- Advertisement -

நாக சதுர்த்தி வழிபாடு

- Advertisement -

ஒருவருக்கு அவருடைய வயதிற்கு ஏற்றார் போல் நல்ல விஷயங்கள் நடக்க வேண்டும். அப்படி நடக்காமல் தடைப்பட்டிருந்தாலோ தாமதமானாலோ உடனே பலரும் ஏதாவது தோஷம் இருக்கிறதா? என்று பார்க்க சொல்வார்கள். அப்படி பார்க்கும்போது பலருக்கும் இருக்கக்கூடிய பொதுவான தோஷமாக திகழ்வதுதான் நாகதோஷம். இந்த நாகதோஷத்தை சரி செய்வதற்கு பல வழிபாடுகளும் பரிகாரங்களும் இருக்கின்றன. இருப்பினும் நாகசதுர்த்தி அன்று நாம் செய்யக்கூடிய வழிபாடு நாகதோஷத்தை நீக்கும் ஆற்றல் மிக்கதாக திகழ்கிறது. அந்த வழிபாட்டை எப்படி செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

நம்முடைய முன்னோர்கள் அவர்களுடைய காலத்தில் ஏதாவது ஒரு நாகத்தை துன்புறுத்தினாலோ அல்லது அடித்திருந்தாலோ நமக்கு நாகதோஷம் என்பது ஏற்படும். இதே போல் சில வம்சாவளியினருக்கு நாகசாபம் இருக்கும். அதனால் நாக தோஷம் ஏற்படலாம். மேலும் ராகு கேதுவின் பாதிப்பாலும் நாக தோஷம் ஏற்படலாம். இப்படி ஏதாவது ஒரு ரூபத்தில் நாகதோஷம் ஏற்பட்டு விட்டால் நம்முடைய வாழ்க்கையில் நடக்க வேண்டிய நல்ல காரியங்கள் தடைப்பட்டு நின்றுவிடும் அந்த தடையை நீக்க நாக தோஷத்தை நாம் நிவர்த்தி செய்ய வேண்டும். அதற்கு நாகசதுர்த்தி அன்று செய்யக்கூடிய வழிபாட்டை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி நாகசதுர்த்தி வருகிறது. அன்றைய தினம் நாம் நாகரை வழிபட வேண்டிய நேரமாக மூன்று நேரங்கள் இருக்கின்றன. காலை 7:35 முதல் 8:55 வரை, 10:35 முதல் 11.30 வரை, ராகு காலமான 1:30 முதல் 3:00 மணி வரை. இந்த மூன்று நேரங்களில் எந்த நேரம் உங்களுக்கு ஏதுவாக இருக்கிறதோ அந்த நேரத்தில் நீங்கள் வழிபாடு செய்யலாம். கோவிலுக்கு சென்றும் வழிபாடு செய்யலாம். வீட்டிலேயும் வழிபாடு செய்யலாம்.

கோவிலுக்கு சென்று வழிபாடு செய்பவர்களாக இருக்கும் பட்சத்தில் கோவிலில் இருக்கக் கூடிய நாகர் சிலையை வழிபாடு செய்ய வேண்டும். பொதுவாக நாக வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என்றால் ராகு காலமே மிகவும் சிறந்தது. அதனால் அந்த நேரத்தில் நாகர் சிலைக்கு பால், மஞ்சள் கலந்த தண்ணீரில் அபிஷேகம் செய்ய வேண்டும். அதிக அளவு பாலோ மஞ்சள் தண்ணீரோ தேவை கிடையாது இரண்டு ஸ்பூன் மட்டும் ஊற்றி கூட நாம் அபிஷேகம் செய்யலாம்.

- Advertisement -

இதில் முக்கியமான ஒன்று என்னவென்றால் நாம் அபிஷேகம் செய்யக்கூடிய அந்த பாலும் மஞ்சள் தண்ணீரும் பூமிக்கு சென்றடைய வேண்டும். அதாவது மண்ணில் இருக்கக்கூடிய நாகர் சிலைக்கு இந்த அபிஷேகத்தை செய்வது என்பது மிகவும் சிறப்பு. அப்படி செய்தால்தான் அந்தப் பாலையும் தண்ணீரையும் பூமி உறிந்து கொள்ளும். சிமெண்டு தரை போட்ட இடத்தில் இந்த அபிஷேகத்தை செய்தால் அந்த அபிஷேகம் செய்யப்பட்ட பாலும் தண்ணீரும் பிறருடைய பாதங்களில் படும் சூழ்நிலை உண்டாகும் என்பதால் அதை தவிர்த்துக் கொள்வது நல்லது.

இப்படி அபிஷேகம் செய்து முடித்துவிட்டு நாகர் சிலைக்கு மலர்களால் அலங்காரம் செய்து தீபம் ஏற்றி வைத்து கற்பூரம் ஏற்றி மனதார வழிபாடு செய்ய வேண்டும். “எங்களுடைய முன்னோர்களோ அல்லது நாங்களோ உங்களுடைய வம்சாவளியினரை ஏதாவது துன்புறுத்தி இருந்தால் அதை மன்னித்து எங்களுடைய குடும்பம் தலைதோங்க அருள் புரிய வேண்டும்” என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். விரதம் இருக்க இயன்றவர்கள் விரதம் இருக்கலாம்.

- Advertisement -

கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய முடியாது என்பவர்கள் வீட்டிலேயே இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். வீட்டில் நாகர் சிலை இருந்தால் நாகர் சிலைக்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்யலாம். அப்படி நாகர் சிலை இல்லை என்பவர்கள் எந்த தெய்வப்படத்தில் நாகர் இருக்கிறாரோ அந்த படத்திற்கு முன்பாக பாலை நெய்வேத்தியமாக வைத்து வழிபாடு செய்து விட்டு அந்த பாலை எடுத்து கால் படாத மண்பாங்கான மரத்தடியில் ஊற்றி விட வேண்டும். அப்படி மரத்தடி இல்லாத பட்சத்தில் வீட்டில் தொட்டியில் வளர்க்கக்கூடிய செடிகளில் கூட அந்த பாலை ஊற்றி விடலாம்.

இதையும் படிக்கலாமே:ஆடிப்பூரம் அன்று கோவிலுக்கு வாங்கி கொடுக்க வேண்டிய பொருட்கள்.

இப்படி செய்வதன் மூலம் நாக தோஷம் நீங்கி வாழ்க்கையில் தடைபட்டிருக்க கூடிய நன்மைகள் அனைத்தும் நடைபெறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்