித்த தோஷங்கள் அனைத்தும் விலகியது என்று நினைத்துக் கொள்ளுங்கள். கண்ணுக்குத் தெரியாத எப்படிப்பட்ட ஜாதக ரீதியான பிரச்சனைகளுக்கும் ஒரு சுலபமான தீர்வு கொடுக்கும் பரிகாரம் தான் இது. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு முயற்சி செய்து பலன் அடைய வேண்டும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.